RSS

Category Archives: பாசம்

“முரண்”

முரண்மூன்றாம் வகுப்புத்தான் படித்தாய்,
மூலதனமாய் முயற்சியை வைத்தாய்,
முன்னேற முழுமூச்சாய் உழைத்தாய்,
மூன்றடுக்கு மாளிகையில் நான்,
முதியோர் இல்லத்தில் நீ…

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

“அக்கா”

அக்கா

மூத்தவளாய் நீ பிறந்து
முதுகிலே எனைச்  சுமந்தாயே

பக்கத்து  பள்ளிக்குகூட
கைப்பிடித்து செல்வாயே

ஆசை  மிட்டாய்-யை
பாதி கடிச்சு கொடுப்பாயே.

அடித்து வைத்து அழும் போது
அடிக்கமாட்டேனென்று பொய் சூளுரைப்பாயே.

உரிமையாய் சண்டைபோட்டு
உண்மையாய் உறவாடுவாயே.

நீ வாங்கிய சம்பளத்தை
நான் படிக்க பரிசளித்தாயே.

அடையாளம் தேடித்திரிந்த காலத்தில்
ஆறுதலாய் துணை நின்றாயே.

கண்கலங்கி நான் நின்றால்
கை கொடுக்க தவறாயே

சோதனை கண்ட நெஞ்சை
சாதனை காணச் செய்தாயே

பெற்றெடுத்த உன் பிள்ளைக்கு
பெருங்காவல் நான் என்றாயே

மறுஜென்மம் உண்டென்றால்
மறவாமல்  உடன் பிறப்பாய்.

ஆயிரம் உலகம் சொன்னாலும்
அடுத்த அன்னை நீதானே!

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“அடையாளம்”

"அடையாளம்"
கடைசி ஆண்டின்
கல்லூரி கவிதைப்போட்டி.
கடந்தமுறை வென்றதால்
கர்வத்துடன் கலந்துகொண்டேன்.
 
தலைப்பு தந்த
கால்மணி நேரத்திற்குள்
கவிதை சொல்ல வேண்டும்.
இதுதான் நிபந்தனை.
 
அனைவரும் ஆவலாய்
எதிர்பார்க்க
அதிர்வாய் வந்தது 
“அடையாளம்”-எனும் தலைப்பு.
 
அடுத்த நொடியில்
அழகாய் சொன்னேன்
“அப்பா”.
 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

“அன்பு”

அன்பு
குழந்தைகள் நம்மிடம்
எதிர்பார்ப்பது அன்பை மட்டுமே.
பொருட்களை அல்ல…
 
உண்மையான அன்பு 
என்பது
மன்னித்தலும், விட்டுக்கொடுத்தலும் தான்…
 
அன்பு காட்டப்படும்
இடத்தில் 
கடவுள் பிறக்கிறார்…
 
அன்பு 
மகிழ்ச்சியாய் இருக்கவும்
மகிழ்ச்சியாய் இறக்கவும்…
 
உயிரும் மெய்யும்
உயிர் மெய்யும்
உடன்போக்கு அன்பு…
 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

“அப்பா”

அம்மா வயிற்றில் கருவூன்ற
அளவற்ற ஆனந்தம் அடைந்திட்டாய்.

ஆண்மகன் என்னை  ஈன்றெடுக்க
அன்றே மீசை முருக்கிட்டாய்.

அடிமேல் அடிஎடுத்து  நான்வளர
அணு அணுவாய் ரசித்திட்டாய்.

அண்ட அகிலமும் எனைக்காண
அழகாய் ஆடை அணிவித்தாய்.

எட்டி உதைத்ததை எண்ணி
மார்தட்டி இறுமாப்பு கொண்டிட்டாய்.

ஆயிரம் சுமைகள் நீசுமந்து
அருமை மகனை வளர்த்திட்டாய்.

என் தேவை நிறைவேற்ற
உன் தேவை குறைத்திட்டாய்.

தடுமாறி தயங்கிய காலத்தில்
தோழனாய் தோள் கொடுத்திட்டாய்.

தடம்மாறி தவித்த தருணத்தில்
தட்டி தன்னம்பிக்கை தந்திட்டாய்.

தோல்வியில் துவண்டு அழுகையில்
தோள் சுமந்து நின்றிட்டாய்.

வேலையின்றி வெட்டியாய்  சுற்றினாலும்
வேட்கையுடன் வெண்சாமரம் வீசிட்டாய்.

வானகம் விஞ்சி வாழ்ந்தாலும்
உத்தமனாய் உயிர்வாழக் கற்பித்தாய்.

என்பெயர் முன்னும் பின்னும்
முத்திரையில் முகவரியை பதித்திட்டாய்.

போலியில்லா உன்முகம் கண்டாலே
பொலிவுடன் பொதியினை சுமப்பேனே!

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

“அம்மா”

நீ தான் என் முதற் சொந்தம்
நீ சொல்லி தெரிந்தது பிற பந்தம்

பனி,குளிர்,மழை,வெயில் என நீ தாங்கி
கருவறையில் என்னைக் காத்தவளே

என் உதை நீ தாங்கி
அந்த எமனையும் வென்றவளே

இறுதியாய் என்னை ஈன்றாலும்
இன்றுவரை ஈரம் குறையல்லையே

உன் உதிரம் உருக்கி
என் பசி போக்கியவளே

நான் பெய்த மூத்திரத்தில்
உன் முகம் துடைத்தவளே

உன் பெயர் ஊர் கேட்க
அம்மா எனச் சொன்னேனே

நீ கொடுத்த முத்தங்கள்
நெஞ்ஞாங்கூட்டில் இன்றும் இனிக்கிறதே

உன் மடி நான் சாய்ந்தால்
என் தலை முடி கோதியவளே

அப்பா அடிச்சா வலிக்குமுன்னு
வலிக்கா பாணத்தை தொடுத்தவளே

ஊரே எனை ஏசினாலும்
உனக்கு ராசா நான்தானே

நீ பாடு பட்டது
நான் வாங்க பட்டமானது

உன்னப் பத்திக் கவி பாட
இந்தக் காகிதமும் பத்தலையே

உன் நினைவை நான் முடிக்க
இந்தக் காலமும் மீளாதே

உன் கடனை நான் முறிக்க
என் எழு ஜென்மம் போதாதே

உன்னப் பத்தி நான் சொன்னா
உண்மை சுடுமடி, உதிரம் கொதிக்குமடி

உன தருமை நான் நினைச்சா
உள்ளம் கனக்குதடி, உயிரே வலிக்குதடி

திரைக் கடல் ஓடி திரவியம் தேட
உனைக் காப்பகம் சேர்த்தேனே

இந்தப் பாவம் நான் கழிக்க
மகளாய் மறுபிறவி நீ பிறப்பாயா?

உனை உச்சரிக்கும் போதெல்லாம்
உலகமே உன்னுள் அடங்குமடி

………… ” அம்மா “…………

சமர்ப்பணம் :
எனதருமை அம்மாவுக்கு,
அருமை மகனாய்,
அன்புப் பரிசாய்…

 

குறிச்சொற்கள்: , , , , , ,

“காத்திருப்பேன்”

காத்திருப்பதும் ஒரு வகை சுகம்தான்
அதுவும் உனக்காக என்றால் தனி சுகம்தான்

நீ நேரத்திற்க்கு வந்ததில்லை என்று தெரிந்தும்
நேரத்திலே வந்து காத்திருப்பேன்

அழுத விழியோடு
அலையின் கரையில் காத்திருப்பேன்

காலம் காத்திராதெனினும்
நாணலாய் நான் காத்திருப்பேன்

நித்திரை துறந்தேனும்
நினைவுகளில் வாடிக் காத்திருப்பேன்

சொந்தக் கனவைச் சேர்த்து
சொல்ல வழியின்றிக் காத்திருப்பேன்

என்றேனும் வந்துவிடுவாய் என
வழி பார்த்துக் காத்திருப்பேன்

மறுபிறவி உண்டெனில்
உன் மடிசாயக் காத்திருப்பேன்

காத்திருப்பேன் உன்னோடு வாழ‌…
காத்திருப்பேன் உனக்காக வாழ‌…

 

குறிச்சொற்கள்: , , , , , ,

“ரசனை”

சுவரெங்கும் பென்சில் கிறுக்கல்
அங்குமிங்குமாய் சிதறிய விளையாட்டுப் பொருட்கள்
அடையாளம் தெரியாமல் கிழித்தெறியப்பட்ட அட்டைப்பெட்டி
கடுகடுத்துப் போனேன் …
உணவைக் கசக்கிப் பிசைந்து சட்டையில் பூசியவாறு
என் கண் பார்த்து சிரிக்கும், என் மகன்-
சொல்லும் கவிதைகள் நூறு.
ரசனையை ரசிக்க வைத்ததே இவன்தானே!!!

 

குறிச்சொற்கள்: , , ,

“புதுப்பிறவி”

சுகமாய் நீ வர எண்ணி
கத்திக் கூவாமல், கத்தியோடு போராடி
சுதந்திரமாய் வெளி வந்தாய்…

ஈரைந்து மாதத்தின் வலியை
இருநொடியில் மறைத்தாய்…

கண் மூடிய நிலையிலும்
கரு விழிகள் உனைத் தேடின…

உடல் எனை மறத்தாலும்
எனதுயிர் நினைத்தது உன்னை…

நான் மறு பிறவி எடுத்தாலும்
உன் “புதுப்பிறவி”-க்கு ஈடாகாது கண்ணே !!!

 

குறிச்சொற்கள்: , ,

 
%d bloggers like this: