RSS

“அப்பா”

24 ஆக

அம்மா வயிற்றில் கருவூன்ற
அளவற்ற ஆனந்தம் அடைந்திட்டாய்.

ஆண்மகன் என்னை  ஈன்றெடுக்க
அன்றே மீசை முருக்கிட்டாய்.

அடிமேல் அடிஎடுத்து  நான்வளர
அணு அணுவாய் ரசித்திட்டாய்.

அண்ட அகிலமும் எனைக்காண
அழகாய் ஆடை அணிவித்தாய்.

எட்டி உதைத்ததை எண்ணி
மார்தட்டி இறுமாப்பு கொண்டிட்டாய்.

ஆயிரம் சுமைகள் நீசுமந்து
அருமை மகனை வளர்த்திட்டாய்.

என் தேவை நிறைவேற்ற
உன் தேவை குறைத்திட்டாய்.

தடுமாறி தயங்கிய காலத்தில்
தோழனாய் தோள் கொடுத்திட்டாய்.

தடம்மாறி தவித்த தருணத்தில்
தட்டி தன்னம்பிக்கை தந்திட்டாய்.

தோல்வியில் துவண்டு அழுகையில்
தோள் சுமந்து நின்றிட்டாய்.

வேலையின்றி வெட்டியாய்  சுற்றினாலும்
வேட்கையுடன் வெண்சாமரம் வீசிட்டாய்.

வானகம் விஞ்சி வாழ்ந்தாலும்
உத்தமனாய் உயிர்வாழக் கற்பித்தாய்.

என்பெயர் முன்னும் பின்னும்
முத்திரையில் முகவரியை பதித்திட்டாய்.

போலியில்லா உன்முகம் கண்டாலே
பொலிவுடன் பொதியினை சுமப்பேனே!

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

22 responses to ““அப்பா”

  1. Saranya (@charanyams)

    25/08/2011 at 06:38

    அருமையான கவிதை! ரொம்ப நல்லாருக்கு டா.. அப்பா photo வும்..

     
    • பழனிவேல்

      25/08/2011 at 07:48

      நன்றி தோழி…
      இது 10-15 வருடங்களுக்கு முன் எடுத்தது.
      எனக்கும் மிகவும் பிடித்த புகைப்படம்.

       
  2. lakshmi

    25/08/2011 at 11:25

    Kavithai super palani – Lucky u got an inspirational father Envy ur father and u

     
  3. Yagitha

    25/08/2011 at 14:07

    அய்யோ… பழனியா இது?
    என்ன அருமையா அனுபவித்து, ஆராய்ந்து, அழகா எழுதியிருக்க…
    எப்புடி இப்புடி?
    Appa photo-than hi-light palani. Tamilnadu hero pola irukkaru…

     
  4. Arun

    25/08/2011 at 16:29

    ya very nice man

     
  5. pavikothaithai

    26/08/2011 at 05:52

    என் அன்பு தமையனே

    உனக்காக பாராட்ட எனக்கு தோன்றிய வரிகள்

    இப்போது தான் என் தந்தையின்
    அன்பும் கண்டிப்பும் அறிவுரையும் உன்னை எவ்வளவு
    பக்குவ படுத்தி இருக்கிறது என்று என்னால் பார்க்க முடிகிறது

    நான் உண்மையில் பெருமை படுகிறான்
    அதே ஆலமரத்தடியில் நானும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்பதில்

     
  6. Ramesh

    26/08/2011 at 07:26

    நல்ல வரிகள் பழனி கவிதைக்கு ஏற்றாற்போல் படம் மிகவும் அருமை

     
  7. Vanitha

    29/08/2011 at 17:42

    These lines exactly suit for most of the boys…
    In this me also lucky for being a daughter of my father…
    tnk u for remembering all my father activities…

     
  8. பாலு

    04/10/2011 at 15:08

    அன்பு நண்பா பழனி,
    கவிதை மிக அருமை.

     
  9. கோவை கவி

    09/10/2011 at 13:55

    ”…என்பெயர் முன்னும் பின்னும்
    முத்திரையில் முகவரியை பதித்திட்டாய்….”’
    அப்பா அப்பா தான் – அம்மா அம்மா தான் யாராலும் இதை நிறைக்க முடியாது. வாழ்த்துகள்.

     
    • பழனிவேல்

      10/10/2011 at 05:09

      “அப்பா அப்பா தான் – அம்மா அம்மா தான்” ஆம் உண்மை தான்…
      வாசித்தற்கும், நேசித்தற்கும் நன்றிகள் பல…
      “உங்கள் வாழ்த்து எங்களை வளமாக்கும்”

       
  10. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா

    22/10/2011 at 16:21

    ஆயிரம் சுமைகள் நீசுமந்து
    அருமை மகனை வளர்த்திட்டாய்……
    என்பெயர் முன்னும் பின்னும்
    முத்திரையில் முகவரியை பதித்திட்டாய்……
    அருமை பழனிவேல் அவர்களே !!!

     
    • பழனிவேல்

      23/10/2011 at 08:19

      தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி தோழரே…
      மீண்டும் வருக…வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும்…

       
  11. Priya cheran

    05/06/2012 at 14:18

    Superb lines palani… i miss my dad at all times… I love u so much dad…

    My dad is best for me.. like for everyone…

     
    • பழனிவேல்

      05/06/2012 at 14:26

      தங்கள் கருத்திடலால் மனம் குளிர்ந்தேன்.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக தோழி..
      தங்கள் வருகையை எதிர்பாத்திருப்பேன்…

       

Arun -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி