மூத்தவளாய் நீ பிறந்து
முதுகிலே எனைச் சுமந்தாயே
பக்கத்து பள்ளிக்குகூட
கைப்பிடித்து செல்வாயே
ஆசை மிட்டாய்-யை
பாதி கடிச்சு கொடுப்பாயே.
அடித்து வைத்து அழும் போது
அடிக்கமாட்டேனென்று பொய் சூளுரைப்பாயே.
உரிமையாய் சண்டைபோட்டு
உண்மையாய் உறவாடுவாயே.
நீ வாங்கிய சம்பளத்தை
நான் படிக்க பரிசளித்தாயே.
அடையாளம் தேடித்திரிந்த காலத்தில்
ஆறுதலாய் துணை நின்றாயே.
கண்கலங்கி நான் நின்றால்
கை கொடுக்க தவறாயே
சோதனை கண்ட நெஞ்சை
சாதனை காணச் செய்தாயே
பெற்றெடுத்த உன் பிள்ளைக்கு
பெருங்காவல் நான் என்றாயே
மறுஜென்மம் உண்டென்றால்
மறவாமல் உடன் பிறப்பாய்.
ஆயிரம் உலகம் சொன்னாலும்
அடுத்த அன்னை நீதானே!