RSS

“நாகரீகம்”

08 ஜூலை

மேய்ச்சலுக்கு மாடு கட்டி,
ஆட்டுக்கு புல்லறுத்த,
காலம் மாறி
ஓய்வின்றி உழைக்கும்
நாகரீக உலகமானது.

மின்வெட்டு வேளையில் மட்டுமே
விண்வெளி காண்கிறோம்.

காசு கொடுத்தால் கடவுளையும்
கருவறைக்குள் காட்டுகிறோம்.

ஆபரணம் கூட்டி, ஆடைகளை குறைத்து
அழகை கெடுத்தோம்.

உறவையும், உணர்வையும் உன்னத
விஞ்ஞானத்தால் சுருக்கினோம்.

கருத்தடை செய்யப்பட்டு அறுவடை
செய்து குவிக்கிறோம்.

பிதைத்த ஆறாவது நாளில் அடுத்ததை
அதன்மேல் பிதைக்கிறோம்.

சவப்பெட்டி மூடிய மறுகணம்
உயில்பெட்டி திறக்கிறோம்.

இறப்புகளை இன்று ஒரு
சடங்காய் மாற்றினோம்.

பல சடங்குகளை பெரும்
விழாவாய் போற்றினோம்.

நாகரீகம் என்ற போர்வையில்
பாதை மாறி போகிறோம்.

நாகரீக முகமூடிக்குள் நசுக்கிவிட்டோம்
வசந்தம் வீசும் வாழ்நாட்களை.

நாகரீக நாடகத்தை களைத்து
நலம்கொண்ட நம் கலாச்சாரம் காப்போம்.

Advertisements
 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

14 responses to ““நாகரீகம்”

  1. kothai

    08/07/2011 at 05:26

    i also in that world.its nice

     
  2. nmsksathish

    08/07/2011 at 08:31

    Nice one..

     
  3. இரகுநாதன்

    08/07/2011 at 14:12

    என்னை நினைத்து நானே வெட்கபடுகிறேன். ஏனென்றால் நானும் இதில் ஒருவன் தான். என் உறவுகளை கொன்று அழித்த போது எதுவும் செய்ய முடியாதவன்….
    அதை இப்பொழுது காணொளியாக கூட என்னால் பார்க்க முடியவில்லை. அவ்வளவு கொடுரம்…

     
    • பழனிவேல்

      08/07/2011 at 14:27

      உண்மை நண்பரே…
      உதிரம் கொதிக்கும் நிகழ்வு…
      என் இனம் என் முன்னே கொல்லப்பட்ட கொடூரம்…

       
  4. Vanitha

    08/07/2011 at 16:35

    Its true nanba… but very hard to come out…

     
    • பழனிவேல்

      09/07/2011 at 10:54

      நாகரீகம் என்பது இன்று தவறான பாதையில் பயணிக்கிறது. அதனை உணர்ந்து நடக்க வேண்டும்.

       
  5. Yagitha

    12/07/2011 at 07:18

    “உறவையும், உணர்வையும் உன்னத
    விஞ்ஞானத்தால் சுருக்கினோம்.”

    and

    “கருத்தடை செய்யப்பட்டு அறுவடை
    செய்து குவிக்கிறோம்.”

    and

    “இறப்புகளை இன்று ஒரு
    சடங்காய் மாற்றினோம்.

    பல சடங்குகளை பெரும்
    விழாவாய் போற்றினோம்.”

    these lines are excellent da…
    I cant belive this much talent u have it. I am really very proud for having friend like u. Keep it up da

     
  6. கோவை கவி

    15/07/2011 at 20:35

    மின்வெட்டு வேளையில் மட்டுமே
    விண்வெளி காண்கிறோம்.

    nalla vatikal…..

     
  7. கோவை கவி

    21/10/2011 at 07:04

    ”….ஓய்வின்றி உழைக்கும்
    நாகரீக உலகமானது.
    நாகரீக முகமூடிக்குள் நசுக்கிவிட்டோம்
    வசந்தம் வீசும் வாழ்நாட்களை.

    நாகரீகம் போகும் போக்கை அழகாகக் கூறியுள்ளீர்கள் சகோதரா.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.woedpress.com

     
    • பழனிவேல்

      23/10/2011 at 08:47

      வாசித்தற்கும், நேசித்தற்கும் நன்றிகள் பல…
      “உங்கள் வாழ்த்து எங்களை வளமாக்கும்”

       

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: