நீ தான் என் முதற் சொந்தம்
நீ சொல்லி தெரிந்தது பிற பந்தம்
பனி,குளிர்,மழை,வெயில் என நீ தாங்கி
கருவறையில் என்னைக் காத்தவளே
என் உதை நீ தாங்கி
அந்த எமனையும் வென்றவளே
இறுதியாய் என்னை ஈன்றாலும்
இன்றுவரை ஈரம் குறையல்லையே
உன் உதிரம் உருக்கி
என் பசி போக்கியவளே
நான் பெய்த மூத்திரத்தில்
உன் முகம் துடைத்தவளே
உன் பெயர் ஊர் கேட்க
அம்மா எனச் சொன்னேனே
நீ கொடுத்த முத்தங்கள்
நெஞ்ஞாங்கூட்டில் இன்றும் இனிக்கிறதே
உன் மடி நான் சாய்ந்தால்
என் தலை முடி கோதியவளே
அப்பா அடிச்சா வலிக்குமுன்னு
வலிக்கா பாணத்தை தொடுத்தவளே
ஊரே எனை ஏசினாலும்
உனக்கு ராசா நான்தானே
நீ பாடு பட்டது
நான் வாங்க பட்டமானது
உன்னப் பத்திக் கவி பாட
இந்தக் காகிதமும் பத்தலையே
உன் நினைவை நான் முடிக்க
இந்தக் காலமும் மீளாதே
உன் கடனை நான் முறிக்க
என் எழு ஜென்மம் போதாதே
உன்னப் பத்தி நான் சொன்னா
உண்மை சுடுமடி, உதிரம் கொதிக்குமடி
உன தருமை நான் நினைச்சா
உள்ளம் கனக்குதடி, உயிரே வலிக்குதடி
திரைக் கடல் ஓடி திரவியம் தேட
உனைக் காப்பகம் சேர்த்தேனே
இந்தப் பாவம் நான் கழிக்க
மகளாய் மறுபிறவி நீ பிறப்பாயா?
உனை உச்சரிக்கும் போதெல்லாம்
உலகமே உன்னுள் அடங்குமடி
………… ” அம்மா “…………
சமர்ப்பணம் :
எனதருமை அம்மாவுக்கு,
அருமை மகனாய்,
அன்புப் பரிசாய்…
Yagitha
11/05/2011 at 05:43
Nice… Excellent… No words to describe… Hats off to mum.
Chellamuthu
11/05/2011 at 09:38
Very nice palani
manidam
11/05/2011 at 10:24
Thank you chellamuthu
Ragunathan
16/05/2011 at 02:26
I’m blank.
manidam
16/05/2011 at 04:29
Why boss?
Vani Smile
19/06/2011 at 16:58
reading this poem, i feel of my mom…
automatically water flow from my eyes…
பழனிவேல்
20/06/2011 at 05:02
“அம்மா”
வாழும் தெய்வம்.
வாழவைக்கும் தெய்வம்.
Priya cheran
05/06/2012 at 14:00
No words to say.. Its make me cry…
photo is nice, where did u taken this… ur cute mom..
பழனிவேல்
05/06/2012 at 14:10
பண்ணாரி அம்மன் கோவிலில் அழகுத் தெய்வத்துடன் அன்பு அம்மா..
வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி தோழி..
வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.