
உன் மேல் உதட்டிற்கு கீழாக
தேன் கன்னத்திற்கு ஓரமாக
எனது கண்விழி போல மச்சம்
அதுவே என் காதலின் உச்சம்.
உன் பதிலை நோக்கி…
என் கண்ணில் உன்னை கண்ட நொடி,
என்னுள் உன் மீது காதல் கொண்டேன்.
காதலைக் கண்டவன் கவிஞன் ஆவான்.
நானோ, கயவன் அல்லவா ஆனேன்-
உன் இதயத்தை திருடி.
உன் பதிலை நோக்கி…
ஏனடி என் கண்ணில் நீ விழுந்தாய்
என் இதயம் அல்லவா வலிக்குதடி !!
என் நெஞ்சம் என்ன உனது இல்லமா?
அழகாய் அமர்ந்து வெளியே வர மறுக்கிறாய்.
ஏன்? என்னை இதமாய் இம்சிக்கவா?
உன் பதிலை நோக்கி…
ஒவ்வொரு ஆணுக்குள்ளும் “காதல்” எனும் தீப்பொறி இருக்கும்
அதனை பெண்மை எனும் தென்றல் தீண்டும் பொது
எரிமலையாய் வெடிக்கும்.
ஆம், உன்மீது பட்டு வரும் காற்று கூட
எனக்கு தென்றலாய் தோன்றுகிறது.
உன் பதிலை நோக்கி…
என் உதிரத்தை உறிஞ்சியவளே,
நீ அமிலமா? அமிர்தமா?
என்னுள் தோன்றவில்லை நீ எதுவென்று?
அமிலமெனில் அன்பாய் கொன்றுவிடு,
அமிர்தமெனில் அழகாய் வாழவிடு… உன்னோடு.
உன் பதிலை நோக்கி…
உனைக் காணாத ஒவ்வொரு நாளும்
உயிறற்ற உடலாய் திரிகிறேன்.
உனைக் கண்ட மறுகணமே
கடவுளையும் விஞ்சுகிறேன்.
என்னைக் கடவுளாக்குவதும்,
காட்டில் இடுவதும் உன் பதிலே…
உன் பதிலை நோக்கி…
உன் பதிலை என்னிடம் கூறினாலும்
என் இதயம் தான் அதனை நோக்குதடி.
அதனை துடிக்க வைப்பதும்,
தூங்க வைப்பதும் உன் பதிலே…
உன் பதிலை நோக்கி…
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
குறிச்சொற்கள்: அதனை, அன்பாய், அமர்ந்து, அமிர்தம், அமிலம், அழகாய், ஆண், இதமாய், இதயம், இம்சை, இல்லம், உச்சம், உதடு, உதிரம், உன், உன்னை, உன்னோடு, உயிறற்ற உடல், உறிஞ்சியவள், எனது, என்ன, என்னுள், எரிமலை, ஓரமாக, கடவுள், கடிதம், கண், கண்விழி, கயவன், கவிஞன், காட்டில் இடுவதும், காதல், காதல் கடிதம், காதல் கொண்டேன், காற்று, கொன்றுவிடு, திரிகிறேன், திருடி, தீண்டுதல், தீப்பொறி, துடிக்க, தூங்க, தென்றல், தேன் கன்னம், நீ, நெஞ்சம், நொடி, நோக்கி, நோக்கு, பதில், பெண்மை, மச்சம், மறுகணம், மறுப்பு, மேல், வலி, வாழவிடு, விஞ்சுதல், விழுந்தாய், வெடிக்கும், வெளியே, வைப்பதும்

மூத்தவளாய் நீ பிறந்து
முதுகிலே எனைச் சுமந்தாயே
பக்கத்து பள்ளிக்குகூட
கைப்பிடித்து செல்வாயே
ஆசை மிட்டாய்-யை
பாதி கடிச்சு கொடுப்பாயே.
அடித்து வைத்து அழும் போது
அடிக்கமாட்டேனென்று பொய் சூளுரைப்பாயே.
உரிமையாய் சண்டைபோட்டு
உண்மையாய் உறவாடுவாயே.
நீ வாங்கிய சம்பளத்தை
நான் படிக்க பரிசளித்தாயே.
அடையாளம் தேடித்திரிந்த காலத்தில்
ஆறுதலாய் துணை நின்றாயே.
கண்கலங்கி நான் நின்றால்
கை கொடுக்க தவறாயே
சோதனை கண்ட நெஞ்சை
சாதனை காணச் செய்தாயே
பெற்றெடுத்த உன் பிள்ளைக்கு
பெருங்காவல் நான் என்றாயே
மறுஜென்மம் உண்டென்றால்
மறவாமல் உடன் பிறப்பாய்.
ஆயிரம் உலகம் சொன்னாலும்
அடுத்த அன்னை நீதானே!
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
குறிச்சொற்கள்: அக்கா, அடுத்த அன்னை, அடையாளம், அன்னை, அழுகை, ஆசை மிட்டாய், ஆயிரம், ஆறுதல், உண்மை, உன், உரிமை, உறவாடு, உலகம், கண்கலங்கி, காலம், கை, கைப்பிடித்து, சண்டை, சம்பளம், சுமந்தாய், சூளுரை, சோதனை, துணை, தேடித்திரிந்த காலம், நான், நின்றாய் பெற்றெடுத்தல், நீ, நீதானே, நெஞ்சம் சாதனை, படிப்பு, பரிசளிப்பு, பள்ளி, பிறப்பு, பிள்ளை, பெருங்காவல், மறவாமல், மறுஜென்மம், முதுகு, மூத்தவள்