RSS

“ஆண்கள்”

11 டிசம்பர்
 Aangal
முப்பது வயதை கடந்து விட்டது
முன் நெற்றில் முடியும் கொட்டிவிட்டது
செல்லத் தொப்பையும் வந்து விட்டது.
 
கல்லூரிக் கனவுகளை கலைத்து விட்டு
கணிப்பொறியின் காதலனாய் காவல் பட்டோம். 
காசில்லா விட்டாலும் காதலுக்கு பஞ்சமில்லை
காதல் தோல்விகளும் கொஞ்சமில்லை.
 
ஓர் இலக்க குரோமொசோம் குளறுபடியால்
அடித்து வரப்பட்ட
ஆணாதிக்க வர்க்கத்தினர்.
 
இனிய இளமையை
இ.எம்.ஐ-லேயே இழந்து  விட்டு 
பணம் காய்க்கும் எந்திரமாக மாற்றப்பட்டோம்.
இதும் ஓர் வகை ஆண் பாலியல் தொழில் தானோ?
 
பொறுப்பற்ற பொறுக்கிகளா ஆண்கள்?
அக்காவின் பேறுகாலம்,
தங்கையின் திருமணம்,
அப்பாவின் மருத்துவம்,
அம்மாவின் வளையல்,
வீட்டுக் கடன்,
தம்பின் படிப்பு 
என ஏதேனும் பொறுப்புகளை சுமக்கும் தியாகிகள்.
 
நண்பர்களுக்கு  இடையே
நட்பின் அடர்த்தி வேண்டுமானால், 
கூடக் குறைய இருக்கலாம். 
ஆனால்,
கடைசி காசு வரை 
நண்பர்களுக்காகச் செலவிடும் 
மனங்களுக்கு குறைவிருக்காது.
 
அன்பு நிறைந்த ஆணின் 
நல்மதிப்பை அளவிட 
புகையும், குடியும் மட்டுமே 
அளவுகோல்களாக்கி விட வேண்டாம். 
 
ஆயிரம் சொல்லி விளக்கினாலும்
அப்பாவி  ஆண்களுக்கும் உண்டோ  கற்பு!
Advertisements
 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

14 responses to ““ஆண்கள்”

  1. balu

    11/12/2012 at 15:33

    awesome da.. u r genious da..

     
    • பழனிவேல்

      12/12/2012 at 05:30

      நண்பா, இந்த கவிதையின் கருவிற்கு நீயூம் ஓர் காரணம்.
      வாழ்த்துகளை பகிர்வோம்…
      நன்றி

      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை எதிர்பாத்திருப்பேன்…

       
  2. ranjani135

    12/12/2012 at 05:48

    ஆண்களின் அருமையை வெகு சிறப்பாக இந்தக் கவிதையில் கூறி விட்டீர்கள், பழனிவேல்!
    ‘புகையும், குடியும் மட்டுமே அளவுகோல்களாக்கி விட வேண்டாம்’ – உங்கள் வேண்டுகோள் எல்லோருக்கும் கேட்கட்டும்.

     
    • பழனிவேல்

      12/12/2012 at 06:32

      “உங்கள் வேண்டுகோள் எல்லோருக்கும் கேட்கட்டும்.”

      சரியாக சொன்னீர்கள்
      தங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை எதிர்பாத்திருப்பேன்…

       
  3. Dr.M.K.Muruganandan

    13/12/2012 at 09:54

    ஆண்களின் பாடுகளாய்
    அற்புதமாக வரிகளாக
    அருமை

     
    • பழனிவேல்

      13/12/2012 at 12:42

      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை எதிர்பாத்திருப்பேன்…

       
  4. கோவை கவி

    25/12/2012 at 06:37

    சில ஆண்களின் மனவேதனை வரிகள் ஓர வடிகாலாகும். ம்…ம::.
    என்ன செய்வது உலகம் பலவிதம்.வரிகளை ரசித்தேன்.
    தாமத கருத்துகளிற்கு மன்னிப்புடன்
    வேதா. இலங்காதிலகம்.

     
    • பழனிவேல்

      26/12/2012 at 03:55

      “சில ஆண்களின் மனவேதனை வரிகள் ஓர வடிகாலாகும். ம்…ம::.
      என்ன செய்வது உலகம் பலவிதம்.வரிகளை ரசித்தேன்.”

      அழகான கருத்திடல்.
      மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை எதிர்பாத்திருப்பேன்…

       
  5. pavikothai

    11/01/2013 at 10:51

    ஒரு ஆண்மகனின் மனதை அழகாக பதிவு செய்திருக்கிறாய் நண்பா. உன் கவிதைகள் ஒவ்வொன்றும் ஒரு செய்தி சொல்கிறது. உன் எண்ணங்களின் தெளிவை கண்டு வியக்கிறான். வளரட்டும் உன் எண்ணங்கள். வாழ்க உன் கவிதை தமிழ்

     
    • பழனிவேல்

      16/01/2013 at 06:57

      தங்கள் வாழ்த்து எங்களை வளமாக்கும்.
      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை எதிர்பாத்திருப்பேன்…

       
  6. கோவை கவி

    02/02/2013 at 09:13

    such a Deep lines..
    congratz…..

     
    • பழனிவேல்

      04/02/2013 at 06:14

      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

       
  7. lakshmi

    13/05/2014 at 05:00

    I visualise the outburst of a guy………. which makes me respect more the Males………..superb

     
    • பழனிவேல்

      13/05/2014 at 09:43

      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை எதிர்பாத்திருப்பேன்.

       

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: