RSS

“அகதி”

19 ஜன

மரணித்துப்  போயிருக்கலாம்
உயிர் பிடித்து
அகதியாய் வாழ்வதற்கு.
உரிமைக்காக போர் தொடுத்து
உள்ள
உறைவிடமும் பறிக்கப் பட்டோம்.
ரணங்களைக் கண்டு கண்டு
ரௌத்திரம் கற்றுக் கொண்டோம்.
கூரைகள் இல்ல விட்டாலும்
கூட்டுக் குடும்பமாய் வாழக்கற்றோம்.
முள்வேலிக்குள் முடக்கப்பட்ட
முடவர்களாய் முகம் காட்டுகிறோம்.
படுத்து உறங்க பாய்கள் வேண்டோம்
பதுங்கி இறக்க பாடை கேட்கிறோம்.
நாங்கள்
வதைக்கவா விதைக்கப்பட்டோம்.
அல்லது
வஞ்சிக்கவா வாழ்க்கைப்பட்டோம்.
இது என்ன
இயற்கையின் விதியா?
இல்லை அந்த
இறைவனின் பிழையா?

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

15 responses to ““அகதி”

 1. இரகுநாதன்

  19/01/2012 at 14:55

  விருட்சமாக விதைக்கப் பட்டோம். விரைவில் எழுவோம் ஆலமரமாய் ஆணிவேருடன்(எங்கள் தலைவனுடன்).

  தங்களின் மிகச் சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று தோழரே!!!!

  வாழ்த்துக்கள்….

   
  • பழனிவேல்

   19/01/2012 at 17:28

   கண்டிப்பாக…
   விழுந்து கிடந்த பழக்கம் உண்டு
   ஆனால்
   விழுந்தே கிடந்து பழக்கம் இல்லை.
   தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
   வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக…

    
 2. கோவை கவி

  19/01/2012 at 18:16

  ”…..இது என்ன
  இயற்கையின் விதியா?
  இல்லை அந்த
  இறைவனின் பிழையா…”
  இவைகளிற்குத் தான் விடை தெரியவில்லை. வேதனை வரிகள். வாழ்த்துகள்.

  என் வலைக்கு வருகையும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

   
  • பழனிவேல்

   20/01/2012 at 05:03

   தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
   வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக…

    
 3. vanitha

  21/01/2012 at 14:41

  no words to say about this feel… everything changed one day…

   
  • பழனிவேல்

   22/01/2012 at 07:26

   தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி.
   வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக…

    
 4. kothai

  10/02/2012 at 10:29

  nice words brother.

  elluvom medum velvom

   
 5. thenkasi tamil paingili

  01/03/2012 at 17:38

  வணக்கம் நண்பரே தங்களது பதிவினை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியிருக்கிறேன்.நன்றி
  http://blogintamil.blogspot.in/2012/03/blog-post.html

   
  • பழனிவேல்

   02/03/2012 at 03:29

   ஒவ்வொருவரும் தனது கனவுக்கும், கருத்துக்கும் முகவரி தேடித்தேடி முடிந்துவிடுகின்றனர்.
   அந்த வகையில், எங்களுக்கு முகவரியை அறிமுகம் செய்தது மிக்க நன்றி திருமதி தென்காசித் தமிழ்ப் பைங்கிளி அவர்களே.
   உங்கள் ஆக்கமும்,உக்கமும் எங்களை மேலும் வளமாக்கும். அழகிய பணி தொடரட்டும்…

    
 6. கோவை கவி

  01/03/2012 at 19:02

  சகோதரா! இந்தக் கவிதையை – தங்கள் வலையை – தென்காசித் தமிழ் பைங்கிளி அறிமுகப் படுத்தியுள்ளார் வலைச்சரத்தில். வாழ்த்துகள். நானும் கருத்து எழுதியுள்ளேன். தங்கள் கவிதை பற்றி.
  வேதா. இலங்காதிலகம்.

   
  • பழனிவேல்

   02/03/2012 at 03:24

   ஒவ்வொருவரும் தனது கனவுக்கும், கருத்துக்கும் முகவரி தேடித்தேடி முடிந்துவிடுகின்றனர்.
   அந்த வகையில், எனக்கு முகவரியை அறிமுகம் செய்தது தாங்கள்.
   சொல்ல வார்த்தைகள் வரவில்லை, தங்கள் நல் உள்ளத்திற்கு என் மனமார்ந்த நன்றி.

    
 7. Yarl Manju

  03/03/2012 at 14:11

  உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான உங்கள் பங்களிப்பை மட்டுமே கொண்ட சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/03/blog-post_4830.html

   
 8. vanitha

  05/04/2012 at 16:57

  how to say these feelings… incurable pains…

   
  • பழனிவேல்

   06/04/2012 at 03:08

   உங்கள் கருத்திடலுக்கு இத்தனை நாட்களாக காத்திருந்தேன் தோழி.
   தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி தோழி.
   வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
   தங்கள் வருகையை எதிர்பாத்திருப்பேன்…

    

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: