RSS

“நீயடி”

07 மார்ச்

கண்ணியமாய் காதல் செய்தவள் நீயடி,
கொவ்வை இதழ்களால் கொஞ்சியவள் நீயடி,
அன்பிற்கு அகராதி தந்தவள் நீயடி,
காலம்மறந்து கதை பேசியவள் நீயடி,

கவிதைக்கு கரு தந்தவள் நீயடி,
காட்டாறுக்கு கரை போட்டவள் நீயடி,
பிழைகளை சரி செய்தவள் நீயடி,
இலக்கணமாய் இயங்கச் செய்தவள் நீயடி,

இறுகிய மனதை இளக்கியவள் நீயடி,
பாறைக்குள் நுழைந்த தேரையும் நீயடி,
பாய்ச்சலை பக்குவப் படுத்தியவள் நீயடி,
வாலிப-வானுக்குள் வந்த வசீகரநிலா நீயடி,

வில்லேந்திப் பார்வையில் வீழ்த்தியவள் நீயடி,
நித்திரையில் சொப்பனமாய் வாழ்ந்தவள் நீயடி,
கண் மூடினால் கனவாய் நீயடி,
மதி மயக்கிய மங்கையும் நீயடி,

விழிகளுக்கு வலி வழங்கியதும் நீயடி,
துடிக்கும் இதயத்தை தூக்கிலிட்டதும் நீயடி,
கல்லறையை முடிவுரையாய் முடித்ததும் நீயடி,
முடிந்த பின்பு துடிப்பதும் நீயடி.

Advertisements
 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

14 responses to ““நீயடி”

  1. pavikothaipavikothai

    08/03/2012 at 07:04

    படம் ரொம்ப நல்லா இருக்கு….

    ஒவ்வொரு வரிகளும் ரொம்ப அழகு தங்கம்.
    அதிலும் ஒவ்வொரு வரியின் இறுதி “நீயடி” வார்த்தை மிக அருமை தங்கம்.
    நல்ல ஆளுமை
    நல்ல வரிகள்
    நல்ல எதார்த்தம்…..

     
    • பழனிவேல்

      08/03/2012 at 07:13

      கருத்திடல் என்னை மேலும் பரவசமடையச்செய்துள்ளது.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      தங்கள் வருகையை எதிர்பாத்திருப்பேன்…

       
  2. கோவை கவி

    08/03/2012 at 18:14

    அத்தனைக்கும் காரணமானவளைப் பற்றிய விவரங்கள் நன்று..நன்று. பயணம் தொரட்டும். வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

     
    • பழனிவேல்

      09/03/2012 at 03:46

      தங்கள் வருகையும் கருத்திடலும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      உங்கள் வருகையை எதிர்பாத்திருப்பேன்…

       
  3. dhanasekaran10

    10/03/2012 at 06:51

    அருமைக்கவிதை வாழ்த்துகள்.

     
    • பழனிவேல்

      12/03/2012 at 03:45

      தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      உங்கள் வலையை வாசித்து நேசித்தேன். “மிக அருமை”.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

       
  4. pathmasri

    12/03/2012 at 18:36

    அத்தனைக்கும் காரணமானவர் ஒருவர் தானே?
    மிக்க நல்ல வரிகள்….
    ப்ரியமுடன்…
    -சிரபுரத்தான்-

     
    • பழனிவேல்

      13/03/2012 at 03:34

      ஒருவராக இருக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை.
      அந்த ஒருவரை தான் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
      தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

       
  5. vanitha

    14/03/2012 at 16:29

    very nice…

     
  6. Dr.M.K.Muruganandan

    18/03/2012 at 17:49

    அருமையானவளை
    அழகு கவிதையில்
    ஆராதித்திருக்கிறீர்கள்.
    நன்று

     
    • பழனிவேல்

      19/03/2012 at 03:39

      தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      தங்கள் வருகையை எதிர்பாத்திருப்பேன்…

       
  7. laksh

    29/05/2012 at 10:22

    Neeyadi,
    Yaaradi antha Mohini

     
    • பழனிவேல்

      29/05/2012 at 12:54

      தங்கள் கருத்திடலுக்கு இத்தனை நாட்களாக காத்திருந்தேன்.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      தங்கள் வருகையை எதிர்பார்த்து காத்திருப்பேன்…

       

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: