RSS

“பெண் பார்த்தல்”

18 ஜூன்

அதிகாலையில் எழுந்து
ஆறுமுறை குளித்து
பத்துமுறை பல்துலக்கி
பாதரசம்தேய உடைமாற்றி
சீராய் தலைசீவி
நல்ல சகுனம் பார்த்து
சொற்ப சொந்தங்களுடன்
பெண் பார்க்க சென்றேன்.

ஊரின் ஓரமாய் ஒத்தவீடு
பார்பதற்கு அழகான ஓட்டுவீடு
பாதையிலே காத்திருந்த தந்தை
முற்றத்திலே வரவேற்ற அன்னை
ஒளிந்து,ஒளிந்து பார்க்கும் தங்கை
ஓரக்கண்ணால் முறைக்கும் தம்பி
ஓயாமல் ஓடும் பாட்டி
தன்கதை சொல்லும் தாத்தா
ஓரமாய் ஒதுங்கிய பூனை
ஓவ்வொன்றும் தனிக் கவிதை.

என்கவிதை எங்கே? என்ற
ஏக்கமும், எதிர்பார்ப்புடனும் நான்
படபடப்பையும், பயத்தையும் வெளிக்காட்டாமல்
வீராப்பாய் அமர்ந்திருந்தேன்.
எங்கிருந்தோ ஒரு குரல்,
“ஏம்பா! பொண்ண கூப்பிடறது!”
சொன்னவன் தெய்வமானான்.

சின்ன இடை கொண்டு
அன்ன நடை நடந்து
தேநீருடன் தேவதை வந்தாள்.
பச்சை நிற பட்டுடுத்தி
கருப்பாய் கலையாய் இருந்தாள்.
எந்த நிறம் இருந்தென்ன?
எல்லா நிழலும் கருமைதானே!.

வெட்கம் வேடிக்கை பார்க்க
நாணம் என்ன விலை?
என்று கேட்டு விட்டு,
கள்ளப் பார்வையில் ஒரு
சின்னச் சிரிப்பை தந்தாய்.
அந்த ஒரு நிமிடப் பார்வை
ஓராயிரம் கதை சொன்னன.

மறக்க முடியாத தருணம்
யாரிடம் இல்லாத வசீகரம்
முன் எப்போதுமில்லாத உணர்வு
வாழ்வு முழுமையடைந்த நிம்மதி
எனைக்கென பிறந்தவளை,
எப்படியோ பார்த்துவிட்ட பரவசம்.

அன்று
நீ விட்டுச் சென்ற கனவுகளை
மட்டும்
பற்றிக் கொண்டு வாழப் பிடிக்கிறது.
நித்தம்,நித்தம் நீங்கா கனவுகளுடன்…
நான்,
தொலைந்து தான் போய்விட்டேன்.
தொடர்ந்து தேடுகிறேன்
தொலைந்ததை மீட்ட அல்ல
தொலைத்ததின் காரணம் காண…

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

10 responses to ““பெண் பார்த்தல்”

 1. vanitha

  18/06/2012 at 17:29

  super palani… now a days its rare… but its wonderful feeling…

   
  • பழனிவேல்

   19/06/2012 at 04:08

   Every on have feeling. But its differ from each one. That is the life.
   தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி தோழி..
   வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
   தங்கள் வருகையை எதிர்பாத்திருப்பேன்…

    
 2. PriyaTamilvanan

  19/06/2012 at 11:23

  உயிரின் உள்ளே ஊடுருவும்
  உன்னத உணர்வை
  அழகாய் வடித்த பழனிவேலுக்கு
  வாழ்த்துக்கள்…

   
  • பழனிவேல்

   19/06/2012 at 12:13

   தங்கள் கருத்திடலால் மனம் குளிர்ந்தேன்.
   வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
   தங்கள் வருகையை எதிர்பாத்திருப்பேன்…

    
 3. கோவை கவி

  27/06/2012 at 20:07

  ”..தொலைந்து தான் போய்விட்டேன்.
  தொடர்ந்து தேடுகிறேன்
  தொலைந்ததை மீட்ட அல்ல
  தொலைத்ததின் காரணம் காண…”

  அது மிக இனிமையாக இருக்கும். இனிய நினைவுகள். ஒரு பரவச அனுபவம். நல்வாழ்த்து.
  வேதா.இலங்காதிலகம்.

   
  • பழனிவேல்

   28/06/2012 at 03:13

   “அது மிக இனிமையாக இருக்கும். இனிய நினைவுகள். ஒரு பரவச அனுபவம். ”
   தாங்கள் சொன்ன இந்த வரிகளிலே தெரிகிறது அதன் மகிமை…
   தங்கள் இனிய கருத்திடலால் மனம் குளிர்ந்தேன்.
   வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

    
 4. vanitha

  08/06/2014 at 14:27

  Hey… Its happen to u va nanbba… Vry nice… After a long time finally u see her… Is it?

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: