RSS

Tag Archives: வெற்றி

“அடையாளம்”

"அடையாளம்"
கடைசி ஆண்டின்
கல்லூரி கவிதைப்போட்டி.
கடந்தமுறை வென்றதால்
கர்வத்துடன் கலந்துகொண்டேன்.
 
தலைப்பு தந்த
கால்மணி நேரத்திற்குள்
கவிதை சொல்ல வேண்டும்.
இதுதான் நிபந்தனை.
 
அனைவரும் ஆவலாய்
எதிர்பார்க்க
அதிர்வாய் வந்தது 
“அடையாளம்”-எனும் தலைப்பு.
 
அடுத்த நொடியில்
அழகாய் சொன்னேன்
“அப்பா”.
Advertisements
 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

“மௌனம்”

 

 

 

 

 

 

 

 

வெற்றியின் களிப்பின் போது
மௌனம் என் கடிவாளம்.

மடையிலா மகிழ்ச்சியின் போது
மௌனம் என் அளவுகோல்.

துயரத்தில் துவளும் போது
மௌனம் என் மருந்து.

உரிமையுள்ளோர் உத்தரவிடும் போது
மௌனம் என் சம்மதம்.

தனிமையில் தள்ளாடும் போது
மௌனம் என் ஊன்றுகோல்.

இதயத்தில் சுமைகூடும் போது
மௌனம் என் சுமைதாங்கி.

உள்ளத்தை உறுத்தும் போது
மௌனம் என் வடிகால்.

காதலியின் உரையாடலின் போது
மௌனம் என் மொழி.

உண்மையானோர் பிரியும் போது
மௌனம் என் வலி.

ஏமாற்றம் ஏற்படும் போது
மௌனம் என் சிந்தனை.

எதிரிகள் ஏளனம்செய்யும் போது
மௌனம் என் கேடயம்.

இன்னல்கள் எதிர்கொள்ளும் போது
மௌனம் என் ஆயுதம்.

மண்ணுள் மறையும் போது
மௌனம் என் மரணம்.

ஒரு வார்த்தை சொல்லும்
ஒராயிரம் விளக்கம் மௌனம்.

வலிமைமிக்க மௌனம்.
வன்முறைமிக்க மௌனம்.

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

“சித்திரை திருநாள்”

ஆதவன் அனலாய் ஆர்ப்பரிக்க
சிங்கம் வாழ்தரையில் சித்திரை பூக்க
உழைப்பால் உயரும் தமிழரின் புகழ் பெருகட்டும்.

சிப்பி அனைத்திலும் முத்திராது எனினும்
தமிழன் முத்திரை பதிக்கா இடமுண்டோ?

திரைக் கடல் ஓடி திரவியம் தேடிக் கொணர்ந்து
எந்தன் தாய்மண்ணை தங்கமாய் மாற்றுவோம்.

எந்நாடு சென்றாலும், எத்தனை மொழி பயின்றாலும்,
எந்தன் தாய்மொழி மறவோம்.

வள்ளுவனின் கூற்றாய், சோழரினின் வம்சமாய்,
ஒளவை-வாக்காய் எங்கள் வரப்பை உயர்த்துவோம்.

விடிய மறுத்து இப்புவி நின்றாலும்,
விண்ணையும் பிளந்து விடித்திருவோம்.

பொன் வேண்டாம், பொருள் வேண்டாம்,
பலம் வேண்டாம், படை வேண்டாம்,
மனிதம் போற்றும் மனிதர் போதும்,
என் இனம் என்றும் வெற்றி வாகை சூட…

என் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

 

குறிச்சொற்கள்: , , , , ,

 
%d bloggers like this: