RSS

“காதல் முறிவு”

21 செப்

கதை கதையாய் பேசி
காதல் வளர்த்தோம்.

விடிய விடிய விழித்து
வாழ்வை விவாதித்தோம்.

நிழற்படங்களை பார்த்துக் கொண்டு
நிமிடங்களை நகர்த்தினோம்.

போட்டி போட்டுக் கொண்டு
பாசம் வைத்தோம்.

உறவுப் பெயர் வைத்து
உரிமையுடன் அழைத்தோம்.

உன் சொந்தங்களையும், என் சொந்தங்களையும்
நம் சொந்தங்களாக்கினோம்.

உனக்காகவே நானும், எனக்காகவே நீயும்
பிறந்தோம் என எண்ணினோம்.

எதிர்பாரமல் எதிர்ப்பு வந்ததும் 
எதிர்கொள்ளாமல் பிறிந்தோம்.

ஏதேதோ சொல்ல நினைத்து
எளிதாய் சொல்கிறேன்,

முடிந்தால் மன்னித்துவிடு
குறைந்தபட்சம் மறந்துவிடு.

Advertisements
 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

14 responses to ““காதல் முறிவு”

  1. Gopinath S

    21/09/2012 at 15:16

    கோபத்திற்கு சிந்தனையை அழிக்கும் தன்மை உள்ளது என்று நினைக்கிறேன்!!
    Nicely written the fact!!! Keep rocking with your tamil kavithai!!!

     
    • பழனிவேல்

      22/09/2012 at 05:39

      “கோபத்திற்கு சிந்தனையை அழிக்கும் தன்மை உள்ளது என்று நினைக்கிறேன்!!”

      ஆம் உண்மை தான்…
      கோபம் ஒரு மனிதனை நிர்வாணமாக்கிவிடும்.

      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி தோழரே
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை எதிர்பாத்திருப்பேன்…

       
  2. Vetha.Elangathilakam.

    24/09/2012 at 20:51

    ”..ஏதேதோ சொல்ல நினைத்து
    எளிதாய் சொல்கிறேன்,

    முடிந்தால் மன்னித்துவிடு
    குறைந்தபட்சம் மறந்துவிடு….”

    ஆம் அடுத்த வேலையைப் பார்க்கப் புறப்பட வேண்டியது தான்.
    காலப் போக்கில் ஆறமுடியும். வாழ்க அமைதி!
    நல் வாழ்த்து.
    Vetha.Elangathilakam.

     
    • பழனிவேல்

      25/09/2012 at 03:44

      ஆம் உண்மை தான்…
      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை எதிர்பாத்திருப்பேன்…

       
  3. Dr.M.K.Muruganandan

    28/09/2012 at 16:59

    “..முடிந்தால் மன்னித்துவிடு
    குறைந்தபட்சம் மறந்துவிடு…”
    இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கு.
    அருமை.

     
    • பழனிவேல்

      29/09/2012 at 03:33

      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

       
  4. vanitha

    29/09/2012 at 18:32

    now a days truth….

     
    • பழனிவேல்

      01/10/2012 at 03:45

      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி தோழி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை எதிர்பாத்திருப்பேன்…

       
  5. pathmasri

    04/10/2012 at 17:48

    காதல் தான் இந்த வரிகளுக்கும் காரணம் போல தெரிகிறது.அருமையான அனுபவங்கள்.
    நன்றியுடன்,
    -சிரபுரத்தான்-

     
  6. vadivu

    20/12/2013 at 04:58

    everything is superb…nice..

     
    • பழனிவேல்

      20/12/2013 at 05:04

      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை எதிர்பாத்திருப்பேன்.

       
  7. lakshmi

    13/05/2014 at 05:02

    the pain of luv…….the summary of lovers………….the reality show of true luv……… all the best for the luv

     
    • பழனிவேல்

      13/05/2014 at 09:43

      மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை எதிர்பாத்திருப்பேன்.

       

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: