RSS

Tag Archives: இல்லம்

“காதல் கடிதம்”

"காதல் கடிதம்"

உன் மேல் உதட்டிற்கு கீழாக 
தேன் கன்னத்திற்கு ஓரமாக
எனது கண்விழி போல மச்சம்
அதுவே என் காதலின் உச்சம்.
உன் பதிலை நோக்கி…
 
என் கண்ணில் உன்னை கண்ட நொடி,
என்னுள் உன் மீது காதல் கொண்டேன்.
காதலைக் கண்டவன் கவிஞன் ஆவான்.
நானோ, கயவன் அல்லவா ஆனேன்-
உன் இதயத்தை திருடி.
உன் பதிலை நோக்கி…
 
ஏனடி என் கண்ணில் நீ விழுந்தாய்
என் இதயம்  அல்லவா வலிக்குதடி !!
என் நெஞ்சம் என்ன உனது இல்லமா?
அழகாய் அமர்ந்து வெளியே வர மறுக்கிறாய்.
ஏன்? என்னை இதமாய் இம்சிக்கவா?
உன் பதிலை நோக்கி…
 
ஒவ்வொரு ஆணுக்குள்ளும் “காதல்” எனும் தீப்பொறி இருக்கும்
அதனை பெண்மை எனும் தென்றல் தீண்டும் பொது
எரிமலையாய் வெடிக்கும்.
ஆம், உன்மீது பட்டு வரும் காற்று கூட
எனக்கு தென்றலாய் தோன்றுகிறது.
உன் பதிலை நோக்கி…
 
என் உதிரத்தை உறிஞ்சியவளே,
நீ அமிலமா? அமிர்தமா?
என்னுள் தோன்றவில்லை நீ எதுவென்று?
அமிலமெனில் அன்பாய் கொன்றுவிடு,
அமிர்தமெனில் அழகாய் வாழவிடு… உன்னோடு.
உன் பதிலை நோக்கி…
 
உனைக் காணாத ஒவ்வொரு நாளும்
உயிறற்ற உடலாய் திரிகிறேன்.
உனைக் கண்ட மறுகணமே
கடவுளையும் விஞ்சுகிறேன்.
என்னைக் கடவுளாக்குவதும்,
காட்டில் இடுவதும் உன் பதிலே…
உன் பதிலை நோக்கி…
 
உன் பதிலை என்னிடம் கூறினாலும்
என் இதயம் தான் அதனை நோக்குதடி.
அதனை துடிக்க வைப்பதும்,
தூங்க வைப்பதும் உன் பதிலே…
உன் பதிலை நோக்கி…
 
 
 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,