RSS

“தேசம்”

08 ஆக

சுவை கல்வியை
சுமை என்றாக்கி
சுரண்டும்
கல்வி-ஒரு புறம்.

கடவுள் கொன்று
காமம் உண்டு
காவிஉடையில்
ஆன்மீகம்-ஒரு புறம்.

கள்ளப் பணதில்
வெள்ள உடையில்
கையாட்டும்
அரசியல்-ஒரு புறம்.

ஆடை குறைத்து
ஆபாசம் நிறைத்து
அசிங்கத்துடன்
கலை-ஒரு புறம்.

விதைத்தவன் வீதியிலே
விலைபொருளோ சந்தையிலே
விதியிலா
விவசாயி-ஒரு புறம்.

அடையாளம் அழிந்து
அடைக்கலம் புகுந்து
அடிமைகளாய்
அகதிகள்-ஒரு புறம்.

சூதாட்டம் சுகமென
விளையாட்டாய் விதைதூவ
விளையாட்டாய்
விளையாட்டு-ஒரு புறம்.

வேலை வேண்டி
காசைக் கட்டி
கவலையுடன்
இளைஞன்-ஒரு புறம்.

கடமை உணர்வை
கருக்கி எடுத்து விட்டு
காக்கி சட்டைக்குள்
காவல்-ஒருபுறம்.

காசை நிறைக்க
காப்பகம் நிறைக்கும்
கருணையிலா
பிள்ளைகள்-ஒரு புறம்.

திட்டம் தீட்டி
சத்தம் இன்றி
களவாடும்
களவானி-ஒரு புறம்.

வட்டி உயர்த்தி
பெட்டி நிறைத்து
துண்டைப்போடும்
நிதிநிறுவனம்-ஒரு புறம்.

அடுத்த பெண்ணின்
அணிகலனை அட்டவணையிடும்
அழுக்கு
அழகிகள்-ஒரு புறம்.

முகநூல் சென்று
முகவரி இழந்து
முடங்கிடும்
முயல்கள்-ஒரு புறம்.

ஒரு புறம்
மட்டும் போதும்,
எதையும் தாங்கும்
எங்களின் தேசம்.

எதிர்த்துப் பேசினால்
செவியில் மட்டுமல்ல
செவிட்டிலும் விழும்
எங்கள் தேசம்.

Advertisements
 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

8 responses to ““தேசம்”

  1. pavikothai

    11/08/2012 at 05:49

    such a nice lines. superb

     
  2. Vetha.Elangathilakam.

    16/08/2012 at 18:24

    ஆம் தேசமும் அப்படி.
    மனிதனும் அப்படி .
    மனிதமும் அப்படி.
    கன்னத்தில் அறைவது போல கூறப்பட்டுள்ளது.
    என்று திருந்துமோ உலகம்!
    பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.

     
    • பழனிவேல்

      17/08/2012 at 03:53

      “தேசமும் அப்படி.
      மனிதனும் அப்படி.
      மனிதமும் அப்படி.”

      தங்கள் வருகைக்கும்,கருத்திடலுக்கும் இன்று வரை காத்திருந்தேன்.
      பின்பு தான் எனது படைப்பு முழு வடிவம் பெரும்.
      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

       
  3. laksh

    06/09/2012 at 10:08

    Wow Pazhani !!!!!!!!!!!
    Its so nice, each and every word is 200% true……….
    Its absolutely true about our country.
    But the way you have written is Excellent

     
    • பழனிவேல்

      06/09/2012 at 11:12

      ஆம். இதுதான் இன்றைய உலக நடப்பு.
      தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை ஆவலுடன் எதிர்பாத்திருப்பேன்…

       
  4. vanitha

    07/09/2012 at 16:32

    No one see or bother about next side… so ly it happen…

     
    • பழனிவேல்

      08/09/2012 at 06:39

      ஆம் மனிதனும் மனிதமும் மாற வேண்டும்.
      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி தோழி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை எதிர்பாத்திருப்பேன்…

       

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: