RSS

Tag Archives: நம்பிக்கை

“தன்னம்பிக்கை”

 

விழுவதெனில் விதையாய் விழு
எழுவதெனில் எரிமலையாய் எழு
கருவிலேயே களம்வென்றவன் நீ
கவலைகளை கைக்குட்டையாய் எறி
மகிழ்ச்சியை மனதோடு சேர்
இறக்கத்திலும் இதிகாசம் படை

கவலையில் கண்களை கசக்காதே
கடைசிவரை களம் கண்டிடு
கஷ்டத்திலும் கலகலப்பை மறவாதே
கோழைகளுடன் கைகோர்த்து விடாதே
பாறை என்று பயம் கொள்ளாதே
பாய்ந்து இடுக்குகளில் முளைத்திடு

நிழலுக்கு ஒப்பனையை நிறுத்து
நிஜத்துடன் போராடிப் பழகு
தோல்வி எதுவாயினும் ஏற்றுக்கொள்
தோள்களை வீரத்துடன் தட்டிக்கொள்
துணிவே துணை எனக்கொள்
துணிந்தபின் தூக்குமேடையும் துச்சம்கொள்

உதிர் காலத்தில் உயிர்விட்டால்
வசந்த காலத்தில் வாழவழியேது?
கடிகாரம் சிந்தும் நேரங்களை
நம்பிக்கையுடன் தேடு
கண்ணீர் துளிகளையும்
தண்ணீராய் மாற்றிடு

வெற்றியின் களிப்பு விடியும்வரை
தோல்வியின் மதிப்போ வீழும்வரை
தோல்வியில் ஊரை நீ அறிந்திடு
வெற்றியில் ஊரே உனை அறிந்திடும்.

 

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , ,

“என்னுடன்”

அவள், என் மீது சாய்ந்தாள்.
மீண்டும் பிறந்தேன்
நான் மீண்டும் பிறந்தேன்
பூலோகம் புதிதானது.

அவள், என் மீது சாய்ந்தாள்.
ஆயிரம் யானைகளின் பலம்
எறும்புகளின் சுறுசுறுப்பு
தேனின் சுவை
தென்றலின் இனிமை

அவள், என் மீது சாய்ந்தாள்.
ஆம் – அமைதியாகச் சாய்ந்தாள்.
அவளது சுமைகளை மறக்க…
எனது கடமையை உணர்த்த…

அவள், என் மீது சாய்ந்தாள்.
ஆம் – நம்பிக்கையுடன் சாய்ந்தாள்.
எதிர்காலக் கனவுடன் !
எதிர்கொள்ள என்னுடன் !

 

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

 
%d bloggers like this: