RSS

“அக்கா”

05 மே

அக்கா

மூத்தவளாய் நீ பிறந்து
முதுகிலே எனைச்  சுமந்தாயே

பக்கத்து  பள்ளிக்குகூட
கைப்பிடித்து செல்வாயே

ஆசை  மிட்டாய்-யை
பாதி கடிச்சு கொடுப்பாயே.

அடித்து வைத்து அழும் போது
அடிக்கமாட்டேனென்று பொய் சூளுரைப்பாயே.

உரிமையாய் சண்டைபோட்டு
உண்மையாய் உறவாடுவாயே.

நீ வாங்கிய சம்பளத்தை
நான் படிக்க பரிசளித்தாயே.

அடையாளம் தேடித்திரிந்த காலத்தில்
ஆறுதலாய் துணை நின்றாயே.

கண்கலங்கி நான் நின்றால்
கை கொடுக்க தவறாயே

சோதனை கண்ட நெஞ்சை
சாதனை காணச் செய்தாயே

பெற்றெடுத்த உன் பிள்ளைக்கு
பெருங்காவல் நான் என்றாயே

மறுஜென்மம் உண்டென்றால்
மறவாமல்  உடன் பிறப்பாய்.

ஆயிரம் உலகம் சொன்னாலும்
அடுத்த அன்னை நீதானே!

Advertisements
 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

12 responses to ““அக்கா”

  1. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்

    05/05/2014 at 12:21

    வணக்கம்
    நெஞ்சை அள்ளிச்செல்லும் வரிகள் கவிதை சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

     
    • பழனிவேல்

      05/05/2014 at 13:36

      தங்களைப் போன்றோரின் வாழ்த்து
      எங்களைப் போன்றோருக்கு
      ஊக்கத்தையும்,உறுதியையும் தருகிறது.
      நன்றி

      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

       
  2. ranjani135

    05/05/2014 at 13:26

    வாருங்கள் பழனிவேல்! எத்தனை நாளாயிற்று உங்கள் எழுத்துக்களைப் படித்து?
    அக்காவைப் பற்றி நீங்கள் சொல்லி இருப்பது போல அக்கா நிச்சயம் இன்னொரு அம்மாதான்.
    நானும் என் அக்காவைப்பற்றி எழுதியிருக்கிறேன் இந்தப் பதிவில்:http://wp.me/p2RUp2-e
    தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்!

     
    • பழனிவேல்

      05/05/2014 at 13:47

      தங்களின் உரிமையான கேள்விக்கு நான் மிகவும் கடமைப் பட்டுள்ளேன்.
      மிகவும் மகிழ்ச்சி.

      தங்கள் பதிவினை படித்து ரசித்தேன்…
      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை எதிர்பாத்திருப்பேன்.

       
  3. ramesh116Ramesh

    12/05/2014 at 11:08

    Very nice palani

     
    • பழனிவேல்

      12/05/2014 at 13:28

      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி தோழரே…
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை எதிர்பாத்திருப்பேன்.

       
  4. கோவை கவி

    13/05/2014 at 18:49

    அருமைப் பாசம்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

     
    • பழனிவேல்

      14/05/2014 at 04:33

      தங்களைப் போன்றோரின் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை எதிர்பாத்திருப்பேன்.

       
  5. vadivu

    20/05/2014 at 06:55

    very nice…

     
    • பழனிவேல்

      20/05/2014 at 09:05

      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை எதிர்பாத்திருப்பேன்.

       
  6. vanitha

    08/06/2014 at 14:22

    I feel now… I don have elders… I m d first one😭

     
    • பழனிவேல்

      10/06/2014 at 04:46

      Thank you… Atleast my lines make this feeling. I am happy.
      தங்களின் வாழ்த்து எனக்கு ஊக்கத்தையும்,உறுதியையும் தருகிறது.
      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

       

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: