RSS

Tag Archives: உயிர்

“மணநாள் வாழ்த்து”

 

MananaalValthu

உணர்வினை மதித்து
உண்மையாய் வாழ்வோம்…
உரிமைகளுக்கு இடம்தந்து
உயிர்ப்போடு வாழ்வோம்…
வஞ்சகம் இல்லாமல்
வளமாய் வாழ்வோம்…
கவலைகளை கலைந்து
கைகோர்த்து வாழ்வோம்…
இருப்பதை வைத்து
இனிமையாய் வாழ்வோம்…
இலக்கண இல்லறமாய்
இயற்கையோடு வாழ்வோம்…
அளவோடு பெற்று
அறிவோடு வாழ்வோம்…
அகிலம் போற்ற
அன்பாய் வாழ்வோம்…

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

“ஆண் பார்த்தல்”

88a-AanPaarthal

படபடக்கும் கைகள்,
தடுமாறும் கால்கள்,
அலைபாயும் கண்கள்,
வறட்சியாய் உதடுகள்,
குளறும் வார்த்தைகள்,
இடமாற தவிக்கும் இதயம்,
பதில்கேக்க துடிக்கும் காதுகள்,
முடிவை எதிர்நோக்கும் முகம்,
கனவுகளுடன் காத்திருக்கும் உயிர்…

ஆம், ஆ(பெ)ண்-பார்த்த போது
அடியேனின் அனுபவம்.

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“பிரியாவிடை”

பிரியாவிடை

கருவறை வேறுபட்டாலும்
கல்லூரியில் ஒன்றானோம்.
பாலின பாகுபாடின்றி
பார்போற்ற பழகினோம்.
தனிவுடமை நீக்கி
பொதுவுடமை போதித்தோம்.
நட்பிலே உறவாடி
நாட்களை நலமாக்கினோம்.

கண்ணீர் துளிகளுடன்
காலத்தால் கலைகிறோம்.
கடமையை நிறைவேற்ற
நற்பாதையில் பயணிப்போம்.
உயிரால் இணைத்தபின்
உடலால் தானே பிரிகிறோம்.
அழியாத நினைவுகளுடன்
ஆன்மாவில் தொடருவோம்…

 

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“உழவனின்-உள்ளாடை”

உழவனின்-உள்ளாடைஊருக்கே உணவளித்தவன்
உடுத்த உள்ளாடைதான்.
உள்(ள) ஆடையை காப்பாற்ற
உயிராய் உழைக்கிறான்.
உள்ளதையும் உருவ
உறங்காமல் உழைக்கிறேன்.

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

“அகதி”

மரணித்துப்  போயிருக்கலாம்
உயிர் பிடித்து
அகதியாய் வாழ்வதற்கு.
உரிமைக்காக போர் தொடுத்து
உள்ள
உறைவிடமும் பறிக்கப் பட்டோம்.
ரணங்களைக் கண்டு கண்டு
ரௌத்திரம் கற்றுக் கொண்டோம்.
கூரைகள் இல்ல விட்டாலும்
கூட்டுக் குடும்பமாய் வாழக்கற்றோம்.
முள்வேலிக்குள் முடக்கப்பட்ட
முடவர்களாய் முகம் காட்டுகிறோம்.
படுத்து உறங்க பாய்கள் வேண்டோம்
பதுங்கி இறக்க பாடை கேட்கிறோம்.
நாங்கள்
வதைக்கவா விதைக்கப்பட்டோம்.
அல்லது
வஞ்சிக்கவா வாழ்க்கைப்பட்டோம்.
இது என்ன
இயற்கையின் விதியா?
இல்லை அந்த
இறைவனின் பிழையா?

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“முதல் இரவு”

கனவுகளின் இரவுகள்
காதலின் உணர்வுகள்
இறந்திடும் வெளிச்சம்
இணைந்திடும் கைகள்
அணைத்திடும் அரும்புகள்
விலகிடும் ஆடைகள்
பதுங்கிடும் வெட்கம்
புகுந்திடும் நிசப்தம்
வீழ்ந்திடும் சலனம்
வென்றிடும் வேட்கை
உடைத்திடும் விதிகள்
உயிர்திடும் உறவுகள்
மலர்ந்திடும் மாண்புகள்

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

“கவிதை”

 

 

 

 

 

 

 

 

 

 

சந்தித்த பொழுதுகளில்
சிந்திக்கவில்லை இவ்வாறு,
சந்திக்காத பொழுதுகளில்
சிந்திப்பேன் என்று.
உயிரினில் கலந்திட்ட
உண்மையும் தெரியவில்லை,
உரிமையுடன் உனைக்கேட்க
வீரமும் எனக்கில்லை.
தெளிவாய் தெரிந்தபின்
நிற்கிறேன் செய்வதறியாது.
சொல்லத்தான்  தவிக்கிறேன்
வார்த்தைகள் இன்றி,
ஆயினும் வடிக்கிறேன்
அனைத்தையும் கவிதையாய்…

 

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

“அம்மா”

நீ தான் என் முதற் சொந்தம்
நீ சொல்லி தெரிந்தது பிற பந்தம்

பனி,குளிர்,மழை,வெயில் என நீ தாங்கி
கருவறையில் என்னைக் காத்தவளே

என் உதை நீ தாங்கி
அந்த எமனையும் வென்றவளே

இறுதியாய் என்னை ஈன்றாலும்
இன்றுவரை ஈரம் குறையல்லையே

உன் உதிரம் உருக்கி
என் பசி போக்கியவளே

நான் பெய்த மூத்திரத்தில்
உன் முகம் துடைத்தவளே

உன் பெயர் ஊர் கேட்க
அம்மா எனச் சொன்னேனே

நீ கொடுத்த முத்தங்கள்
நெஞ்ஞாங்கூட்டில் இன்றும் இனிக்கிறதே

உன் மடி நான் சாய்ந்தால்
என் தலை முடி கோதியவளே

அப்பா அடிச்சா வலிக்குமுன்னு
வலிக்கா பாணத்தை தொடுத்தவளே

ஊரே எனை ஏசினாலும்
உனக்கு ராசா நான்தானே

நீ பாடு பட்டது
நான் வாங்க பட்டமானது

உன்னப் பத்திக் கவி பாட
இந்தக் காகிதமும் பத்தலையே

உன் நினைவை நான் முடிக்க
இந்தக் காலமும் மீளாதே

உன் கடனை நான் முறிக்க
என் எழு ஜென்மம் போதாதே

உன்னப் பத்தி நான் சொன்னா
உண்மை சுடுமடி, உதிரம் கொதிக்குமடி

உன தருமை நான் நினைச்சா
உள்ளம் கனக்குதடி, உயிரே வலிக்குதடி

திரைக் கடல் ஓடி திரவியம் தேட
உனைக் காப்பகம் சேர்த்தேனே

இந்தப் பாவம் நான் கழிக்க
மகளாய் மறுபிறவி நீ பிறப்பாயா?

உனை உச்சரிக்கும் போதெல்லாம்
உலகமே உன்னுள் அடங்குமடி

………… ” அம்மா “…………

சமர்ப்பணம் :
எனதருமை அம்மாவுக்கு,
அருமை மகனாய்,
அன்புப் பரிசாய்…

 

குறிச்சொற்கள்: , , , , , ,

“புதுப்பிறவி”

சுகமாய் நீ வர எண்ணி
கத்திக் கூவாமல், கத்தியோடு போராடி
சுதந்திரமாய் வெளி வந்தாய்…

ஈரைந்து மாதத்தின் வலியை
இருநொடியில் மறைத்தாய்…

கண் மூடிய நிலையிலும்
கரு விழிகள் உனைத் தேடின…

உடல் எனை மறத்தாலும்
எனதுயிர் நினைத்தது உன்னை…

நான் மறு பிறவி எடுத்தாலும்
உன் “புதுப்பிறவி”-க்கு ஈடாகாது கண்ணே !!!

 

குறிச்சொற்கள்: , ,

 
%d bloggers like this: