ஏன் தேடுகிறோம்,
எதை தேடுகிறோம்,
எங்கு தேடுகிறோம்,
எதற்கு தேடுகிறோம்,
எப்படி தேடுகிறோம்,
எப்போது தேடுகிறோம்,
என்பதை தவிர்த்து
ஒன்று கிடைக்கும் வரை தேடுகிறோம்,
கிடைத்த பின் அடுத்ததை தேடுகிறோம்.
நிம்மதி மறந்து
நித்திரை துறந்து
நித்தம் தேடுகிறோம்.
தேடல் மட்டும் திகட்டி விட்டால்
தேகம் விட்டு ஜீவன் போய்விடும்.
தேடல் தொடரட்டும்…