RSS

Tag Archives: வாழ்க்கை

“பிறப்பு-வாழ்க்கை-இறப்பு”

பிறப்பு-வாழ்க்கை-இறப்பு

 

என் கவிதையின்
முதல் வரி
“பிறப்பு”.

தாங்கள் நினைப்பது போல்
கடைசி வரி
“இறப்பு”.

இடைப்பட்ட வார்த்தைகளின்
நிரப்பே
“வாழ்க்கை”.

 

குறிச்சொற்கள்: , , , , , , , ,

“எதிரி”

 "எதிரி"


எதிரிகளே இல்லை என்றால்
எப்படியாவது உருவாக்கிகொள்.
என்றாவது ஒரு நாள்
என்னடா வாழ்க்கை இது
என எண்ணத் தோன்றும்.
எண்ணத்தில் எதிரிகளை ஏந்திக் கொண்டால்
எதிர் நீச்சலை எளிதாய் கற்றுக் கொள்வாய்.
எதை எதையோ காரணம் காட்டி  வீழ்வதை விட
எதிரிகளை வீழ்த்த வாழத் தோன்றும்.
எதிரிகளை எதிரியாய் பார்க்காதே!
என்றும் ஏற்றத்தின் உந்து சக்தியாய் பார்!

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“மை”

சொல்லுவது உண்மை,
இனமோ பெண்மை,
இறந்தது ஆண்மை,
வண்ணத்தின் ஏழ்மை,
உடையில் வெண்மை,
அழகின் பகைமை,

வயதோ இளமை,
உடலோ வளமை,
பட்டுப்போன செழுமை,
பாவமிந்த பதுமை,
பிரிக்கப்பட்ட பன்மை,
ஒதுக்கப்பட்ட ஒருமை,

சகுனத்தின் உவமை,
வலிகளின் உடமை,
காலத்தின் கொடுமை,
கனவுகளும் கருமை,
காயங்களின் முதுமை,
புறக்கணிப்பதா நேர்மை,

உடைபட்ட உரிமை,
பறிபோன தலைமை,
வாலிபத் தன்மை,
வாட்டும் தனிமை,
வீழ்ந்திட்ட வலிமை,
இறுகிய இனிமை,

மரபுகளின் கயமை,
வாழ்க்கையே வெம்மை,
கொல்லுதடா வெறுமை,
உணர்விலா பொம்மை,
கிடைக்குமா தாய்மை,
மரணமே மகிமை,

விடியாத கிழமை,
அணியாத விழிமை,
இழந்திட்ட வன்மை,
விதவையெனும் அடிமை,
போதுமடா இம்மை,
வேண்டுமா மறுமை?

சமூகமோ பழமை,
இதுவே நிலமை,
எதற்கிந்த பெருமை?
போதுமிந்த பொறுமை,
களைவது கடமை,
அஞ்சுவது மடமை,
மறுமணமே மேன்மை,

எண்ணுவது எளிமை,
களம்வெல்வது கடுமை,
தயக்கங்கள் சிறுமை,
புரிந்திடுவோம் புதுமை,
வெல்லட்டும் வாய்மை,
மலரட்டும் மென்மை.

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“அகதி”

மரணித்துப்  போயிருக்கலாம்
உயிர் பிடித்து
அகதியாய் வாழ்வதற்கு.
உரிமைக்காக போர் தொடுத்து
உள்ள
உறைவிடமும் பறிக்கப் பட்டோம்.
ரணங்களைக் கண்டு கண்டு
ரௌத்திரம் கற்றுக் கொண்டோம்.
கூரைகள் இல்ல விட்டாலும்
கூட்டுக் குடும்பமாய் வாழக்கற்றோம்.
முள்வேலிக்குள் முடக்கப்பட்ட
முடவர்களாய் முகம் காட்டுகிறோம்.
படுத்து உறங்க பாய்கள் வேண்டோம்
பதுங்கி இறக்க பாடை கேட்கிறோம்.
நாங்கள்
வதைக்கவா விதைக்கப்பட்டோம்.
அல்லது
வஞ்சிக்கவா வாழ்க்கைப்பட்டோம்.
இது என்ன
இயற்கையின் விதியா?
இல்லை அந்த
இறைவனின் பிழையா?

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“திருமண வாழ்த்து”

இதயங்கள் இடம் மாற
இன்பங்கள் இல்லறத்தில் சூழ
வாழும் வரை வாழ்த்திடுமே
நீவீர் வாழ்ந்திடவே.

இன்பம் மட்டும் வாழ்க்கையல்ல
இன்னல்கள் இருவிழி கண்டாலும்
ஈர விழிகளை துடைத்திடுங்கள்
புன்னகை பூத்து நில்லுங்கள்
ஊடல்களை உண்டாக்கி மறந்திடுங்கள்
ஆசைகளை அளவாய் அட்டவனையிடுங்கள்
கனவுகளை களவாடிக் காட்சியுருங்கள்
கருத்தொருமித்து காதல் செய்யுங்கள்
உணர்வுகளை உயிராய் மதித்திடுங்கள்
உரிமைகளுக்கு உண்மையாய் வழிவிடுங்கள்
மனதொருமித்து மகிழ்ச்சியாய் வாழ்ந்திடுங்கள்.

வேற்றுமை வென்று
ஒற்றுமை வளர்த்து
ஐயத்தை அழித்து
நோயை ஒழித்து
மாற்றம் புகுத்தி
ஏற்றம் கண்டு
ஏமாற்றம் இன்றி
வெற்றி வாகை சூடுங்கள்.

வார்த்தையில் வாழ்வை தொலைக்காதீர்,
அன்பு எனும் ஆன்மாவுக்கு
உங்கள் ஆயுளை அர்பணியுங்கள்.

நீ வாழி
நீடு வாழி
நீடுழி வாழி

குலம் சிறக்க வாழி
நலம் குறையா வாழி
வளம் பெருக வாழி
புகழ் நிலைக்க வாழி

 

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

“வாழ்க்கை”

வாழ்க்கை வாழ்ந்தவனுக்கு சாதனை

ஆனால் வாழ்பவனுக்கோ சோதனை

அச்-சோதனை கண்டு கலங்கிவிடாதே

தோழமை உண்டு மறந்துவிடாதே…

 

குறிச்சொற்கள்: , ,

 
%d bloggers like this: