RSS

“கோபம்”

18 ஜூன்

 


கோடை மழை பெய்யுமென
கோவணங் கட்டி காத்திருக்க,
கோபம் கொண்ட கார்மேகத்தை
கொளுத்தும் சூரியன் கேட்டதாம்,

நதி வற்றிய கோபமா?
மரம் வெட்டிய கோபமா?
காற்று கெட்ட கோபமா?
கானகம் அழித்த கோபமா?

வயல் குறைந்த கோபமா?
நிலம் விற்ற கோபமா?
மணல் தின்ற கோபமா?

இனம் கொன்ற கோபமா?

கார்மேகம், கனிவுடன் சொன்னதாம்
“உறுப்புகளை அறுத்து,
உயிர் எடுத்த பின்பு
உதவா கோபம் எதற்கு?”.

 

Advertisements
 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

6 responses to ““கோபம்”

  1. vanitha

    18/06/2012 at 17:24

    wow… super way u said… nice mess… but still v destroying…

     
    • பழனிவேல்

      19/06/2012 at 04:06

      ஆம் தோழி. வேட்டை ஆடுதல், மரம் அழித்தல், மணல் கொள்ளை,விளைநிலங்கள் வீட்டு மனையாக்கள் இப்படி என்னென்ன வழிகள் இருக்கோ, அனைத்து வழிகளிலும் வளங்களை அழிக்கிறோம். நம் அடுத்த தலைமுறையின் உரிமைகளை அழித்து உயிர் வாழ்கிறோம். இது கொலையை விட கொடியது.

      தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி தோழி..
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

       
  2. கோவை கவி

    27/06/2012 at 20:02

    உமது சமுதாயக் கோபம் பொங்கும் கவிதை.மிக நன்று. மக்கள் திருந்த வேண்டுமே..
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

     
    • பழனிவேல்

      28/06/2012 at 03:11

      ஆம்.. சரியாக சொன்னீர்கள்…
      தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை எதிர்பாத்திருப்பேன்…

       
  3. Dr.M.K.Muruganandan

    02/07/2012 at 16:18

    அருமையான கவிதை.
    இயற்கையை அழிப்பதால்
    எற்படும் பாதகங்களை எப்பொழுதுதான்
    உணரப் போகிறது இவ்வுலகம்.
    அழிவு சூழ்நதிடுமோ அதன் முன்னர்
    அழிந்திடுமோ நம்முலகு.

     
    • பழனிவேல்

      03/07/2012 at 06:27

      “அழிவு சூழ்நதிடுமோ அதன் முன்னர் அழிந்திடுமோ நம்முலகு.”
      சரியாக சொன்னீர்கள்…
      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி. வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை எதிர்பாத்திருப்பேன்…

       

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: