சுவை கல்வியை
சுமை என்றாக்கி
சுரண்டும்
கல்வி-ஒரு புறம்.
கடவுள் கொன்று
காமம் உண்டு
காவிஉடையில்
ஆன்மீகம்-ஒரு புறம்.
கள்ளப் பணதில்
வெள்ள உடையில்
கையாட்டும்
அரசியல்-ஒரு புறம்.
ஆடை குறைத்து
ஆபாசம் நிறைத்து
அசிங்கத்துடன்
கலை-ஒரு புறம்.
விதைத்தவன் வீதியிலே
விலைபொருளோ சந்தையிலே
விதியிலா
விவசாயி-ஒரு புறம்.
அடையாளம் அழிந்து
அடைக்கலம் புகுந்து
அடிமைகளாய்
அகதிகள்-ஒரு புறம்.
சூதாட்டம் சுகமென
விளையாட்டாய் விதைதூவ
விளையாட்டாய்
விளையாட்டு-ஒரு புறம்.
வேலை வேண்டி
காசைக் கட்டி
கவலையுடன்
இளைஞன்-ஒரு புறம்.
கடமை உணர்வை
கருக்கி எடுத்து விட்டு
காக்கி சட்டைக்குள்
காவல்-ஒருபுறம்.
காசை நிறைக்க
காப்பகம் நிறைக்கும்
கருணையிலா
பிள்ளைகள்-ஒரு புறம்.
திட்டம் தீட்டி
சத்தம் இன்றி
களவாடும்
களவானி-ஒரு புறம்.
வட்டி உயர்த்தி
பெட்டி நிறைத்து
துண்டைப்போடும்
நிதிநிறுவனம்-ஒரு புறம்.
அடுத்த பெண்ணின்
அணிகலனை அட்டவணையிடும்
அழுக்கு
அழகிகள்-ஒரு புறம்.
முகநூல் சென்று
முகவரி இழந்து
முடங்கிடும்
முயல்கள்-ஒரு புறம்.
ஒரு புறம்
மட்டும் போதும்,
எதையும் தாங்கும்
எங்களின் தேசம்.
எதிர்த்துப் பேசினால்
செவியில் மட்டுமல்ல
செவிட்டிலும் விழும்
எங்கள் தேசம்.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
குறிச்சொற்கள்: அகதி, அகதிகள், அசிங்கம், அடிமை, அடைக்கலம், அடையாளம், அட்டவணை, அணிகலன், அரசியல், அழகி, அழிந்து, அழுக்கு, ஆடை, ஆன்மீகம், ஆபாசம், இளைஞன், இழந்து, உடை, உணர்வு, உயர்த்தி, எங்கள், எடுத்து, எதிர்த்து, எதையும், ஒரு, கடமை, கடவுள், கருணை, கலை, கல்வி, களவாடல், களவானி, கள்ளப்பணம், கவலை, காக்கி சட்டை, காசு, காசை, காப்பகம், காமம், காவல், காவிஉடை, குறைத்து, கையாட்டும், கொன்று, சத்தம், சந்தை, சுகம், சுமை, சுரண்டும், சுவை, சூதாட்டம், செவி, தாங்கும், திட்டம், தீட்டி, துண்டு, துண்டுபோடும், தேசம், நிதிநிறுவனம், நிறை, நிறைக்கும், நிறைத்து, பிள்ளை, புறம், பெட்டி, பெண், பேச்சு, போதும், முகநூல், முகவரி, முடங்கிடும், முயல்கள், வட்டி, விதி, விதை, விதைத்தவன், விலைபொருள், விளையாட்டு, விழும், விவசாயி, வீதி, வெள்ளை, வேலை
அதிகாலையில் எழுந்து
ஆறுமுறை குளித்து
பத்துமுறை பல்துலக்கி
பாதரசம்தேய உடைமாற்றி
சீராய் தலைசீவி
நல்ல சகுனம் பார்த்து
சொற்ப சொந்தங்களுடன்
பெண் பார்க்க சென்றேன்.
ஊரின் ஓரமாய் ஒத்தவீடு
பார்பதற்கு அழகான ஓட்டுவீடு
பாதையிலே காத்திருந்த தந்தை
முற்றத்திலே வரவேற்ற அன்னை
ஒளிந்து,ஒளிந்து பார்க்கும் தங்கை
ஓரக்கண்ணால் முறைக்கும் தம்பி
ஓயாமல் ஓடும் பாட்டி
தன்கதை சொல்லும் தாத்தா
ஓரமாய் ஒதுங்கிய பூனை
ஓவ்வொன்றும் தனிக் கவிதை.
என்கவிதை எங்கே? என்ற
ஏக்கமும், எதிர்பார்ப்புடனும் நான்
படபடப்பையும், பயத்தையும் வெளிக்காட்டாமல்
வீராப்பாய் அமர்ந்திருந்தேன்.
எங்கிருந்தோ ஒரு குரல்,
“ஏம்பா! பொண்ண கூப்பிடறது!”
சொன்னவன் தெய்வமானான்.
சின்ன இடை கொண்டு
அன்ன நடை நடந்து
தேநீருடன் தேவதை வந்தாள்.
பச்சை நிற பட்டுடுத்தி
கருப்பாய் கலையாய் இருந்தாள்.
எந்த நிறம் இருந்தென்ன?
எல்லா நிழலும் கருமைதானே!.
வெட்கம் வேடிக்கை பார்க்க
நாணம் என்ன விலை?
என்று கேட்டு விட்டு,
கள்ளப் பார்வையில் ஒரு
சின்னச் சிரிப்பை தந்தாய்.
அந்த ஒரு நிமிடப் பார்வை
ஓராயிரம் கதை சொன்னன.
மறக்க முடியாத தருணம்
யாரிடம் இல்லாத வசீகரம்
முன் எப்போதுமில்லாத உணர்வு
வாழ்வு முழுமையடைந்த நிம்மதி
எனைக்கென பிறந்தவளை,
எப்படியோ பார்த்துவிட்ட பரவசம்.
அன்று
நீ விட்டுச் சென்ற கனவுகளை
மட்டும்
பற்றிக் கொண்டு வாழப் பிடிக்கிறது.
நித்தம்,நித்தம் நீங்கா கனவுகளுடன்…
நான்,
தொலைந்து தான் போய்விட்டேன்.
தொடர்ந்து தேடுகிறேன்
தொலைந்ததை மீட்ட அல்ல
தொலைத்ததின் காரணம் காண…
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
குறிச்சொற்கள்: அதிகாலை, அன்னம், அன்னை, அன்று, ஆறு, இடை, உடை, உணர்வு, ஊர், எதிர்பார்ப்புடன், ஏக்கம், ஒதுங்கிய, ஒத்தவீடு, ஓடும், ஓட்டுவீடு, ஓயாமல், ஓரக்கண், ஓரமாய், ஓராயிரம், கதை, கனவு, கருப்பு, கருமை, கலை, கள்ளப் பார்வை, கவிதை, காரணம், குரல், குளியல், சகுனம், சிரிப்பு, சொந்தம், சொற்ப, தங்கை, தந்தை, தம்பி, தருணம், தலை, தலைசீவி, தாத்தா, தெய்வம், தேடு, தேநீர், தேவதை, தொடர்ந்து, தொலைந்து, நடை, நாணம், நித்தம், நிமிடம், நிம்மதி, நிறம், நிழல், பச்சை, படபடப்பு, பட்டு, பத்து, பயம், பரவசம், பற்றி, பல்துலக்கி, பாட்டி, பாதரசம், பாதை, பார்வை, பூனை, பெண், பெண் பார்த்தல், மறதி, மீட்டல், முற்றம், வசீகரம், வரவேற்பு, வாழ்வு, விலை, வீராப்பு, வெட்கம், வேடிக்கை
சொல்லுவது உண்மை,
இனமோ பெண்மை,
இறந்தது ஆண்மை,
வண்ணத்தின் ஏழ்மை,
உடையில் வெண்மை,
அழகின் பகைமை,
வயதோ இளமை,
உடலோ வளமை,
பட்டுப்போன செழுமை,
பாவமிந்த பதுமை,
பிரிக்கப்பட்ட பன்மை,
ஒதுக்கப்பட்ட ஒருமை,
சகுனத்தின் உவமை,
வலிகளின் உடமை,
காலத்தின் கொடுமை,
கனவுகளும் கருமை,
காயங்களின் முதுமை,
புறக்கணிப்பதா நேர்மை,
உடைபட்ட உரிமை,
பறிபோன தலைமை,
வாலிபத் தன்மை,
வாட்டும் தனிமை,
வீழ்ந்திட்ட வலிமை,
இறுகிய இனிமை,
மரபுகளின் கயமை,
வாழ்க்கையே வெம்மை,
கொல்லுதடா வெறுமை,
உணர்விலா பொம்மை,
கிடைக்குமா தாய்மை,
மரணமே மகிமை,
விடியாத கிழமை,
அணியாத விழிமை,
இழந்திட்ட வன்மை,
விதவையெனும் அடிமை,
போதுமடா இம்மை,
வேண்டுமா மறுமை?
சமூகமோ பழமை,
இதுவே நிலமை,
எதற்கிந்த பெருமை?
போதுமிந்த பொறுமை,
களைவது கடமை,
அஞ்சுவது மடமை,
மறுமணமே மேன்மை,
எண்ணுவது எளிமை,
களம்வெல்வது கடுமை,
தயக்கங்கள் சிறுமை,
புரிந்திடுவோம் புதுமை,
வெல்லட்டும் வாய்மை,
மலரட்டும் மென்மை.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
குறிச்சொற்கள்: அடிமை, அழகு, அழியா, ஆண்மை, இனம், இனிமை, இம்மை, இளமை, உடமை, உடல், உடை, உணர்வு, உண்மை, உரிமை, உவமை, எளிமை, ஏழ்மை, ஒருமை, கடமை, கடுமை, கனவு, கயமை, கருமை, களம், காயம், காலம், கிழமை, கொடுமை, சகுனம், சிறுமை, செழுமை, தனிமை, தன்மை, தயக்கம், தலைமை, தாய்மை, நிலமை, நேர்மை, பகைமை, பட்டுப்போன, பதுமை, பன்மை, பழமை, பாவம், புதுமை, பெண்மை, பெருமை, பொம்மை, பொறுமை, மகிமை, மடமை, மரணம், மரபு, மறுமணம் வாலிபம், மறுமை, முதுமை, மென்மை, மேன்மை, வண்ணம், வன்மை, வயது, வலி, வலிமை, வளமை, வாய்மை, வாழ்க்கை, விடியாத, விதவை, விழிமை, வெண்மை, வெம்மை, வெறுமை