உண்ணாவிரதம் இருந்தோம்
உங்களுக்கு தெரியலப்போல…
மண்டை ஓடு அணிந்தோம்
மனுவைக்கூட வாங்கவல்ல…
மண்சட்டி ஏந்தி நின்னோம்
மயிராக்கூட மதிக்கல…
சடலமா படுத்து,சங்கு வேற ஊதினோம்
சந்திக்ககூட நேரமில்ல…
கழுத்துல கயித்தைக் கட்டி,கத்தினோம்
காது கொடுத்துக்கூட கேக்கல…
பாதி தாடி,மீசையை மழித்தோம்
பார்த்து பேசக்கூட மனசுவல்ல…
எலிக்கறியையும் தின்னோம்
ஏலெடுத்துக்கூட பாக்கல…
எப்படி,எப்படியோ போராடினோம்
எட்டிப்பார்க்கக்கூட தோணல…
அன்னமிட்டவன் அம்மணமாய்…
அரசாங்கமும் அவ்வண்ணமாய்…
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
குறிச்சொற்கள்: அன்னமிட்டவன், அம்மணம், அரசாங்கம், அவ்வண்ணம், உண்ணாவிரதம், எட்டிப்பார், எலிக்கறி, காது, சங்கு, சடலம், சந்திப்பு, தாடி, பேச, மண்சட்டி, மண்டை ஓடு, மனசு, மனு, மழி, மீசை, முதுகெலும்பு
ஊருக்கே உணவளித்தவன்
உடுத்த உள்ளாடைதான்.
உள்(ள) ஆடையை காப்பாற்ற
உயிராய் உழைக்கிறான்.
உள்ளதையும் உருவ
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
குறிச்சொற்கள்: ஆடை, உடுத்துதல், உணவளித்தவன், உணவு, உயிர், உருவ, உறக்கம், உறங்காமல், உள்ளது, உள்ளாடை, உழவன், உழை, உழைப்பு, ஊர், கவிதை, காப்பாற்ற, விவசாயம், விவசாயி
காளமாடு ரண்டு பூட்டி
கலப்பைய அதுல மாட்டி
கழனிய ஏர் உழுதா,
பெரண்டு விழுற மண்ணப்
பாத்தா, கொள்ள அழகடி!
காலம் பார்த்து
வெதச்ச வெத,
மண்ணப் பொளந்து
மொளச்சு வந்தா,
மனசே குளுருதடி!
வேளா வேளைக்கு
தண்ணி பாச்சி,
உரத்தப் போட்டா,
தகப்ப மனசு
தன்னால வந்து சேருதடி!
ஒருநா வயலுக்கு போகலைனா,
மறுநா எனப் பாத்து
“ஏ நேத்து வந்து பாக்கல?”-னு
ஏதோ உரிமையில
கேள்வியா கேக்குதடி!
வளந்து, வயசுக்கு வந்த
பொம்பள மாதிரி
தலைய குனுஞ்சு நிக்கிற
அழக, பாக்கற பாக்கியம்
கெடச்சவ எவனடி!
சுமக்க முடியலைனு,
அறுத்து குமுச்சு
அதுகள வாரி
நெஞ்சோட அணச்சா,
கெடைக்கற சுகம்…
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
குறிச்சொற்கள்: அணைத்தல், அறுத்து, அழகு, உரம், உரிமை, உழுதல், ஏர், ஒருநாள், கலப்பை, கழனி, காலம், காளமாடு, கேள்வி, சுகம், சுமை, தகப்பன், தண்ணி, தலைகுனிந்து, நெஞ்சு, நேத்து, பாக்கியம், பூட்டி, பொம்பள, மண், மனசு, மறுநாள், முளைத்து, ரண்டு, வந்து, வயசு, வயல், வளந்து, விதை, விவசாயி, வேளை

கனவுகளின் தேசம்
கற்பனைகளின் ஒளிப்பதிவு
கடவுளின் உறைவிடம்
காதலின் கருவறை
கதையளக்கும் கலைக்கூடம்
கவலைகளின் மயானம்
வசந்தம் வீசும் வாலிபச்சோலை
தென்றல் தீண்டும் மலர்வனம்
போதி மரங்களின் கானகம்
பறவைகளின் கூடல்
புள்ளிமான்களின் புகலிடம்
புலிகள் வாழும் கூடாரம்
பட்டாம்பூச்சி பறக்கும் வயசு
பாடங்கள் பதியா மனசு
வரையறை இல்லா நட்பு
வண்ண மயில்களின் அணிவகுப்பு
ஏதுமறியாத மனங்கள்
எதிர்பார்பில்லா குணங்கள்
விழிகளின் விளையாட்டுக்கள்
தரைதவழும் விண்மீன்கள்
எச்சில் பண்டங்கள்
கருவாச்சி காவியங்கள்
கேலிக் கிண்டல்கள்
போலிச் சண்டைகள்
வீண் அரட்டைகள்
கண்ணைச் சொருகும் மதிய வகுப்புகள்
ஓரிரவில் முடிக்கப்படும் ஓராண்டுப் புத்தகங்கள்
ஒரே நிற ஆடை அணிந்த நாட்கள்
ஒவ்வொன்றும் ஒப்பில்லா உயிரோவியம்.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
குறிச்சொற்கள்: ஆடை, ஒளிப்பதிவு, கனவு, கருவறை, கற்பனை, கலைக்கூடம், கல்லூரி, கவலை, காதல், கானகம், காவியம், கூடல், கூடாரம், கேலி, சண்டை, சோலை, தென்றல், தேசம், நட்பு, பட்டாம்பூச்சி, புகலிடம், புலி, புள்ளிமான், போதி மரம், மயானம், வண்ண மயில், விண்மீன், விழிகள்

சூரியனையும்
சில நிமிடங்கள் சிறைப் பிடித்து விடுகின்றன.
காலைப் பனித்துளி.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
குறிச்சொற்கள்: சிறை, சூரியன், பனித்துளி

பசி
சாதி, சமயமற்ற
சமத்துவப் பேய்.
பசி
பஞ்சப் பரதேசிக்கும், பரம்பரைப் பணக்காரனுக்கும்
பாரபட்சமற்ற பாதகன்.
பசி
கனவுகளையும், கற்பனைகளையும்
இடுகாட்டில் இடுவது.
பசி
உணவுப் பருக்கையை உட்கொள்ள
உணர்ச்சியின் வேட்கை.
பசிக்கு உணவுண்ட காலம் மாறி
இன்று
ருசிக்கு உணவுண்டோம்.
பணம் என்ற காகிதம்
இன்றோ
பசி போக்கும் ஆயுதம்.
விருந்தளித்து விளக்கணைத்த வீட்டில்
விலைகொடுத்து
வீணடித்து வீசுகிறோம்.
கைநீட்டி பசியாற்றுவதை விட
பட்டினியில்
படுத்துறங்கிப் பழகினோம்.
பசி
இல்லாத உலகம்
பிணங்கள் வாழும் கூடம்.
பசி
நாகரிகத்திற்கு பிறப்பிடம்.
பசி
உயிரை உயிரென உணர்த்துவது.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
குறிச்சொற்கள்: ஆயுதம், இடுகாடு, உணர்ச்சி, கூடம், பசி, பணம், பரதேசி, பிணம், பேய், வேட்கை

இயற்கை எனும்
வாலிபக் கலைஞனின்
தூரிகைச் சிதறல்கள்.
கார்மேகம் களவியலில் கருவுற்று
பெற்றெடுத்த
வெண்முத்துப் பிள்ளைகள்.
காரிருள் கறையை நீக்கி
வெண்மொட்டு மேகமாய்
மாற போடப்படும் ஒப்பனை.
வான்வெளியின் வர்ணஜாலம்.
வான்முகிலின் நிராகரிப்பு.
இணையா வானையும்-மண்ணையும்
இணைக்கும் நீர்க்கயிறு.
உன்னால் கிறுக்கப்பட்ட
கிறுக்கலாய்
மின்னல்.
உனக்கான எச்சரிக்கை
விளக்காய்
வானவில்.
வான் மேகத்தின் எச்சம்
செம்மண் தரையின் அமிர்தம்.
வான் அழுகின்ற போது
எங்கள் வாழ்க்கை குளிர்கிறது.
வடிகட்டி போகும் உனை விடுத்து
வழிமிஞ்சி நிற்பதை பங்கு பிரிக்கிறோம்.
விரயமாகும் உனை விதைத்திட்டு
விவசாயின் விதையை முத்தாய் மாற்றிடு.
கருவேலங் காட்டுக்கும் கஞ்சி காட்டுவான்
கண்ணீரையும் கரைக்கும் இந்த கயவன்.
இயற்கையோடு இதயத்தை இணைக்க
உன்னில்
நித்தம் நனைய நினைக்கிறேன்.
ஆயிரம் ஆனந்தம் அளித்தாலும்
பல முகம் பிழையாக்கும் மழை.
இந்த நிறமற்ற மழை
பலருக்கும்
பிழையாகும் மழை.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
குறிச்சொற்கள்: அமிர்தம், இயற்கை, கயவன், கிறுக்கல், நிறம், பிழை, மழை, மின்னல், முகம், வானவில்