RSS

Category Archives: வாழ்க்கை

“மனிதன்”

மனிதன்
மனிதன்
மனமும்,
புத்தியும்
ஒருசேர
படைக்கப்பட்டு,
சுதந்திரமாய்
தண்டிக்கப்பட்டவன்.
 

குறிச்சொற்கள்: , , , , , , ,

“எதிரி”

 "எதிரி"


எதிரிகளே இல்லை என்றால்
எப்படியாவது உருவாக்கிகொள்.
என்றாவது ஒரு நாள்
என்னடா வாழ்க்கை இது
என எண்ணத் தோன்றும்.
எண்ணத்தில் எதிரிகளை ஏந்திக் கொண்டால்
எதிர் நீச்சலை எளிதாய் கற்றுக் கொள்வாய்.
எதை எதையோ காரணம் காட்டி  வீழ்வதை விட
எதிரிகளை வீழ்த்த வாழத் தோன்றும்.
எதிரிகளை எதிரியாய் பார்க்காதே!
என்றும் ஏற்றத்தின் உந்து சக்தியாய் பார்!

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“அலைபேசி”

Alipesi
கைக்குள் அடங்கும்
கலியுலக கண்டுபிடிப்பு.
 
காதோடு பேசும்
காதல் பேசி.
 
ஒலி, ஒளிகளின் 
ஒற்றுமைக் கூடம்.
 
சிந்திக்க தெரியாத
சிறந்த சாதனம்.
 
விரல்களால் விளையாடப்படும்
விஞ்ஞான விருட்சம்.
 
உபயோகம் கண்டால்
உடம்பின் ஓர் அங்கம்.
 
இன்றைய காலகட்டத்தில்
இன்றியமையாத சாதனம். 
 
சிட்டுக்குருவிகளின் சிணுங்கள்களை
சிறைபடுத்திய சமாதி.
 
பதிவேற்றம்,
பதிவிறக்கம்,
பரிமாற்றம்
எனும் முப்பரிமாணத்தின்
முதல்வன்.
 
அலைபேசிக்குள்  அங்கிவிடுகிறது 
அனைவரின் அடையாளங்கள்.
 
அளவுகளை அறியாவிட்டால் 
ஆபத்தின் அலைபேசி.
 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“ஆண்கள்”

 Aangal
முப்பது வயதை கடந்து விட்டது
முன் நெற்றில் முடியும் கொட்டிவிட்டது
செல்லத் தொப்பையும் வந்து விட்டது.
 
கல்லூரிக் கனவுகளை கலைத்து விட்டு
கணிப்பொறியின் காதலனாய் காவல் பட்டோம். 
காசில்லா விட்டாலும் காதலுக்கு பஞ்சமில்லை
காதல் தோல்விகளும் கொஞ்சமில்லை.
 
ஓர் இலக்க குரோமொசோம் குளறுபடியால்
அடித்து வரப்பட்ட
ஆணாதிக்க வர்க்கத்தினர்.
 
இனிய இளமையை
இ.எம்.ஐ-லேயே இழந்து  விட்டு 
பணம் காய்க்கும் எந்திரமாக மாற்றப்பட்டோம்.
இதும் ஓர் வகை ஆண் பாலியல் தொழில் தானோ?
 
பொறுப்பற்ற பொறுக்கிகளா ஆண்கள்?
அக்காவின் பேறுகாலம்,
தங்கையின் திருமணம்,
அப்பாவின் மருத்துவம்,
அம்மாவின் வளையல்,
வீட்டுக் கடன்,
தம்பின் படிப்பு 
என ஏதேனும் பொறுப்புகளை சுமக்கும் தியாகிகள்.
 
நண்பர்களுக்கு  இடையே
நட்பின் அடர்த்தி வேண்டுமானால், 
கூடக் குறைய இருக்கலாம். 
ஆனால்,
கடைசி காசு வரை 
நண்பர்களுக்காகச் செலவிடும் 
மனங்களுக்கு குறைவிருக்காது.
 
அன்பு நிறைந்த ஆணின் 
நல்மதிப்பை அளவிட 
புகையும், குடியும் மட்டுமே 
அளவுகோல்களாக்கி விட வேண்டாம். 
 
ஆயிரம் சொல்லி விளக்கினாலும்
அப்பாவி  ஆண்களுக்கும் உண்டோ  கற்பு!
 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“தேடல்”


ஏன் தேடுகிறோம்,
எதை தேடுகிறோம்,

எங்கு தேடுகிறோம்,
 
எதற்கு தேடுகிறோம்,
 
எப்படி தேடுகிறோம்,
எப்போது தேடுகிறோம்,
ன்பதை தவிர்த்து

ஒன்று கிடைக்கும் வரை தேடுகிறோம்,
கிடை
த் பின் அடுத்ததை தேடுகிறோம்.

நிம்மதி மறந்து
நித்திரை துறந்து
நித்தம் தேடுகிறோம்.
 
தேடல் மட்டும் திகட்டி விட்டால்
தேகம் விட்டு ஜீவன் போய்விடும்.
 
தேடல் தொடரட்டும்…
 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“கடவுள்”

அவசியம் என்றில்லாமல்,
அறியப்படாத ஒன்றை,
அனுமானங்களின் அடிப்படையில்,
அதிகமானோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டதே
“கடவுள்”.
 

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

“வரதட்சணை”

ஈரேழு வருடம் பின்பு,
ஈன்றவளிடம் கூட
காட்டாத அழகை,
மணமான இன்றிரவே
மணாளன் உன்னிடம்,
மறைவேதும் இல்லாமல்
மறுப்பேதும் சொல்லாமல்
மனமேதும் கோணாமல்
மானழகை பகிர்ந்தேன்.
இதற்கு நீர் தான்
தரவேண்டும் தட்சணை
“வரதட்சணை”.

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

 
%d bloggers like this: