வெற்றியின் களிப்பின் போது
மௌனம் என் கடிவாளம்.
மடையிலா மகிழ்ச்சியின் போது
மௌனம் என் அளவுகோல்.
துயரத்தில் துவளும் போது
மௌனம் என் மருந்து.
உரிமையுள்ளோர் உத்தரவிடும் போது
மௌனம் என் சம்மதம்.
தனிமையில் தள்ளாடும் போது
மௌனம் என் ஊன்றுகோல்.
இதயத்தில் சுமைகூடும் போது
மௌனம் என் சுமைதாங்கி.
உள்ளத்தை உறுத்தும் போது
மௌனம் என் வடிகால்.
காதலியின் உரையாடலின் போது
மௌனம் என் மொழி.
உண்மையானோர் பிரியும் போது
மௌனம் என் வலி.
ஏமாற்றம் ஏற்படும் போது
மௌனம் என் சிந்தனை.
எதிரிகள் ஏளனம்செய்யும் போது
மௌனம் என் கேடயம்.
இன்னல்கள் எதிர்கொள்ளும் போது
மௌனம் என் ஆயுதம்.
மண்ணுள் மறையும் போது
மௌனம் என் மரணம்.
ஒரு வார்த்தை சொல்லும்
ஒராயிரம் விளக்கம் மௌனம்.
வலிமைமிக்க மௌனம்.
வன்முறைமிக்க மௌனம்.
ramesh
27/06/2011 at 07:31
கேள்வி கேட்கும் போது
மௌனம் என் பதில்
பழனிவேல்
27/06/2011 at 08:02
அருமை நண்பரே…
இது கேள்வியா? பதிலா?
Vanitha
27/06/2011 at 14:38
silent is nice thing in our life… its teach lesson for life…
பழனிவேல்
27/06/2011 at 14:41
Correct… Most Powerful Weapon in this world.
கோவை கவி
30/06/2011 at 07:06
Nalla vtikal meaning full.
பழனிவேல்
30/06/2011 at 08:28
வாசித்தற்கும், நேசித்தற்கும் நன்றி …
Yagitha
12/07/2011 at 07:32
“ஒரு வார்த்தை சொல்லும்
ஒராயிரம் விளக்கம் மௌனம்.
வலிமைமிக்க மௌனம்.
வன்முறைமிக்க மௌனம்.”
Final conclusion is excellent…
I like this very much…
பழனிவேல்
12/07/2011 at 07:41
நன்றி தோழி.