RSS

Tag Archives: இதயம்

“ஆண் பார்த்தல்”

88a-AanPaarthal

படபடக்கும் கைகள்,
தடுமாறும் கால்கள்,
அலைபாயும் கண்கள்,
வறட்சியாய் உதடுகள்,
குளறும் வார்த்தைகள்,
இடமாற தவிக்கும் இதயம்,
பதில்கேக்க துடிக்கும் காதுகள்,
முடிவை எதிர்நோக்கும் முகம்,
கனவுகளுடன் காத்திருக்கும் உயிர்…

ஆம், ஆ(பெ)ண்-பார்த்த போது
அடியேனின் அனுபவம்.

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“காதல் கடிதம்”

"காதல் கடிதம்"

உன் மேல் உதட்டிற்கு கீழாக 
தேன் கன்னத்திற்கு ஓரமாக
எனது கண்விழி போல மச்சம்
அதுவே என் காதலின் உச்சம்.
உன் பதிலை நோக்கி…
 
என் கண்ணில் உன்னை கண்ட நொடி,
என்னுள் உன் மீது காதல் கொண்டேன்.
காதலைக் கண்டவன் கவிஞன் ஆவான்.
நானோ, கயவன் அல்லவா ஆனேன்-
உன் இதயத்தை திருடி.
உன் பதிலை நோக்கி…
 
ஏனடி என் கண்ணில் நீ விழுந்தாய்
என் இதயம்  அல்லவா வலிக்குதடி !!
என் நெஞ்சம் என்ன உனது இல்லமா?
அழகாய் அமர்ந்து வெளியே வர மறுக்கிறாய்.
ஏன்? என்னை இதமாய் இம்சிக்கவா?
உன் பதிலை நோக்கி…
 
ஒவ்வொரு ஆணுக்குள்ளும் “காதல்” எனும் தீப்பொறி இருக்கும்
அதனை பெண்மை எனும் தென்றல் தீண்டும் பொது
எரிமலையாய் வெடிக்கும்.
ஆம், உன்மீது பட்டு வரும் காற்று கூட
எனக்கு தென்றலாய் தோன்றுகிறது.
உன் பதிலை நோக்கி…
 
என் உதிரத்தை உறிஞ்சியவளே,
நீ அமிலமா? அமிர்தமா?
என்னுள் தோன்றவில்லை நீ எதுவென்று?
அமிலமெனில் அன்பாய் கொன்றுவிடு,
அமிர்தமெனில் அழகாய் வாழவிடு… உன்னோடு.
உன் பதிலை நோக்கி…
 
உனைக் காணாத ஒவ்வொரு நாளும்
உயிறற்ற உடலாய் திரிகிறேன்.
உனைக் கண்ட மறுகணமே
கடவுளையும் விஞ்சுகிறேன்.
என்னைக் கடவுளாக்குவதும்,
காட்டில் இடுவதும் உன் பதிலே…
உன் பதிலை நோக்கி…
 
உன் பதிலை என்னிடம் கூறினாலும்
என் இதயம் தான் அதனை நோக்குதடி.
அதனை துடிக்க வைப்பதும்,
தூங்க வைப்பதும் உன் பதிலே…
உன் பதிலை நோக்கி…
 
 
 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“அவளை அல்ல”

அன்பென்ற இதயத்தில்
அழகாய் கோவில் கட்டி
அனுதினமும் நேசிப்பது அவளை அல்ல…
அவள் தந்து விட்டுச் சென்ற கனவுகளை…

 

குறிச்சொற்கள்: , , , , , , , ,

“நீயடி”

கண்ணியமாய் காதல் செய்தவள் நீயடி,
கொவ்வை இதழ்களால் கொஞ்சியவள் நீயடி,
அன்பிற்கு அகராதி தந்தவள் நீயடி,
காலம்மறந்து கதை பேசியவள் நீயடி,

கவிதைக்கு கரு தந்தவள் நீயடி,
காட்டாறுக்கு கரை போட்டவள் நீயடி,
பிழைகளை சரி செய்தவள் நீயடி,
இலக்கணமாய் இயங்கச் செய்தவள் நீயடி,

இறுகிய மனதை இளக்கியவள் நீயடி,
பாறைக்குள் நுழைந்த தேரையும் நீயடி,
பாய்ச்சலை பக்குவப் படுத்தியவள் நீயடி,
வாலிப-வானுக்குள் வந்த வசீகரநிலா நீயடி,

வில்லேந்திப் பார்வையில் வீழ்த்தியவள் நீயடி,
நித்திரையில் சொப்பனமாய் வாழ்ந்தவள் நீயடி,
கண் மூடினால் கனவாய் நீயடி,
மதி மயக்கிய மங்கையும் நீயடி,

விழிகளுக்கு வலி வழங்கியதும் நீயடி,
துடிக்கும் இதயத்தை தூக்கிலிட்டதும் நீயடி,
கல்லறையை முடிவுரையாய் முடித்ததும் நீயடி,
முடிந்த பின்பு துடிப்பதும் நீயடி.

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“என்கனவு”

திறந்த உதடு,
மூடாத இமைகள்,
கேளாத காது,
துடிக்காத இதயம்,
நகராத கால்கள்,
அசையாத நிலை,
குறையாத எடை,
ஏங்கவைக்கும் அழகு,
பெண்ணே!
நீ பிரம்மனின் கலை
உண்மையில் என் கனவு
“ஒரு சிலை”.

 

குறிச்சொற்கள்: , , , , , , , ,

“திருமண வாழ்த்து”

இதயங்கள் இடம் மாற
இன்பங்கள் இல்லறத்தில் சூழ
வாழும் வரை வாழ்த்திடுமே
நீவீர் வாழ்ந்திடவே.

இன்பம் மட்டும் வாழ்க்கையல்ல
இன்னல்கள் இருவிழி கண்டாலும்
ஈர விழிகளை துடைத்திடுங்கள்
புன்னகை பூத்து நில்லுங்கள்
ஊடல்களை உண்டாக்கி மறந்திடுங்கள்
ஆசைகளை அளவாய் அட்டவனையிடுங்கள்
கனவுகளை களவாடிக் காட்சியுருங்கள்
கருத்தொருமித்து காதல் செய்யுங்கள்
உணர்வுகளை உயிராய் மதித்திடுங்கள்
உரிமைகளுக்கு உண்மையாய் வழிவிடுங்கள்
மனதொருமித்து மகிழ்ச்சியாய் வாழ்ந்திடுங்கள்.

வேற்றுமை வென்று
ஒற்றுமை வளர்த்து
ஐயத்தை அழித்து
நோயை ஒழித்து
மாற்றம் புகுத்தி
ஏற்றம் கண்டு
ஏமாற்றம் இன்றி
வெற்றி வாகை சூடுங்கள்.

வார்த்தையில் வாழ்வை தொலைக்காதீர்,
அன்பு எனும் ஆன்மாவுக்கு
உங்கள் ஆயுளை அர்பணியுங்கள்.

நீ வாழி
நீடு வாழி
நீடுழி வாழி

குலம் சிறக்க வாழி
நலம் குறையா வாழி
வளம் பெருக வாழி
புகழ் நிலைக்க வாழி

 

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

“திருமணம்”

பரணி போற்றும் ஆண்மகன்,
உண்மை பேசும் உத்தமன்,
ஊர் வாழ்த்தும் நல்லவன்,
விழியசைவில் வீழ்த்திடும் வீரன்,
பரிசுத்த மனதோடு, வெண் பட்டுடுத்தி
கட்டிலங்காளையாய் வந்தமர்ந்தான்.

செவ்வானம் தறித்து
சேலை நெய்துடுத்தி,
கார் கூந்தல் தலை கோதி,
வானவில்லின் சாயம் பூசி,
குங்குமப்பூவாய் கன்னம் சிவக்க,
கெட்டிமேளம், நாதஸ்வரம் முழங்க
கட்டழகு பதுமை வந்தாள்.

பெற்றோர் பெருமை கொள்ள
உற்றோர் உமை வாழ்த்த
மற்றோர் மனம் மகிழ
சுற்றோர் சூழ்ந்திருக்க
இடம் மாறின இதயங்கள்.

 

குறிச்சொற்கள்: , , , , , , , ,

 
%d bloggers like this: