RSS

Tag Archives: அவள்

“அடிமை”

அடிமை
அடிமை இனத்தை
அழிக்க முடியாது.
அவள் உள்ளவரை…
Advertisements
 

குறிச்சொற்கள்: , , , , ,

“அழகிய கவிதை”

அழகிய கவிதைகள்
ஆயிரம் அரங்கேற்றினும்,
அவளழகைக் கண்டால்
“அழகிய கவிதை”-யின்
அர்த்தம் மாறுகிறதே!!!

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

“முழுக்(முதற்) கவிஞன்”

 

 

 

 

 

 

 

 

 

 

முதற் கவிஞன்
நான் அவளைக் காதலிக்க
ஆரம்பித்த போது…

முழுக் கவிஞன்
அவள் என்னைக் காதலிக்கவில்லை
என்றறிந்த போது…

 

குறிச்சொற்கள்: , ,

“என்னுடன்”

அவள், என் மீது சாய்ந்தாள்.
மீண்டும் பிறந்தேன்
நான் மீண்டும் பிறந்தேன்
பூலோகம் புதிதானது.

அவள், என் மீது சாய்ந்தாள்.
ஆயிரம் யானைகளின் பலம்
எறும்புகளின் சுறுசுறுப்பு
தேனின் சுவை
தென்றலின் இனிமை

அவள், என் மீது சாய்ந்தாள்.
ஆம் – அமைதியாகச் சாய்ந்தாள்.
அவளது சுமைகளை மறக்க…
எனது கடமையை உணர்த்த…

அவள், என் மீது சாய்ந்தாள்.
ஆம் – நம்பிக்கையுடன் சாய்ந்தாள்.
எதிர்காலக் கனவுடன் !
எதிர்கொள்ள என்னுடன் !

 

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

“அவள்”

பால் நிலா முகம்
மாயக் கயல்விழி கண்கள்
செந்தாமரை நிற உதடு
சிவந்த செவ்வான மேனி.
அவள் ஒரு அழகின் ஆக்கிரமிப்பு.

அவள் அச்சமில்லாதவள்
நாணங்களில் ஏதும் மிச்சமில்லாதவள்
மாசற்ற மடமுடையவள்
பள்ளியாய் பயிர்ப்புடையவள்.
அவள் ஒரு அழகின் ஆக்கிரமிப்பு

எளிதாய் இதயம் புகுந்து
கனிவாய் கதை பேசி
இதமாய் இம்சை செய்து
சுகமாய் சுமை தந்தவள்.
அவள் ஒரு அழகின் ஆக்கிரமிப்பு.

அவள் சுவாசம் நுகர்ந்து என் சுவாசம் மறந்தேன்.
அவள் குரல் கேட்டு என் பேச்சை இழந்தேன்.
அவள் விரல்நுனி தொட என் வீரம் தொலைத்தேன்.
அவள் இதழ்ஈரம் பார்த்து என் நாவறண்டு நின்றேன்.
அவள் உள்ளம் நாதீண்ட என் முக்தி முடிப்பேன்.
அவள் ஒரு அழகின் ஆக்கிரமிப்பு.

அவள் அழகை ஐம்புலன் ரசிக்க
என் ஆறறிவை இழந்தேன்.
அவள் இதழ் திறந்து சொல்வாள் என
கிளை நில்லா இலையாய் நான்.
உள்ளம் தேடும் உண்மைக் காதலனாய்…
அவள் ஒரு அழகின் ஆக்கிரமிப்பு.

“உண்மைக் காதலை மறக்க முடிவதில்லை.
மறக்கமுடிந்த காதல் உண்மையாய் இருப்பதில்லை.”

 

குறிச்சொற்கள்: , , , ,

“மறந்து விடு”

 நினைத்து கூட பார்க்கவில்லை

அவளும் என்னை நினைப்பாள் என்று …

மறந்தும் கூட  நினைக்கவில்லை

அவள் என்னை மறந்து விடுவாள் என்று !!!

 

குறிச்சொற்கள்: ,

 
%d bloggers like this: