RSS

Tag Archives: அழகு

“அடையாளம்”

"அடையாளம்"
கடைசி ஆண்டின்
கல்லூரி கவிதைப்போட்டி.
கடந்தமுறை வென்றதால்
கர்வத்துடன் கலந்துகொண்டேன்.
 
தலைப்பு தந்த
கால்மணி நேரத்திற்குள்
கவிதை சொல்ல வேண்டும்.
இதுதான் நிபந்தனை.
 
அனைவரும் ஆவலாய்
எதிர்பார்க்க
அதிர்வாய் வந்தது 
“அடையாளம்”-எனும் தலைப்பு.
 
அடுத்த நொடியில்
அழகாய் சொன்னேன்
“அப்பா”.
 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

“விவசாயி”

காளமாடு ரண்டு பூட்டி
கலப்பைய அதுல மாட்டி
கழனிய ஏர் உழுதா,
பெரண்டு விழுற மண்ணப்
பாத்தா, கொள்ள அழகடி!

காலம் பார்த்து
வெதச்ச வெத,
மண்ணப் பொளந்து
மொளச்சு வந்தா,
மனசே குளுருதடி!

வேளா வேளைக்கு
தண்ணி பாச்சி,
உரத்தப் போட்டா,
தகப்ப மனசு
தன்னால வந்து சேருதடி!

ஒருநா வயலுக்கு போகலைனா,
மறுநா எனப் பாத்து
“ஏ நேத்து வந்து பாக்கல?”-னு
ஏதோ உரிமையில
கேள்வியா கேக்குதடி!

வளந்து, வயசுக்கு வந்த
பொம்பள மாதிரி
தலைய குனுஞ்சு நிக்கிற
அழக, பாக்கற பாக்கியம்
கெடச்சவ எவனடி!

சுமக்க முடியலைனு,
அறுத்து குமுச்சு
அதுகள வாரி
நெஞ்சோட அணச்சா,
கெடைக்கற சுகம்…

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“வரதட்சணை”

ஈரேழு வருடம் பின்பு,
ஈன்றவளிடம் கூட
காட்டாத அழகை,
மணமான இன்றிரவே
மணாளன் உன்னிடம்,
மறைவேதும் இல்லாமல்
மறுப்பேதும் சொல்லாமல்
மனமேதும் கோணாமல்
மானழகை பகிர்ந்தேன்.
இதற்கு நீர் தான்
தரவேண்டும் தட்சணை
“வரதட்சணை”.

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

“அவளை அல்ல”

அன்பென்ற இதயத்தில்
அழகாய் கோவில் கட்டி
அனுதினமும் நேசிப்பது அவளை அல்ல…
அவள் தந்து விட்டுச் சென்ற கனவுகளை…

 

குறிச்சொற்கள்: , , , , , , , ,

“மை”

சொல்லுவது உண்மை,
இனமோ பெண்மை,
இறந்தது ஆண்மை,
வண்ணத்தின் ஏழ்மை,
உடையில் வெண்மை,
அழகின் பகைமை,

வயதோ இளமை,
உடலோ வளமை,
பட்டுப்போன செழுமை,
பாவமிந்த பதுமை,
பிரிக்கப்பட்ட பன்மை,
ஒதுக்கப்பட்ட ஒருமை,

சகுனத்தின் உவமை,
வலிகளின் உடமை,
காலத்தின் கொடுமை,
கனவுகளும் கருமை,
காயங்களின் முதுமை,
புறக்கணிப்பதா நேர்மை,

உடைபட்ட உரிமை,
பறிபோன தலைமை,
வாலிபத் தன்மை,
வாட்டும் தனிமை,
வீழ்ந்திட்ட வலிமை,
இறுகிய இனிமை,

மரபுகளின் கயமை,
வாழ்க்கையே வெம்மை,
கொல்லுதடா வெறுமை,
உணர்விலா பொம்மை,
கிடைக்குமா தாய்மை,
மரணமே மகிமை,

விடியாத கிழமை,
அணியாத விழிமை,
இழந்திட்ட வன்மை,
விதவையெனும் அடிமை,
போதுமடா இம்மை,
வேண்டுமா மறுமை?

சமூகமோ பழமை,
இதுவே நிலமை,
எதற்கிந்த பெருமை?
போதுமிந்த பொறுமை,
களைவது கடமை,
அஞ்சுவது மடமை,
மறுமணமே மேன்மை,

எண்ணுவது எளிமை,
களம்வெல்வது கடுமை,
தயக்கங்கள் சிறுமை,
புரிந்திடுவோம் புதுமை,
வெல்லட்டும் வாய்மை,
மலரட்டும் மென்மை.

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“அழகிய கவிதை”

அழகிய கவிதைகள்
ஆயிரம் அரங்கேற்றினும்,
அவளழகைக் கண்டால்
“அழகிய கவிதை”-யின்
அர்த்தம் மாறுகிறதே!!!

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

“என்கனவு”

திறந்த உதடு,
மூடாத இமைகள்,
கேளாத காது,
துடிக்காத இதயம்,
நகராத கால்கள்,
அசையாத நிலை,
குறையாத எடை,
ஏங்கவைக்கும் அழகு,
பெண்ணே!
நீ பிரம்மனின் கலை
உண்மையில் என் கனவு
“ஒரு சிலை”.

 

குறிச்சொற்கள்: , , , , , , , ,

 
%d bloggers like this: