RSS

Monthly Archives: பிப்ரவரி 2013

“எல்லைக்கோடு”

எல்லைக்கோடு
வறுமைக்கோடு காரணமாய்
எல்லைக்கோடு மறந்து
கடல்தாண்டி மீன்பிடித்தோம்.
கைதாகி காயம்பட்டோம்.
இனிமேல்,
மீன்களுக்கும் கற்றுக்கொடுப்போம் 
எல்லைக்கோடு.
Advertisements
 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

“அன்பு”

அன்பு
குழந்தைகள் நம்மிடம்
எதிர்பார்ப்பது அன்பை மட்டுமே.
பொருட்களை அல்ல…
 
உண்மையான அன்பு 
என்பது
மன்னித்தலும், விட்டுக்கொடுத்தலும் தான்…
 
அன்பு காட்டப்படும்
இடத்தில் 
கடவுள் பிறக்கிறார்…
 
அன்பு 
மகிழ்ச்சியாய் இருக்கவும்
மகிழ்ச்சியாய் இறக்கவும்…
 
உயிரும் மெய்யும்
உயிர் மெய்யும்
உடன்போக்கு அன்பு…
 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

“காதலனின் காதலி”

காதலனின் காதலி
தவறென்று உணர்த்த
தவறொன்று செய்யாதீர்.
பாதை முடியும் வரை
பயணத்தை தொடருங்கள்…
இப்படிக்கு…
காதலனின் காதலி.
 

குறிச்சொற்கள்: , , , , , , ,

“ஓய்வுநாள்”

ஓய்வுநாள்
உழைக்கும் மக்களுக்கு
ஊக்கத் தொகை – ஓய்வுநாள்.
 
மறுநாள் உழைப்பதற்க்கான
உந்து சக்தி – ஓய்வுநாள்.
 
சமுகரீதியில் வாழ்வியல்
பிரச்சனைகளை களைவது – ஓய்வுநாள்.
 
அனுமதியில்லாமல் ஊடகங்களால்
களவாடப்பட்டது இந்த – ஓய்வுநாள்.
 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

“அடிமை”

அடிமை
அடிமை இனத்தை
அழிக்க முடியாது.
அவள் உள்ளவரை…
 

குறிச்சொற்கள்: , , , , ,

“மனிதன்”

மனிதன்
மனிதன்
மனமும்,
புத்தியும்
ஒருசேர
படைக்கப்பட்டு,
சுதந்திரமாய்
தண்டிக்கப்பட்டவன்.
 

குறிச்சொற்கள்: , , , , , , ,

 
%d bloggers like this: