என்
காதலை
தெரிந்தும்,
தெரியாமல்
என்
காதலியும்,
கடவுளும்
எனக்கு
ஒன்று
தான்.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
குறிச்சொற்கள்: எனக்கு, என், ஒன்று, கடவுளும்-காதலியும், கடவுள், காதலி, காதல், தெரியாது, தெரியும், நடக்கும், நடிக்கும்

ஏன் தேடுகிறோம்,
எதை தேடுகிறோம்,
எங்கு தேடுகிறோம்,
எதற்கு தேடுகிறோம்,
எப்படி தேடுகிறோம்,
எப்போது தேடுகிறோம்,
என்பதை தவிர்த்து
ஒன்று கிடைக்கும் வரை தேடுகிறோம்,
கிடைத்த பின் அடுத்ததை தேடுகிறோம்.
நிம்மதி மறந்து
நித்திரை துறந்து
நித்தம் தேடுகிறோம்.
தேடல் மட்டும் திகட்டி விட்டால்
தேகம் விட்டு ஜீவன் போய்விடும்.
தேடல் தொடரட்டும்…
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
குறிச்சொற்கள்: அடுத்து, எங்கு, எதற்கு, எதை, என்பது, எப்படி, எப்போது, ஏன், ஒன்று, கிடைத்தல், ஜீவன், தவிர்த்து, திகட்டு, துறந்து, தேகம், தேடல், தேடு, தொடரட்டும், தொடர், நித்தம், நித்திரை, நிம்மதி, பின், மறந்து

நம் காதலின்
நீங்காத நினைவுகளை
தூங்காது நினைக்கிறேன்.
கற்றுக் கொண்டு வாழ்வதற்கு அல்ல
பற்றிக் கொண்டு வீழ்வதற்கு…
என்னுள் உன்னை நிறைப்பதற்கு அல்ல
என்னுள் என்னை புதைப்பதற்கு…
உனை நினைப்பதற்கு அல்ல
எனை மறப்பதற்கு…
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
குறிச்சொற்கள்: அல்ல, உனை, உன்னை, எனை, என்னுள், என்னை, கற்று, கவிதை, காதல், தூங்காத, நினைப்பதற்கு, நினைவு, நினைவுகள், நிறை, நீங்காத, பற்றி, புதை, மறப்பதற்கு, வாழ்தல், வீழ்தல்
உணர்ச்சிகளை உருக்கி
கற்பனைகளை கலந்து
சொப்பனங்களை சேர்த்து
நினைவுகளை நிறைத்து
சிந்தனைகளை சிதைத்து
எழுத்துக்களை கோர்த்து
வார்த்தைகளாய் வார்த்து
என்னவளிடம் தந்தேன்
ஒரு “கவிதை”.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
குறிச்சொற்கள்: உணர்ச்சி, உருக்கி, என்னவள், எழுத்து, ஒரு கவிதை, கற்பனை, கலந்து, கவிதை, கோர்த்து, சிதைத்து, சிந்தனை, சேர்த்து, சொப்பனம், நினைவு, நினைவுகள், நிறைத்து, வார்த்து, வார்த்தை
சுவை கல்வியை
சுமை என்றாக்கி
சுரண்டும்
கல்வி-ஒரு புறம்.
கடவுள் கொன்று
காமம் உண்டு
காவிஉடையில்
ஆன்மீகம்-ஒரு புறம்.
கள்ளப் பணதில்
வெள்ள உடையில்
கையாட்டும்
அரசியல்-ஒரு புறம்.
ஆடை குறைத்து
ஆபாசம் நிறைத்து
அசிங்கத்துடன்
கலை-ஒரு புறம்.
விதைத்தவன் வீதியிலே
விலைபொருளோ சந்தையிலே
விதியிலா
விவசாயி-ஒரு புறம்.
அடையாளம் அழிந்து
அடைக்கலம் புகுந்து
அடிமைகளாய்
அகதிகள்-ஒரு புறம்.
சூதாட்டம் சுகமென
விளையாட்டாய் விதைதூவ
விளையாட்டாய்
விளையாட்டு-ஒரு புறம்.
வேலை வேண்டி
காசைக் கட்டி
கவலையுடன்
இளைஞன்-ஒரு புறம்.
கடமை உணர்வை
கருக்கி எடுத்து விட்டு
காக்கி சட்டைக்குள்
காவல்-ஒருபுறம்.
காசை நிறைக்க
காப்பகம் நிறைக்கும்
கருணையிலா
பிள்ளைகள்-ஒரு புறம்.
திட்டம் தீட்டி
சத்தம் இன்றி
களவாடும்
களவானி-ஒரு புறம்.
வட்டி உயர்த்தி
பெட்டி நிறைத்து
துண்டைப்போடும்
நிதிநிறுவனம்-ஒரு புறம்.
அடுத்த பெண்ணின்
அணிகலனை அட்டவணையிடும்
அழுக்கு
அழகிகள்-ஒரு புறம்.
முகநூல் சென்று
முகவரி இழந்து
முடங்கிடும்
முயல்கள்-ஒரு புறம்.
ஒரு புறம்
மட்டும் போதும்,
எதையும் தாங்கும்
எங்களின் தேசம்.
எதிர்த்துப் பேசினால்
செவியில் மட்டுமல்ல
செவிட்டிலும் விழும்
எங்கள் தேசம்.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
குறிச்சொற்கள்: அகதி, அகதிகள், அசிங்கம், அடிமை, அடைக்கலம், அடையாளம், அட்டவணை, அணிகலன், அரசியல், அழகி, அழிந்து, அழுக்கு, ஆடை, ஆன்மீகம், ஆபாசம், இளைஞன், இழந்து, உடை, உணர்வு, உயர்த்தி, எங்கள், எடுத்து, எதிர்த்து, எதையும், ஒரு, கடமை, கடவுள், கருணை, கலை, கல்வி, களவாடல், களவானி, கள்ளப்பணம், கவலை, காக்கி சட்டை, காசு, காசை, காப்பகம், காமம், காவல், காவிஉடை, குறைத்து, கையாட்டும், கொன்று, சத்தம், சந்தை, சுகம், சுமை, சுரண்டும், சுவை, சூதாட்டம், செவி, தாங்கும், திட்டம், தீட்டி, துண்டு, துண்டுபோடும், தேசம், நிதிநிறுவனம், நிறை, நிறைக்கும், நிறைத்து, பிள்ளை, புறம், பெட்டி, பெண், பேச்சு, போதும், முகநூல், முகவரி, முடங்கிடும், முயல்கள், வட்டி, விதி, விதை, விதைத்தவன், விலைபொருள், விளையாட்டு, விழும், விவசாயி, வீதி, வெள்ளை, வேலை
அவசியம் என்றில்லாமல்,
அறியப்படாத ஒன்றை,
அனுமானங்களின் அடிப்படையில்,
அதிகமானோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டதே
“கடவுள்”.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
குறிச்சொற்கள்: அடிப்படை, அதிகமானோர், அதிகம், அனுமானங்கள், அறியப்படாத, அவசியம், என்று, ஏற்றுக்கொள்ளுதல், ஒன்று, கடவுள்