RSS

“மை”

28 மே

சொல்லுவது உண்மை,
இனமோ பெண்மை,
இறந்தது ஆண்மை,
வண்ணத்தின் ஏழ்மை,
உடையில் வெண்மை,
அழகின் பகைமை,

வயதோ இளமை,
உடலோ வளமை,
பட்டுப்போன செழுமை,
பாவமிந்த பதுமை,
பிரிக்கப்பட்ட பன்மை,
ஒதுக்கப்பட்ட ஒருமை,

சகுனத்தின் உவமை,
வலிகளின் உடமை,
காலத்தின் கொடுமை,
கனவுகளும் கருமை,
காயங்களின் முதுமை,
புறக்கணிப்பதா நேர்மை,

உடைபட்ட உரிமை,
பறிபோன தலைமை,
வாலிபத் தன்மை,
வாட்டும் தனிமை,
வீழ்ந்திட்ட வலிமை,
இறுகிய இனிமை,

மரபுகளின் கயமை,
வாழ்க்கையே வெம்மை,
கொல்லுதடா வெறுமை,
உணர்விலா பொம்மை,
கிடைக்குமா தாய்மை,
மரணமே மகிமை,

விடியாத கிழமை,
அணியாத விழிமை,
இழந்திட்ட வன்மை,
விதவையெனும் அடிமை,
போதுமடா இம்மை,
வேண்டுமா மறுமை?

சமூகமோ பழமை,
இதுவே நிலமை,
எதற்கிந்த பெருமை?
போதுமிந்த பொறுமை,
களைவது கடமை,
அஞ்சுவது மடமை,
மறுமணமே மேன்மை,

எண்ணுவது எளிமை,
களம்வெல்வது கடுமை,
தயக்கங்கள் சிறுமை,
புரிந்திடுவோம் புதுமை,
வெல்லட்டும் வாய்மை,
மலரட்டும் மென்மை.

Advertisements
 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

8 responses to ““மை”

  1. laksh

    29/05/2012 at 09:51

    unthan pulamai
    Ennakku perumai

     
    • பழனிவேல்

      29/05/2012 at 12:45

      தங்கள் மறுமொழி
      எனக்கு வெகுமதி.
      தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      தங்கள் வருகையை எதிர்பாத்திருப்பேன்…

       
  2. கோவை கவி

    29/05/2012 at 19:47

    ”….எண்ணுவது எளிமை,
    களம்வெல்வது கடுமை,
    தயக்கங்கள் சிறுமை,
    புரிந்திடுவோம் புதுமை,
    வெல்லட்டும் வாய்மை,
    மலரட்டும் மென்மை..” —-
    அருமை
    உன் மை
    எழுதியமை
    உண்மை.
    மிக சிறப்பான வரிகள். நல் வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

     
    • பழனிவேல்

      30/05/2012 at 03:31

      தங்கள் வாழ்த்து என்னை வளமாக்கும்.
      தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

       
  3. pavikothai

    07/06/2012 at 09:06

    ஒவ்வொரு வரியும் சொல்லுகிறது கைம்மையின் வாழ்க்கை
    கொடுமையை.
    மலரட்டும் மனிதநேயம்

     
    • பழனிவேல்

      07/06/2012 at 13:10

      தங்கள் கருத்திடலால் மனம் குளிர்ந்தேன்.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக..
      தங்கள் வருகையை எதிர்பாத்திருப்பேன்…

       
  4. vanitha

    13/06/2012 at 17:34

    wow… fantastic lines… i read 2 times to understand the realistic….

     
    • பழனிவேல்

      14/06/2012 at 03:34

      அப்படியா… நல்லது.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக தோழி..
      தங்கள் வருகையை எதிர்பாத்திருப்பேன்…

       

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: