RSS

Monthly Archives: மே 2014

“அக்கா”

அக்கா

மூத்தவளாய் நீ பிறந்து
முதுகிலே எனைச்  சுமந்தாயே

பக்கத்து  பள்ளிக்குகூட
கைப்பிடித்து செல்வாயே

ஆசை  மிட்டாய்-யை
பாதி கடிச்சு கொடுப்பாயே.

அடித்து வைத்து அழும் போது
அடிக்கமாட்டேனென்று பொய் சூளுரைப்பாயே.

உரிமையாய் சண்டைபோட்டு
உண்மையாய் உறவாடுவாயே.

நீ வாங்கிய சம்பளத்தை
நான் படிக்க பரிசளித்தாயே.

அடையாளம் தேடித்திரிந்த காலத்தில்
ஆறுதலாய் துணை நின்றாயே.

கண்கலங்கி நான் நின்றால்
கை கொடுக்க தவறாயே

சோதனை கண்ட நெஞ்சை
சாதனை காணச் செய்தாயே

பெற்றெடுத்த உன் பிள்ளைக்கு
பெருங்காவல் நான் என்றாயே

மறுஜென்மம் உண்டென்றால்
மறவாமல்  உடன் பிறப்பாய்.

ஆயிரம் உலகம் சொன்னாலும்
அடுத்த அன்னை நீதானே!

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“எங்கள்-பாரதி”

"எங்கள்-பாரதி"

 

பெண்ணியம் பேசியவன்
கண்ணியம் காத்தவன்
எண்ணியதை எழுதியவன்
எண்ணங்களில் உயர்ந்தவன்

விடுதலை-யை விரும்பியவன்
வீரத்தை விதைத்தவன்
வார்த்தையில் வாழ்ந்தவன்
ரவுத்திரம் பழக்கியவன்

கருத்துகளால் கவர்ந்தவன்
சிந்தனையில் சிறந்தவன்
தமிழைக்  காதலித்தவன்
தமிழ்த்தாயை வளர்த்தவன்

‘எங்கள்-பாரதி’

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“பிறப்பு-வாழ்க்கை-இறப்பு”

பிறப்பு-வாழ்க்கை-இறப்பு

 

என் கவிதையின்
முதல் வரி
“பிறப்பு”.

தாங்கள் நினைப்பது போல்
கடைசி வரி
“இறப்பு”.

இடைப்பட்ட வார்த்தைகளின்
நிரப்பே
“வாழ்க்கை”.

 

குறிச்சொற்கள்: , , , , , , , ,

 
%d bloggers like this: