RSS

Tag Archives: முகம்

“கர்ப்பிணி”

Karpini
மணம் முடிந்த பின்பு
மனம் மாறிப் போனாய்…
முகமற்றோரின் வசவொலியில்
மொழி மறந்து நின்றாய்…
மூடநம்பிக்கை என்றாலும் கூட
மூத்தோர் சொற்க்கேட்டாய்…
மௌனத்தின் கேள்விகளுக்கு
மருத்துவத்தில் விடை தேடினாய்…
மாதவிடாய் மாறிய காலங்களில்
மரத்தடியில் மன்றாடினாய்…
மாதம் தள்ளிப் போனதும்
மகிழ்ச்சியில் திண்டாடினாய்…
முடி முதல் அடி வரை
மாற்றம் பல கண்டாய்…
முகத்தின் முகவரி மாற
முழுமதியாய் உ(க)ருக்கொண்டாய்…
மரணவலி தரும் என்றாலும் கூட
மயக்கம் அதில் கொண்டாய்…
மிகைப்படுத்தி சொல்லவேண்டுமெனில்
மன்னவன் எனைக்கூட இதில் மறந்தாய்…
 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“ஆண் பார்த்தல்”

88a-AanPaarthal

படபடக்கும் கைகள்,
தடுமாறும் கால்கள்,
அலைபாயும் கண்கள்,
வறட்சியாய் உதடுகள்,
குளறும் வார்த்தைகள்,
இடமாற தவிக்கும் இதயம்,
பதில்கேக்க துடிக்கும் காதுகள்,
முடிவை எதிர்நோக்கும் முகம்,
கனவுகளுடன் காத்திருக்கும் உயிர்…

ஆம், ஆ(பெ)ண்-பார்த்த போது
அடியேனின் அனுபவம்.

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“அகதி”

மரணித்துப்  போயிருக்கலாம்
உயிர் பிடித்து
அகதியாய் வாழ்வதற்கு.
உரிமைக்காக போர் தொடுத்து
உள்ள
உறைவிடமும் பறிக்கப் பட்டோம்.
ரணங்களைக் கண்டு கண்டு
ரௌத்திரம் கற்றுக் கொண்டோம்.
கூரைகள் இல்ல விட்டாலும்
கூட்டுக் குடும்பமாய் வாழக்கற்றோம்.
முள்வேலிக்குள் முடக்கப்பட்ட
முடவர்களாய் முகம் காட்டுகிறோம்.
படுத்து உறங்க பாய்கள் வேண்டோம்
பதுங்கி இறக்க பாடை கேட்கிறோம்.
நாங்கள்
வதைக்கவா விதைக்கப்பட்டோம்.
அல்லது
வஞ்சிக்கவா வாழ்க்கைப்பட்டோம்.
இது என்ன
இயற்கையின் விதியா?
இல்லை அந்த
இறைவனின் பிழையா?

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“மழை”

இயற்கை எனும்
வாலிபக் கலைஞனின்
தூரிகைச் சிதறல்கள்.

கார்மேகம் களவியலில் கருவுற்று
பெற்றெடுத்த
வெண்முத்துப் பிள்ளைகள்.

காரிருள் கறையை நீக்கி
வெண்மொட்டு மேகமாய்
மாற போடப்படும் ஒப்பனை.

வான்வெளியின் வர்ணஜாலம்.
வான்முகிலின் நிராகரிப்பு.

இணையா வானையும்-மண்ணையும்
இணைக்கும் நீர்க்கயிறு.

உன்னால் கிறுக்கப்பட்ட
கிறுக்கலாய்
மின்னல்.

உனக்கான எச்சரிக்கை
விளக்காய்
வானவில்.

வான் மேகத்தின் எச்சம்
செம்மண் தரையின் அமிர்தம்.

வான் அழுகின்ற போது
எங்கள் வாழ்க்கை குளிர்கிறது.

வடிகட்டி போகும் உனை விடுத்து
வழிமிஞ்சி நிற்பதை பங்கு பிரிக்கிறோம்.

விரயமாகும் உனை விதைத்திட்டு
விவசாயின் விதையை முத்தாய் மாற்றிடு.

கருவேலங் காட்டுக்கும் கஞ்சி காட்டுவான்
கண்ணீரையும் கரைக்கும் இந்த கயவன்.

இயற்கையோடு இதயத்தை இணைக்க
உன்னில்
நித்தம் நனைய நினைக்கிறேன்.

ஆயிரம் ஆனந்தம் அளித்தாலும்
பல முகம் பிழையாக்கும் மழை.

இந்த நிறமற்ற மழை
பலருக்கும்
பிழையாகும் மழை.

 

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

 
%d bloggers like this: