RSS

Tag Archives: ஆடை

“உழவனின்-உள்ளாடை”

உழவனின்-உள்ளாடைஊருக்கே உணவளித்தவன்
உடுத்த உள்ளாடைதான்.
உள்(ள) ஆடையை காப்பாற்ற
உயிராய் உழைக்கிறான்.
உள்ளதையும் உருவ
உறங்காமல் உழைக்கிறேன்.

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

“தேசம்”

சுவை கல்வியை
சுமை என்றாக்கி
சுரண்டும்
கல்வி-ஒரு புறம்.

கடவுள் கொன்று
காமம் உண்டு
காவிஉடையில்
ஆன்மீகம்-ஒரு புறம்.

கள்ளப் பணதில்
வெள்ள உடையில்
கையாட்டும்
அரசியல்-ஒரு புறம்.

ஆடை குறைத்து
ஆபாசம் நிறைத்து
அசிங்கத்துடன்
கலை-ஒரு புறம்.

விதைத்தவன் வீதியிலே
விலைபொருளோ சந்தையிலே
விதியிலா
விவசாயி-ஒரு புறம்.

அடையாளம் அழிந்து
அடைக்கலம் புகுந்து
அடிமைகளாய்
அகதிகள்-ஒரு புறம்.

சூதாட்டம் சுகமென
விளையாட்டாய் விதைதூவ
விளையாட்டாய்
விளையாட்டு-ஒரு புறம்.

வேலை வேண்டி
காசைக் கட்டி
கவலையுடன்
இளைஞன்-ஒரு புறம்.

கடமை உணர்வை
கருக்கி எடுத்து விட்டு
காக்கி சட்டைக்குள்
காவல்-ஒருபுறம்.

காசை நிறைக்க
காப்பகம் நிறைக்கும்
கருணையிலா
பிள்ளைகள்-ஒரு புறம்.

திட்டம் தீட்டி
சத்தம் இன்றி
களவாடும்
களவானி-ஒரு புறம்.

வட்டி உயர்த்தி
பெட்டி நிறைத்து
துண்டைப்போடும்
நிதிநிறுவனம்-ஒரு புறம்.

அடுத்த பெண்ணின்
அணிகலனை அட்டவணையிடும்
அழுக்கு
அழகிகள்-ஒரு புறம்.

முகநூல் சென்று
முகவரி இழந்து
முடங்கிடும்
முயல்கள்-ஒரு புறம்.

ஒரு புறம்
மட்டும் போதும்,
எதையும் தாங்கும்
எங்களின் தேசம்.

எதிர்த்துப் பேசினால்
செவியில் மட்டுமல்ல
செவிட்டிலும் விழும்
எங்கள் தேசம்.

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“கல்லூரி”

கனவுகளின் தேசம்
கற்பனைகளின் ஒளிப்பதிவு
கடவுளின் உறைவிடம்
காதலின் கருவறை
கதையளக்கும் கலைக்கூடம்
கவலைகளின் மயானம்

வசந்தம் வீசும் வாலிபச்சோலை
தென்றல் தீண்டும் மலர்வனம்
போதி மரங்களின் கானகம்
பறவைகளின் கூடல்
புள்ளிமான்களின் புகலிடம்
புலிகள் வாழும் கூடாரம்

பட்டாம்பூச்சி பறக்கும் வயசு
பாடங்கள் பதியா மனசு
வரையறை இல்லா நட்பு
வண்ண மயில்களின் அணிவகுப்பு
ஏதுமறியாத மனங்கள்
எதிர்பார்பில்லா குணங்கள்
விழிகளின் விளையாட்டுக்கள்
தரைதவழும் விண்மீன்கள்
எச்சில் பண்டங்கள்
கருவாச்சி காவியங்கள்
கேலிக் கிண்டல்கள்
போலிச் சண்டைகள்
வீண் அரட்டைகள்
கண்ணைச் சொருகும் மதிய வகுப்புகள்
ஓரிரவில் முடிக்கப்படும் ஓராண்டுப் புத்தகங்கள்
ஒரே நிற ஆடை அணிந்த நாட்கள்
ஒவ்வொன்றும் ஒப்பில்லா உயிரோவியம்.

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“முதல் இரவு”

கனவுகளின் இரவுகள்
காதலின் உணர்வுகள்
இறந்திடும் வெளிச்சம்
இணைந்திடும் கைகள்
அணைத்திடும் அரும்புகள்
விலகிடும் ஆடைகள்
பதுங்கிடும் வெட்கம்
புகுந்திடும் நிசப்தம்
வீழ்ந்திடும் சலனம்
வென்றிடும் வேட்கை
உடைத்திடும் விதிகள்
உயிர்திடும் உறவுகள்
மலர்ந்திடும் மாண்புகள்

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

“நாகரீகம்”

மேய்ச்சலுக்கு மாடு கட்டி,
ஆட்டுக்கு புல்லறுத்த,
காலம் மாறி
ஓய்வின்றி உழைக்கும்
நாகரீக உலகமானது.

மின்வெட்டு வேளையில் மட்டுமே
விண்வெளி காண்கிறோம்.

காசு கொடுத்தால் கடவுளையும்
கருவறைக்குள் காட்டுகிறோம்.

ஆபரணம் கூட்டி, ஆடைகளை குறைத்து
அழகை கெடுத்தோம்.

உறவையும், உணர்வையும் உன்னத
விஞ்ஞானத்தால் சுருக்கினோம்.

கருத்தடை செய்யப்பட்டு அறுவடை
செய்து குவிக்கிறோம்.

பிதைத்த ஆறாவது நாளில் அடுத்ததை
அதன்மேல் பிதைக்கிறோம்.

சவப்பெட்டி மூடிய மறுகணம்
உயில்பெட்டி திறக்கிறோம்.

இறப்புகளை இன்று ஒரு
சடங்காய் மாற்றினோம்.

பல சடங்குகளை பெரும்
விழாவாய் போற்றினோம்.

நாகரீகம் என்ற போர்வையில்
பாதை மாறி போகிறோம்.

நாகரீக முகமூடிக்குள் நசுக்கிவிட்டோம்
வசந்தம் வீசும் வாழ்நாட்களை.

நாகரீக நாடகத்தை களைத்து
நலம்கொண்ட நம் கலாச்சாரம் காப்போம்.

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

 
%d bloggers like this: