RSS

Tag Archives: காரணம்

“களவானி”

Kalavani

 

காலடிச் சத்தம் கேட்டு
கணவனைக் கண்டறியும்
களவானி.

கணிப்பொறியிலோ, கைபேசியிலோ
காலம் கழிக்கும்
கலைவாணி.

கடைக்கண் பார்வையிலேயே
கட்டளைகளை கடத்திடும்
காரியவாதி.

கதிரவன் உதித்தபின்பும்
கண்விழிக்க காரணம்தேடும்
கடமைக்காரி.

காய்கறி இல்லையென்றாலும்
கடுகிலே சமைத்திடும்
கைகாரி.

கனவையும்,கண்ணீரையும்
கவலையின்றி வெளிப்படுத்தும்
கன்னிகை.

காதலையும், காமத்தையும்
கணைகளாய் தாக்கம்
கவிதை.

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“எல்லைக்கோடு”

எல்லைக்கோடு
வறுமைக்கோடு காரணமாய்
எல்லைக்கோடு மறந்து
கடல்தாண்டி மீன்பிடித்தோம்.
கைதாகி காயம்பட்டோம்.
இனிமேல்,
மீன்களுக்கும் கற்றுக்கொடுப்போம் 
எல்லைக்கோடு.
 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

“எதிரி”

 "எதிரி"


எதிரிகளே இல்லை என்றால்
எப்படியாவது உருவாக்கிகொள்.
என்றாவது ஒரு நாள்
என்னடா வாழ்க்கை இது
என எண்ணத் தோன்றும்.
எண்ணத்தில் எதிரிகளை ஏந்திக் கொண்டால்
எதிர் நீச்சலை எளிதாய் கற்றுக் கொள்வாய்.
எதை எதையோ காரணம் காட்டி  வீழ்வதை விட
எதிரிகளை வீழ்த்த வாழத் தோன்றும்.
எதிரிகளை எதிரியாய் பார்க்காதே!
என்றும் ஏற்றத்தின் உந்து சக்தியாய் பார்!

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“காதல் வாழ்க”

கவிஞன் என்றதும்
காதல் தோல்வியா? – என்று தான் அடுத்த கேள்வி.
கவிஞர்கள் காதலித்து தோற்றுவிட்டார்களா? – இல்லை
காதலித்து தோற்றதால் கவிஞர்களாக்கப்பட்டார்களா?
கனவுகள் சுமக்கும் வயதில் காதலைக் கண்டதால்
கவிதை வடித்து காவியம் படைக்கிறார்கள்.
கல்லறைக் காதல் என்றாலும் கடைசிவரை
கவிதைக்குள்ளே காதல் வளர்க்கிறார்கள்.
காரணம் பலவகைப் பட்டாலும்
கவிஞன் என்று ஓர்குலப் படுத்திய
காதல் வாழ்க.

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

“பெண் பார்த்தல்”

அதிகாலையில் எழுந்து
ஆறுமுறை குளித்து
பத்துமுறை பல்துலக்கி
பாதரசம்தேய உடைமாற்றி
சீராய் தலைசீவி
நல்ல சகுனம் பார்த்து
சொற்ப சொந்தங்களுடன்
பெண் பார்க்க சென்றேன்.

ஊரின் ஓரமாய் ஒத்தவீடு
பார்பதற்கு அழகான ஓட்டுவீடு
பாதையிலே காத்திருந்த தந்தை
முற்றத்திலே வரவேற்ற அன்னை
ஒளிந்து,ஒளிந்து பார்க்கும் தங்கை
ஓரக்கண்ணால் முறைக்கும் தம்பி
ஓயாமல் ஓடும் பாட்டி
தன்கதை சொல்லும் தாத்தா
ஓரமாய் ஒதுங்கிய பூனை
ஓவ்வொன்றும் தனிக் கவிதை.

என்கவிதை எங்கே? என்ற
ஏக்கமும், எதிர்பார்ப்புடனும் நான்
படபடப்பையும், பயத்தையும் வெளிக்காட்டாமல்
வீராப்பாய் அமர்ந்திருந்தேன்.
எங்கிருந்தோ ஒரு குரல்,
“ஏம்பா! பொண்ண கூப்பிடறது!”
சொன்னவன் தெய்வமானான்.

சின்ன இடை கொண்டு
அன்ன நடை நடந்து
தேநீருடன் தேவதை வந்தாள்.
பச்சை நிற பட்டுடுத்தி
கருப்பாய் கலையாய் இருந்தாள்.
எந்த நிறம் இருந்தென்ன?
எல்லா நிழலும் கருமைதானே!.

வெட்கம் வேடிக்கை பார்க்க
நாணம் என்ன விலை?
என்று கேட்டு விட்டு,
கள்ளப் பார்வையில் ஒரு
சின்னச் சிரிப்பை தந்தாய்.
அந்த ஒரு நிமிடப் பார்வை
ஓராயிரம் கதை சொன்னன.

மறக்க முடியாத தருணம்
யாரிடம் இல்லாத வசீகரம்
முன் எப்போதுமில்லாத உணர்வு
வாழ்வு முழுமையடைந்த நிம்மதி
எனைக்கென பிறந்தவளை,
எப்படியோ பார்த்துவிட்ட பரவசம்.

அன்று
நீ விட்டுச் சென்ற கனவுகளை
மட்டும்
பற்றிக் கொண்டு வாழப் பிடிக்கிறது.
நித்தம்,நித்தம் நீங்கா கனவுகளுடன்…
நான்,
தொலைந்து தான் போய்விட்டேன்.
தொடர்ந்து தேடுகிறேன்
தொலைந்ததை மீட்ட அல்ல
தொலைத்ததின் காரணம் காண…

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

 
%d bloggers like this: