RSS

“மழை”

26 மே

இயற்கை எனும்
வாலிபக் கலைஞனின்
தூரிகைச் சிதறல்கள்.

கார்மேகம் களவியலில் கருவுற்று
பெற்றெடுத்த
வெண்முத்துப் பிள்ளைகள்.

காரிருள் கறையை நீக்கி
வெண்மொட்டு மேகமாய்
மாற போடப்படும் ஒப்பனை.

வான்வெளியின் வர்ணஜாலம்.
வான்முகிலின் நிராகரிப்பு.

இணையா வானையும்-மண்ணையும்
இணைக்கும் நீர்க்கயிறு.

உன்னால் கிறுக்கப்பட்ட
கிறுக்கலாய்
மின்னல்.

உனக்கான எச்சரிக்கை
விளக்காய்
வானவில்.

வான் மேகத்தின் எச்சம்
செம்மண் தரையின் அமிர்தம்.

வான் அழுகின்ற போது
எங்கள் வாழ்க்கை குளிர்கிறது.

வடிகட்டி போகும் உனை விடுத்து
வழிமிஞ்சி நிற்பதை பங்கு பிரிக்கிறோம்.

விரயமாகும் உனை விதைத்திட்டு
விவசாயின் விதையை முத்தாய் மாற்றிடு.

கருவேலங் காட்டுக்கும் கஞ்சி காட்டுவான்
கண்ணீரையும் கரைக்கும் இந்த கயவன்.

இயற்கையோடு இதயத்தை இணைக்க
உன்னில்
நித்தம் நனைய நினைக்கிறேன்.

ஆயிரம் ஆனந்தம் அளித்தாலும்
பல முகம் பிழையாக்கும் மழை.

இந்த நிறமற்ற மழை
பலருக்கும்
பிழையாகும் மழை.

Advertisements
 

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

12 responses to ““மழை”

  1. Yagitha

    27/05/2011 at 05:01

    ” வடிகட்டி போகும் உனை விடுத்து
    வழிமிஞ்சி நிற்பதை பங்கு பிரிக்கிறோம்.

    விரயமாகும் உனை விதைத்திட்டு
    விவசாயின் விதையை முத்தாய் மாற்றிடு.”
    இந்த வரிகள் மிகவும் அருமை.

    நானும் மழையை ரசித்தேன்…

     
    • manidam

      27/05/2011 at 05:05

      நன்றி… “மழை”-யை வாசித்தற்கும், நேசித்தற்கும்…

       
  2. இரகுநாதன்

    27/05/2011 at 12:35

    “கருவேலங் காட்டுக்கும் கஞ்சி காட்டுவான்
    கண்ணீரையும் கரைக்கும் இந்த கயவன்.”

    அருமையான வரிகள்.

    வாழ்த்துக்கள்…

     
    • பழனிவேல்

      27/05/2011 at 13:00

      நன்றி நண்பரே …
      மீண்டும் வருக…
      வாசிப்பதற்கும், நேசிப்பதற்கும்.

       
  3. Vani Smile

    19/06/2011 at 16:49

    in ur poem itself i learn many tamil words…
    i like each and every words in this poem…
    best is
    இணையா வானையும்-மண்ணையும்
    இணைக்கும் நீர்க்கயிறு.

     
    • பழனிவேல்

      20/06/2011 at 05:00

      நன்றி தோழி…
      மீண்டும் வருக…
      நேசிப்பதற்கும், வாசிப்பதற்கும்.

       
  4. Yagitha

    12/07/2011 at 07:56

    “வடிகட்டி போகும் உனை விடுத்து
    வழிமிஞ்சி நிற்பதை பங்கு பிரிக்கிறோம்.

    விரயமாகும் உனை விதைத்திட்டு
    விவசாயின் விதையை முத்தாய் மாற்றிடு.”

    உண்மையான வரிகள்…
    உரமிடும் வரிகள்…

    எப்புடி?

     
  5. Yagitha

    12/07/2011 at 07:57

    இந்த நிறமற்ற மழை
    பலருக்கும்
    பிழையாகும் மழை.

    Nice lines…

     
  6. வேதா. இலங்காதிலகம்.

    21/10/2011 at 17:16

    அருமையான கருத்துடைக் கவிதை. அத்தனை வரிகளும் மிகச் சிறப்பு. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

     
    • பழனிவேல்

      22/10/2011 at 04:48

      உங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      மீண்டும் வருக…வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும்…

       

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: