
மணம் முடிந்த பின்பு
மனம் மாறிப் போனாய்…
முகமற்றோரின் வசவொலியில்
மொழி மறந்து நின்றாய்…
மூடநம்பிக்கை என்றாலும் கூட
மூத்தோர் சொற்க்கேட்டாய்…
மௌனத்தின் கேள்விகளுக்கு
மருத்துவத்தில் விடை தேடினாய்…
மாதவிடாய் மாறிய காலங்களில்
மரத்தடியில் மன்றாடினாய்…
மாதம் தள்ளிப் போனதும்
மகிழ்ச்சியில் திண்டாடினாய்…
முடி முதல் அடி வரை
மாற்றம் பல கண்டாய்…
முகத்தின் முகவரி மாற
முழுமதியாய் உ(க)ருக்கொண்டாய்…
மரணவலி தரும் என்றாலும் கூட
மயக்கம் அதில் கொண்டாய்…
மிகைப்படுத்தி சொல்லவேண்டுமெனில்
மன்னவன் எனைக்கூட இதில் மறந்தாய்…
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
குறிச்சொற்கள்: உரு, கரு, கர்ப்பிணி, காலம், கேள்வி, திண்டாட்டம், மகிழ்ச்சி, மணம், மனம், மன்னவன், மன்றாடல், மயக்கம், மரணவலி, மரத்தடி, மருத்துவம், மாதம், மாதவிடாய், மாற்றம், மிகை, முகமற்றோர், முகம், முகவரி, முடி முதல் அடி வரை, முழுமதி, மூடநம்பிக்கை, மூத்தோர், மொழி, மௌனம், வசை, விடை