RSS

Tag Archives: ஏழை

“நாங்கள்”

கணிப்பொறியில் கலப்பை பிடித்து களைத்தவர்கள் – நாங்கள்
ஏசிக் காற்றிலும் ஏக்கக்காற்று விடுபவர்கள் – நாங்கள்
தவணை முறையில் தாம்பத்தியம் நடத்துபவர்கள் – நாங்கள்
தண்ணீருக்குள் அழும் கண்ணீர் விடாதவர்கள் – நாங்கள்
வாசனைப் பூச்சுக்களில் வாழ்-நாட்களை வாழ்பவர்கள் – நாங்கள்
உதட்டுச் சாயத்தில் உண்மையை மறைப்பவர்கள் – நாங்கள்
கைப்பேசியில் காதலியின் கன்னக்குழி நனைப்பவர்கள் – நாங்கள்
இருக்கையிலும் இறுக்கத்துடன் இயல்பாய் இருப்பவர்கள் – நாங்கள்
தொலைந்த வாழ்வை தொலைபேசியில் தொடர்பவர்கள் – நாங்கள்
திரவியம் தேட திசைமாறித் திரிபவர்கள் – நாங்கள்
நழுவிடும் நண்பர்களாய் நடித்துப் பழகியவர்கள் – நாங்கள்
மாதக்கடைசியுடன் மல்லுக்கட்டும் மண்ணின் மைந்தர்கள் – நாங்கள்
முதலீடு போடாத வெளிநாட்டின் வேலைக்காரர்கள் – நாங்கள்
இழப்பீடாய் இனிய இளமையை இழந்தவர்கள் – நாங்கள்
அறையப்பட்ட சிலுவைகளை அன்போடு சுமப்பவர்கள் – நாங்கள்
இழப்பில் சுகம் காணும் இறக்கமிலா சூழ்நிலைவாதிகள் – நாங்கள்
உண்மையில் ஏங்கும் ஏழைகளாய் நாங்கள்…?

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“பத்தினி”

சம்பாதிக்க ஆயிரம் வழியாம்.
ஆம். உண்மை தான்.

யாருக்கு…?
பணம் படைத்தவனுக்கும், படித்தவனுக்கும்.

படிக்காத ஏழைக்கு…?

ஆண் எனில், பிறர் வீட்டு சுவர் குதிப்பான்.
பெண் எனில், தன் வீட்டு படி கடப்பாள்.
இங்கு பலம் பார்த்து வினை மாற்றம் பெற்றது.

பலர் ஆசை நிறைவேற
தன் ஆசை துறந்தவள் “பத்தினி”-தானே?

 

குறிச்சொற்கள்: , , , ,

 
%d bloggers like this: