RSS

“கல்லூரி”

10 நவ்

கனவுகளின் தேசம்
கற்பனைகளின் ஒளிப்பதிவு
கடவுளின் உறைவிடம்
காதலின் கருவறை
கதையளக்கும் கலைக்கூடம்
கவலைகளின் மயானம்

வசந்தம் வீசும் வாலிபச்சோலை
தென்றல் தீண்டும் மலர்வனம்
போதி மரங்களின் கானகம்
பறவைகளின் கூடல்
புள்ளிமான்களின் புகலிடம்
புலிகள் வாழும் கூடாரம்

பட்டாம்பூச்சி பறக்கும் வயசு
பாடங்கள் பதியா மனசு
வரையறை இல்லா நட்பு
வண்ண மயில்களின் அணிவகுப்பு
ஏதுமறியாத மனங்கள்
எதிர்பார்பில்லா குணங்கள்
விழிகளின் விளையாட்டுக்கள்
தரைதவழும் விண்மீன்கள்
எச்சில் பண்டங்கள்
கருவாச்சி காவியங்கள்
கேலிக் கிண்டல்கள்
போலிச் சண்டைகள்
வீண் அரட்டைகள்
கண்ணைச் சொருகும் மதிய வகுப்புகள்
ஓரிரவில் முடிக்கப்படும் ஓராண்டுப் புத்தகங்கள்
ஒரே நிற ஆடை அணிந்த நாட்கள்
ஒவ்வொன்றும் ஒப்பில்லா உயிரோவியம்.

Advertisements
 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

13 responses to ““கல்லூரி”

  1. Yagitha

    11/11/2011 at 11:26

    ஆம் நண்பா…
    கல்லூரி – சொர்க்க பூமி.
    ஒவ்வொரு வரியையும் நன்றாக செதுக்கியுள்ளாய்.
    வாழ்த்துக்கள்…

     
    • பழனிவேல்

      11/11/2011 at 11:29

      உண்மைதான் தோழி…
      தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றிகள் பல…
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக…

       
  2. Vetha ELangathilakam

    12/11/2011 at 17:50

    ”’….கண்ணைச் சொருகும் மதிய வகுப்புகள்
    ஓரிரவில் முடிக்கப்படும் ஓராண்டுப் புத்தகங்கள்
    ஒரே நிற ஆடை அணிந்த நாட்கள்
    ஒவ்வொன்றும் ஒப்பில்லா உயிரோவியம்….”’
    அத்தனையும் அர்த்தம் நிறைந்த வரிகள்! வாழ்த்துகள்! பணி தொடரட்டும்.!

     
    • பழனிவேல்

      13/11/2011 at 07:47

      தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி…
      “உங்கள் வாழ்த்து எங்களை வளமாக்கும்”
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக…

       
  3. Jayaram T

    15/11/2011 at 14:11

    கண்ணைச் சொருகும் மதிய வகுப்புகள்
    ஓரிரவில் முடிக்கப்படும் ஓராண்டுப் புத்தகங்கள்…
    anaivarum payanapatta anubavam ithu..

    kavithai arumai nanabarae..

     
    • பழனிவேல்

      15/11/2011 at 14:35

      தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி…
      உங்கள் வலையை வாசித்து, நேசித்தேன்… மிக அருமை…
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக…

       
  4. vanitha

    15/11/2011 at 17:27

    ஓரிரவில் முடிக்கப்படும் ஓராண்டுப் புத்தகங்கள்

    Its exactly suit for me….

    Its nice memorable moments for me…. thank u for ur nice poem….

     
  5. jeevitha

    23/11/2011 at 05:37

    ஏதுமறியாத மனங்கள்
    எதிர்பார்பில்ல குணங்கள் ..

    very nice lines na…

     
    • பழனிவேல்

      23/11/2011 at 07:02

      தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி தோழி…
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக…

       
  6. vanitha

    08/06/2014 at 13:03

    Wow… Very nice… Each and every lines no words to say this…. I m reallly vry happy banna… Nice poem…

     
    • பழனிவேல்

      10/06/2014 at 04:48

      You people are the seed for this poem. I am a lucky guy for got friends like u in my collage.
      So you are also have this credit.
      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

       

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: