கவிஞன் என்றதும்
காதல் தோல்வியா? – என்று தான் அடுத்த கேள்வி.
கவிஞர்கள் காதலித்து தோற்றுவிட்டார்களா? – இல்லை
காதலித்து தோற்றதால் கவிஞர்களாக்கப்பட்டார்களா?
கனவுகள் சுமக்கும் வயதில் காதலைக் கண்டதால்
கவிதை வடித்து காவியம் படைக்கிறார்கள்.
கல்லறைக் காதல் என்றாலும் கடைசிவரை
கவிதைக்குள்ளே காதல் வளர்க்கிறார்கள்.
காரணம் பலவகைப் பட்டாலும்
கவிஞன் என்று ஓர்குலப் படுத்திய
காதல் வாழ்க.
“காதல் வாழ்க”
21
செப்
கவிஞா் கி பாரதிதாசன்
22/09/2012 at 09:35
வணக்கம்!
பழனிவேல் பாடல் பசுந்தமிழ் அன்னை
கழனியில் வந்த கதிர்!
செவியைக் குளிரச் செய்திடவே
செய்த கவிதை படித்திட்டேன்!
சுவையைக் கொட்டி வைத்ததுபோல்
கொடுத்த கவிதை இனித்ததுவே!
கவியை உயிராய்க் காக்கின்ற
கவிஞன் காலக் கண்ணாடி!
புவியைப் புரட்டப் புரட்சிநடை
போடும் அஞ்சாப் போராளி!
கவிஞா் கி.பாரதிதாசன்
தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
http://bharathidasanfrance.blogspot.fr/
kavignar.k.bharathidasan@gmail.com
kambane2007@yahoo.fr
பழனிவேல்
22/09/2012 at 11:21
“செவியைக் குளிரச் செய்திடவே
செய்த கவிதை படித்திட்டேன்!
சுவையைக் கொட்டி வைத்ததுபோல்
கொடுத்த கவிதை இனித்ததுவே!
கவியை உயிராய்க் காக்கின்ற
கவிஞன் காலக் கண்ணாடி!
புவியைப் புரட்டப் புரட்சிநடை
போடும் அஞ்சாப் போராளி!”
ஐயா,
தங்கள் வருகை கண்டு மிகவும் பூரிப்படைந்தேன்.
கருத்திடல் கண்டு பரவசமடைந்தேன்.
அதிலும்
“கவியை உயிராய்க் காக்கின்ற
கவிஞன் காலக் கண்ணாடி!”
என்ற வரி என்னை மிகவும் கவர்ந்திட்டது.
தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
வருகையை எதிர்பாத்திருப்பேன்…
Vetha.Elangathilakam.
24/09/2012 at 20:47
”…கல்லறைக் காதல் என்றாலும் கடைசிவரை
கவிதைக்குள்ளே காதல் வளர்க்கிறார்கள்….”’
உண்மையான வரி சகோதரா.
நல்வாழ்த்து.
பழனிவேல்
25/09/2012 at 03:45
தங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
வருகையை எதிர்பாத்திருப்பேன்…
Ambaladiyal
28/09/2012 at 19:03
மிகவும் சிறப்பான சிந்தனைகளைத் தாங்கி வந்த கவிதை
அருமை !…காதல் இல்லையேல் கவிஞர்களும் இல்லை
என்பதே உறுதி என வலியுறுத்திய கவிதைப் பகிர்வுக்கு
மிக்க நன்றி மேலும் தொடர வாழ்த்துக்கள் .
பழனிவேல்
29/09/2012 at 03:34
“காதல் இல்லையேல் கவிஞர்களும் இல்லை என்பதே உறுதி”
ஆம் உண்மை தான்…
தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
வருகையை எதிர்பாத்திருப்பேன்…
kowsy
28/09/2012 at 19:08
காதல் பற்றி பாடாத கவிஞன் இல்லை. கவிஞர்களை ஒரு குலமாய் இணைக்கும் காதல் வாழ்க . கவிதந்த தாங்களும் வாழ்க
பழனிவேல்
29/09/2012 at 03:35
தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
வருகையை எதிர்பாத்திருப்பேன்…
pavikothai
29/09/2012 at 04:41
கனவுகள் சுமக்கும் வயதில் காதலைக் கண்டதால்
கவிதை வடித்து காவியம் படைக்கிறார்கள்.
கல்லறைக் காதல் என்றாலும் கடைசிவரை
கவிதைக்குள்ளே காதல் வளர்க்கிறார்கள்.
nice lines sir
பழனிவேல்
29/09/2012 at 07:29
வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
வருகையை எதிர்பாத்திருப்பேன்…
Dr.M.K.Muruganandan
10/10/2012 at 17:57
“..கவிஞன் என்றதும்
காதல் தோல்வியா? ..”
இல்லை காதலில் ஜீவிதம் செய்பவன்
பழனிவேல்
11/10/2012 at 07:08
சரியாக சொன்னீர்கள்
தங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
வருகையை எதிர்பாத்திருப்பேன்…
ranjani135
01/11/2012 at 06:05
எனக்குக் கூட சோகத்தில் தான் கவிதை பிறக்குமோ என்று தோன்றும். அதை நிரூபிக்கும் வகையில் கவிஞர்கள் தங்களது வலைத்தளங்களுக்கு ‘விடியாத இரவுகள்’, ‘கலைந்த கனவுகள்’, என்றே பெயர் வைக்கிறார்கள்.
நீங்கள் மனிதம் என்று பெயர் வைத்திருப்பது எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது.
உங்கள் கவிதையையும் ரசித்தேன்.
கவிஞன் என்றால் காதல் தோல்வியா? – ஆரம்ப வரிகளே அபாரம்!
பாராட்டுக்கள்!
பழனிவேல்
02/11/2012 at 15:52
“எனக்குக் கூட சோகத்தில் தான் கவிதை பிறக்குமோ என்று தோன்றும். அதை நிரூபிக்கும் வகையில் கவிஞர்கள் தங்களது வலைத்தளங்களுக்கு ‘விடியாத இரவுகள்’, ‘கலைந்த கனவுகள்’, என்றே பெயர் வைக்கிறார்கள்.
நீங்கள் மனிதம் என்று பெயர் வைத்திருப்பது எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது.”
தங்களைப் போன்றவர்கள் என் தளத்திற்கு வருகை தருவதும்,
கருத்து சொல்லி வளர்ப்பது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.
நன்றிகள் பல…
தங்கள் வலையை வாசித்து நேசித்தேன்.
அழகான பணி… மேலும் தொடரற்றும்…
தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி .
வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
தங்கள் வருகையை எதிர்பாத்திருப்பேன்…
கோவை கவி
15/11/2012 at 16:58
Happy late deepavli vaalththu….
பழனிவேல்
16/11/2012 at 03:44
THANK YOU…