காலடிச் சத்தம் கேட்டு
கணவனைக் கண்டறியும்
களவானி.
கணிப்பொறியிலோ, கைபேசியிலோ
காலம் கழிக்கும்
கலைவாணி.
கடைக்கண் பார்வையிலேயே
கட்டளைகளை கடத்திடும்
காரியவாதி.
கதிரவன் உதித்தபின்பும்
கண்விழிக்க காரணம்தேடும்
கடமைக்காரி.
காய்கறி இல்லையென்றாலும்
கடுகிலே சமைத்திடும்
கைகாரி.
கனவையும்,கண்ணீரையும்
கவலையின்றி வெளிப்படுத்தும்
கன்னிகை.
காதலையும், காமத்தையும்
கணைகளாய் தாக்கம்
கவிதை.