RSS

“என்ன?”

12 செப்

தாராளமயமாக்கல் தந்தது என்ன?
தகவல் தொழில்நுட்பத்தில் புரட்சி கண்டு,
அடுத்தவீட்டின் தகவலை அறுத்து விட்டு,
அயல் நாட்டுக்கு அரைநொடியில் அழைக்கிறோம்.

வணிகமயமாக்கல் வளர்த்தது என்ன?
விவசாயம் வீழ்த்தப்பட்டு,
பணப்பயிரை பயிரிட்டு,
பட்டினிச் சாவுக்கு உரமிட்டோம்.

சந்தைப் பொருளாதாரம் சந்தித்தது என்ன?
கணிவுடன் கடன் அட்டை தந்து,
கட்ட வழியின்றி,
கடைத் தெருவில் நிறுத்தின.

சரி,
கொடுத்ததுதான் என்ன?
“பேராசை”.

அடுத்தவரை நேசிக்க நேரமின்றி
அடுக்குமாடி கட்ட யோசிக்கிறோம்.
ஆதாயம் தேடித்-தேடித் தான்
அன்பைக் கூட அளிக்கிறோம்.
உறவுகளில் உண்டான அன்பை
உயிரற்ற பொருட்களில் உண்டாக்கினோம்.
உறவுகள் நிறைந்திருந்த வீட்டில்
ஊமைப் பொருட்களை நிறைத்தோம்.
உணர்வுகளை உடைத்து விட்டு
உயிருள்ள பிணமாய் வாழ்கிறோம்.

கொடுத்ததை விட
இழந்தவை தான் அதிகம்.
இன்றைய தலைமுறையே
இப்படி இருண்டிருக்க,
அடுத்த தலைமுறையின்
அவலநிலை தான் “என்ன?”

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

21 responses to ““என்ன?”

  1. ம.இரகுநாதன்.

    13/09/2011 at 04:36

    இதிலிருந்து நீ சொல்ல வருவது என்ன?. இன்றைய உலகின் ஆணிவேர் தாராளமயமாக்கல் அதை சந்தைபடுத்துதலும் தான். அது இல்லையென்றால் இந்நேரம் நீயும் நானும் படித்துவிட்டு, வேலை வாய்ப்பு அலுவலகத்தின் கடிதத்தை எதிர்நோக்கி காத்திருப்போம். முதலில் நாம்(ன்) படித்து இருப்பேனா என்பதே உறுதி இல்லை நண்பா.

    மனித மாண்புகள் குறைந்து விட்டன என்பதனை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதற்கு இது மட்டும் காரணி அல்லவே.

     
    • பழனிவேல்

      13/09/2011 at 04:44

      உண்மை நண்பரே…
      ஆனால், இந்தியா ஒரு விவசாய நாடு.
      இந்த தாராளமயமாக்கலும் அதை சந்தைபடுத்துதலும் நம் முதுகெலும்பை முறித்ததுதான் என் பதிவு.

       
    • பழனிவேல்

      13/09/2011 at 08:43

      கொடுத்ததை விட இழந்தவை தான் அதிகம்.

       
  2. ம.இரகுநாதன்.

    13/09/2011 at 09:28

    நாம் கவனிக்காமல் இழந்தது தான் விவசாயம். விவசாயம் மட்டுமல்ல, நமது கலாச்சாரமும் கூட. இதை ஏன் சீனர்கள், ஜப்பானியர்கள் சொல்லவில்லை. ஏனென்றால் அவர்கள் உழைப்பையும், தாய் மொழியையும் விட்டு கொடுக்காததால் தான். ஆனால் இங்கே அப்படி இல்லையே.

     
    • பழனிவேல்

      13/09/2011 at 10:41

      மறுக்கமுடியாத உண்மை.
      கவனித்தோ, கவனிக்காமலோ
      இழந்து விட்டோம்
      வீறுகொண்ட விவசாயத்தையும்
      விலைமதிப்பில்ல கலாச்சாரத்தையும்…
      நம் தலைமுறையே இப்படி என்றால்
      அடுத்த தலைமுறை?

       
  3. Vanitha

    13/09/2011 at 15:30

    all for Urbanization… wt to do…

     
  4. Benjamin Paulraj

    16/09/2011 at 08:54

    கொடுத்ததை விட
    இழந்தவை தான் அதிகம்.
    இன்றைய தலைமுறையே
    இப்படி இருண்டிருக்க,
    அடுத்த தலைமுறையின்
    அவலநிலை தான் “என்ன?”

    How you are saying.. pre generation also had lost few things from their pre generation as we lost now …

    I ll say this is not something we lost… This is called “Revolution”.

     
    • பழனிவேல்

      16/09/2011 at 09:19

      Oh… This is called “Revolution”.
      I completely agree with you.But i register, we missing something each and every generation.
      Why? As specially love is losing each generation. That is my thought…
      அன்பு எனும் ஆன்மா அழுது கொண்டிருக்கிறது.

       
  5. கோவை கவி

    01/10/2011 at 05:16

    ”……கொடுத்ததை விட
    இழந்தவை தான் அதிகம்.
    இன்றைய தலைமுறையே
    இப்படி இருண்டிருக்க,
    அடுத்த தலைமுறையின்
    அவலநிலை தான் “என்ன?”….”’

    சரியான சிந்தனை தான்…வாழ்த்துகள் சகோதரா!

     
    • பழனிவேல்

      01/10/2011 at 06:21

      “உங்கள் வாழ்த்து எங்களை வளமாக்கும்”
      வாசித்தற்கும், நேசித்தற்கும் நன்றிகள் பல…

       
  6. பாலு

    04/10/2011 at 14:53

    அன்புள்ள நண்பா ,
    உங்கள் கவிதை மிக அருமை
    உங்கள் சிந்தனை நன்று
    இதை நான் ஒப்புகொள்கிறேன் .
    அன்பு நண்பன் திரு ம.இரகுநாதன்.அவர்களுக்கு
    இக்கவிதையில் நண்பர் பழனிவேல் சொல்ல விளைவது
    மனிதன் மனிதனை மதிப்பது இல்லை பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு உள்ளான் என்பதாகும் என நினைகிறேன்.
    அதற்காக(பணம்) அவன் எதையும் செய்ய விழைகிறான் என்பதாகும் .

     
  7. முனைவர் இரா.குணசீலன்

    06/10/2011 at 06:08

    அடுத்தவரை நேசிக்க நேரமின்றி
    அடுக்குமாடி கட்ட யோசிக்கிறோம்.

    அழகாகச் சொன்னீர்கள்……………………………..

     
    • பழனிவேல்

      06/10/2011 at 06:37

      தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி நண்பரே…
      உங்கள் வலையை வாசித்து நேசித்தேன்.
      மீண்டும் வருக…வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும்

       
  8. pathmasri

    10/10/2011 at 02:55

    அழகிய வரிகள்…..இழந்தவை அதிகம் தான்,ஆனாலும் காரணங்களைக் குறைசொல்கிறோமே தவிர எதையும் தக்கவைக்க முயற்சி செய்ததில்லையே!
    ப்ரியமுடன்,
    சிரபுரத்தான்.

     
    • பழனிவேல்

      10/10/2011 at 05:14

      ஆம் உண்மை தான் நண்பரே…
      இன்மேல்-ஆவது தக்கவைக்க முயற்சி செய்வோம்.
      வாசித்தற்கும், நேசித்தற்கும் நன்றி தோழரே…

       
  9. Jeevitha

    11/10/2011 at 11:31

    உறவுகளில் உண்டான அன்பை
    உயிரற்ற பொருட்களில் உண்டாக்கினோம்.
    உறவுகள் நிறைந்திருந்த வீட்டில்
    ஊமைப் பொருட்களை நிறைத்தோம்.
    உணர்வுகளை உடைத்து விட்டு
    உயிருள்ள பிணமாய் வாழ்கிறோம்.

    Nice lines na………

     
    • பழனிவேல்

      11/10/2011 at 12:23

      வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி தோழி…
      மீண்டும் வருக…வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும்…

       
  10. pavikothai

    28/11/2011 at 06:29

    உண்மையில் பணத்தால் பெற்றவைகள்
    வசதியும், ஆடம்பர பொருட்கள் மட்டுமே…

    இழந்தவைகள்

    அன்பு, அரவணைப்பு, உறவுகள்,
    ஓடி ஆடி விளையாடல்,
    அண்டை வீட்டு மனிதர்களின் அறிமுகம்
    இன்னும் இன்னும் எத்தனையோ………….

    superb thinking… nice wording.

     
    • பழனிவேல்

      28/11/2011 at 10:34

      வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி…
      மீண்டும் வருக…வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும்…

       

Vanitha -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி