கோடை மழை பெய்யுமென
கோவணங் கட்டி காத்திருக்க,
கோபம் கொண்ட கார்மேகத்தை
கொளுத்தும் சூரியன் கேட்டதாம்,
நதி வற்றிய கோபமா?
மரம் வெட்டிய கோபமா?
காற்று கெட்ட கோபமா?
கானகம் அழித்த கோபமா?
வயல் குறைந்த கோபமா?
நிலம் விற்ற கோபமா?
மணல் தின்ற கோபமா?
இனம் கொன்ற கோபமா?
கார்மேகம், கனிவுடன் சொன்னதாம்
“உறுப்புகளை அறுத்து,
உயிர் எடுத்த பின்பு
உதவா கோபம் எதற்கு?”.