கணிப்பொறியில் கலப்பை பிடித்து களைத்தவர்கள் – நாங்கள்
ஏசிக் காற்றிலும் ஏக்கக்காற்று விடுபவர்கள் – நாங்கள்
தவணை முறையில் தாம்பத்தியம் நடத்துபவர்கள் – நாங்கள்
தண்ணீருக்குள் அழும் கண்ணீர் விடாதவர்கள் – நாங்கள்
வாசனைப் பூச்சுக்களில் வாழ்-நாட்களை வாழ்பவர்கள் – நாங்கள்
உதட்டுச் சாயத்தில் உண்மையை மறைப்பவர்கள் – நாங்கள்
கைப்பேசியில் காதலியின் கன்னக்குழி நனைப்பவர்கள் – நாங்கள்
இருக்கையிலும் இறுக்கத்துடன் இயல்பாய் இருப்பவர்கள் – நாங்கள்
தொலைந்த வாழ்வை தொலைபேசியில் தொடர்பவர்கள் – நாங்கள்
திரவியம் தேட திசைமாறித் திரிபவர்கள் – நாங்கள்
நழுவிடும் நண்பர்களாய் நடித்துப் பழகியவர்கள் – நாங்கள்
மாதக்கடைசியுடன் மல்லுக்கட்டும் மண்ணின் மைந்தர்கள் – நாங்கள்
முதலீடு போடாத வெளிநாட்டின் வேலைக்காரர்கள் – நாங்கள்
இழப்பீடாய் இனிய இளமையை இழந்தவர்கள் – நாங்கள்
அறையப்பட்ட சிலுவைகளை அன்போடு சுமப்பவர்கள் – நாங்கள்
இழப்பில் சுகம் காணும் இறக்கமிலா சூழ்நிலைவாதிகள் – நாங்கள்
உண்மையில் ஏங்கும் ஏழைகளாய் நாங்கள்…?
“நாங்கள்”
14
பிப்
pavikothai
14/02/2012 at 10:49
ஒவ்வொரு வரிகளும் வாழ்கையின் எதார்த்தத்தை சொல்லுகிறது.
இன்னும் எதை இழக்க இப்படி பணம் சம்பாதிக்க ஓடி கொண்டு இருக்கிறார்கள்
பழனிவேல்
14/02/2012 at 13:39
வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி.
மீண்டும் வருக வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும்…
கோவை கவி
15/02/2012 at 06:37
”…வாசனைப் பூச்சுக்களில் வாழ்-நாட்களை வாழ்பவர்கள் – நாங்கள்
உதட்டுச் சாயத்தில் உண்மையை மறைப்பவர்கள் – நாங்கள்
கைப்பேசியில் காதலியின் கன்னக்குழி நனைப்பவர்கள் –”
மிகச் சரியான , உண்மையான வரிகள் சகோதரா. வாழ்த்துகள்.
பழனிவேல்
15/02/2012 at 07:40
வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
Vetrimagal
23/02/2012 at 02:01
அருமை. மனதில் தைத்தது.
அநாயாசமாக சொற்கள் வந்து விழுகிறது.
வணக்கம்.
பழனிவேல்
23/02/2012 at 03:05
தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
உங்கள் வலையை வாசித்து நேசித்தேன். “மிக அருமை”.
கண்டிப்பாக உங்கள் வாழ்த்து என்னை வளமாக்கும்.
வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
laksh
24/02/2012 at 09:52
Its Excellent Palani, I really enjoyed it
All lines are admirable
Rasichu eluthi irrukeenga – naanum rasichen -rasigaiyaaga
Wow even I can write
பழனிவேல்
24/02/2012 at 12:32
தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
கண்டிப்பாக உங்கள் வாழ்த்து என்னை வளமாக்கும்.
வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
கோவை கவி
29/02/2012 at 07:28
I came here and the samme aakkam..
For new aakkam…vaalthukal.
Vetha. Elangathilakam.
பழனிவேல்
29/02/2012 at 07:37
thank you..
suresh
29/02/2012 at 13:53
hi anna this is suresh.., ur junior ..laksh mam gave me intro to this site
ela kavithayum rasichu etharthama eluthirukinga …
பழனிவேல்
01/03/2012 at 03:21
மிக்க நன்றி தோழரே..
தங்கள் வருகையும் கருத்திடலும் என்னை மேலும் பரவசமடையச்செய்துள்ளது.
வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
உங்கள் வருகையை எதிர்பாத்திருப்பேன்…
seenivasan ramakrishnan
05/03/2012 at 06:10
அறையப்பட்ட சிலுவைகளை அன்போடு சுமப்பவர்கள் – நாங்கள்
நிதர்சன வரிகள் மனதில் சுமக்கின்ற பகிர்வு.. பாராட்டுக்கள்..
பழனிவேல்
05/03/2012 at 14:19
தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி தோழரே..
வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
pathmasri
12/03/2012 at 18:40
இயந்திர வாழ்வை இயல்பாகக் கூறியுள்ளீர்கள்…அருமையான வரிகள்…
‘கணிப்பொறியில் கலப்பை பிடித்து களைத்தவர்கள் – நாங்கள்” நாமும் இதைத்தான் செய்கின்றோம்…
ப்ரியமுடன்…
-சிரபுரத்தான்-
பழனிவேல்
13/03/2012 at 03:42
அதனால் தான் ஆதங்கம் தோழரே…
தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
உங்கள் வருகையை எதிர்பாத்திருப்பேன்…
vanitha
05/04/2012 at 16:53
உண்மையில் ஏங்கும் ஏழைகளாய் நாங்கள்…?
really its true friend… wonderful poem to read it again and again…
பழனிவேல்
06/04/2012 at 02:56
இத்தனை நாட்களாக உங்கள் கருத்திடலுக்கு காத்திருந்தேன் தோழி.
தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி தோழி.
வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
தங்கள் வருகையை எதிர்பாத்திருப்பேன்…
Dr.M.K.Muruganandan
23/05/2012 at 15:08
“..தவணை முறையில் தாம்பத்தியம் நடத்துபவர்கள்..”
“..கைப்பேசியில் காதலியின் கன்னக்குழி நனைப்பவர்கள்..”
“..இழப்பில் சுகம் காணும் இறக்கமிலா சூழ்நிலைவாதிகள்..”
ஆம். எவ்வளவு தூரம் உணர்விலா எந்திர மனிதர்களாக மாறிவிட்டோம்.
அருமையான கவிதை.
பழனிவேல்
28/05/2012 at 03:44
ஆம்.எந்திர மயமான வாழ்வில் உணர்விலா எந்திர மனிதர்களாக மாறிவிட்டோம்.
தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.