RSS

“தன்னம்பிக்கை”

08 டிசம்பர்

 

விழுவதெனில் விதையாய் விழு
எழுவதெனில் எரிமலையாய் எழு
கருவிலேயே களம்வென்றவன் நீ
கவலைகளை கைக்குட்டையாய் எறி
மகிழ்ச்சியை மனதோடு சேர்
இறக்கத்திலும் இதிகாசம் படை

கவலையில் கண்களை கசக்காதே
கடைசிவரை களம் கண்டிடு
கஷ்டத்திலும் கலகலப்பை மறவாதே
கோழைகளுடன் கைகோர்த்து விடாதே
பாறை என்று பயம் கொள்ளாதே
பாய்ந்து இடுக்குகளில் முளைத்திடு

நிழலுக்கு ஒப்பனையை நிறுத்து
நிஜத்துடன் போராடிப் பழகு
தோல்வி எதுவாயினும் ஏற்றுக்கொள்
தோள்களை வீரத்துடன் தட்டிக்கொள்
துணிவே துணை எனக்கொள்
துணிந்தபின் தூக்குமேடையும் துச்சம்கொள்

உதிர் காலத்தில் உயிர்விட்டால்
வசந்த காலத்தில் வாழவழியேது?
கடிகாரம் சிந்தும் நேரங்களை
நம்பிக்கையுடன் தேடு
கண்ணீர் துளிகளையும்
தண்ணீராய் மாற்றிடு

வெற்றியின் களிப்பு விடியும்வரை
தோல்வியின் மதிப்போ வீழும்வரை
தோல்வியில் ஊரை நீ அறிந்திடு
வெற்றியில் ஊரே உனை அறிந்திடும்.

 

Advertisements
 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , ,

15 responses to ““தன்னம்பிக்கை”

  1. nmsksathish

    08/12/2011 at 05:30

    “உதிர் காலத்தில் உயிர்விட்டால்
    வசந்த காலத்தில் வாழவழியேது? ”

    மிக பிடித்த வரிகள்……..( தன்னம்பிக்கையுடன் )

    வாழ்த்துக்கள்!

     
    • பழனிவேல்

      08/12/2011 at 06:38

      தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி தோழா…
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக…

       
  2. Yagitha

    09/12/2011 at 07:48

    கடிகாரம் சிந்தும் நேரங்களை
    நம்பிக்கையுடன் தேடு

    கண்ணீர் துளிகளையும்
    தண்ணீராய் மாற்றிடு

    ஒவ்வொரு வரிகளும் உயிரோட்டம் தோழா…

    “கருவிலேயே களம்வென்றவன் நீ”

    ஒன்று மட்டும் தன்னம்பிக்கையை நிறப்புகிறது…
    அருமையான படைப்பு நண்பா…
    தொடர்க தோழா…

     
    • பழனிவேல்

      09/12/2011 at 07:58

      மிக்க நன்றி தோழி…
      தங்கள் வருகையும் கருத்திடலும் மேலும் மேலும் உற்சாகம் தருகிறது.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக…

       
  3. Vetha ELangathilakam

    09/12/2011 at 18:28

    ”….வெற்றியின் களிப்பு விடியும்வரை
    தோல்வியின் மதிப்போ வீழும்வரை
    தோல்வியில் ஊரை நீ அறிந்திடு
    வெற்றியில் ஊரே உனை அறிந்திடும்…”
    எல்லா வரிகளும் அருமை சகோதரா! எனக்கு மிகப் பிடித்தது இந்தக் கவிதையும். உங்கள் மழைக் கவிதையில் வந்த மின்னல் வரிகளே விசுவ ரூபமானது இன்று என் வலையில் மின்னலாக. இதை நீங்கள் அறிய வேண்டும். மிக்க நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

     
    • பழனிவேல்

      12/12/2011 at 04:39

      தங்கள் வருகையும் கருத்திடலும் மேலும் மேலும் உற்சாகம் தருகிறது.
      தங்களின் தூண்டுகோல் என்னை மேலும் ஒளிவிட முயற்சிக்கிறது…
      மிக்க நன்றி…
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக…

       
  4. pavikothai

    12/12/2011 at 05:54

    எனக்கு ஒவ்வொரு வரிகளும் மிகவும் பிடித்தது.
    அதில்

    “வெற்றியின் களிப்பு விடியும்வரை
    தோல்வியின் மதிப்போ வீழும்வரை
    தோல்வியில் ஊரை நீ அறிந்திடு
    வெற்றியில் ஊரே உனை அறிந்திடும்” அருமையான வரிகள் ….

     
    • பழனிவேல்

      12/12/2011 at 10:30

      தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி…
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக…

       
  5. Chellamuthu

    13/12/2011 at 13:25

    மிக சிறப்பான வரிகள்….
    உண்மையான தன்னம்பிக்கை தரும் வரிகள்….
    தொடர்ந்திட வாழ்த்துக்கள்….

     
    • பழனிவேல்

      14/12/2011 at 04:03

      தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி தோழா…
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக…

       
  6. Vetha ELangathilakam

    24/12/2011 at 07:45

    இனிய நத்தார் வாழ்த்துகள் உரித்தாகுக.
    வேதா. இலங்காதிலகம்.

     
  7. anbudanjayaramn

    05/01/2012 at 17:15

    ஒவ்வொரு வரியை படிக்கும்போதும்
    மனதிற்கு ஒரு உத்வேகம் தருகிறது ….

     
    • பழனிவேல்

      06/01/2012 at 05:20

      தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி தோழரே…
      தங்கள் வலையை வாசித்து நேசித்தேன்.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக…

       
  8. vanitha

    09/01/2012 at 17:32

    powerful confidence message nanba… keep it up…

     
    • பழனிவேல்

      10/01/2012 at 05:01

      தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி தோழி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக…

       

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: