Tag Archives: கடல்
“எல்லைக்கோடு”
வறுமைக்கோடு காரணமாய்
எல்லைக்கோடு மறந்து
கடல்தாண்டி மீன்பிடித்தோம்.
கைதாகி காயம்பட்டோம்.
இனிமேல்,
மீன்களுக்கும் கற்றுக்கொடுப்போம்
எல்லைக்கோடு.
“நானும் காதலிப்பேன்”
நானும் காதலிப்பேன்
காதலையும் காமத்தையும் பிரிக்க முடியுமானால்…
நானும் காதலிப்பேன்
கற்பனைகளும் கனவுகளும் தோன்றா விட்டால்…
நானும் காதலிப்பேன்
காலமும் கடல்அலையும் கரையாமல் இருந்தால்…
நானும் காதலிப்பேன்
கவலையும் கண்ணீரும் காணாமல் போனால்…
நானும் காதலிப்பேன்
கடலையும் கடற்கரையும் தீர்ந்து விட்டால்…
நானும் காதலிப்பேன்
கண்களும் மௌனமும் பேசாமல் இருந்தால்…
உண்மையைச் சொல்ல வேண்டுமானால்,
நானும் காதலிப்பேன்
என்னையும் காதலிக்க ஒரு “பெண்” கிடைக்குமானால்…