RSS

“சித்திரை திருநாள்”

14 ஏப்

ஆதவன் அனலாய் ஆர்ப்பரிக்க
சிங்கம் வாழ்தரையில் சித்திரை பூக்க
உழைப்பால் உயரும் தமிழரின் புகழ் பெருகட்டும்.

சிப்பி அனைத்திலும் முத்திராது எனினும்
தமிழன் முத்திரை பதிக்கா இடமுண்டோ?

திரைக் கடல் ஓடி திரவியம் தேடிக் கொணர்ந்து
எந்தன் தாய்மண்ணை தங்கமாய் மாற்றுவோம்.

எந்நாடு சென்றாலும், எத்தனை மொழி பயின்றாலும்,
எந்தன் தாய்மொழி மறவோம்.

வள்ளுவனின் கூற்றாய், சோழரினின் வம்சமாய்,
ஒளவை-வாக்காய் எங்கள் வரப்பை உயர்த்துவோம்.

விடிய மறுத்து இப்புவி நின்றாலும்,
விண்ணையும் பிளந்து விடித்திருவோம்.

பொன் வேண்டாம், பொருள் வேண்டாம்,
பலம் வேண்டாம், படை வேண்டாம்,
மனிதம் போற்றும் மனிதர் போதும்,
என் இனம் என்றும் வெற்றி வாகை சூட…

என் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Advertisements
 

குறிச்சொற்கள்: , , , , ,

9 responses to ““சித்திரை திருநாள்”

  1. Yagitha

    15/04/2011 at 07:25

    Can u explain “ஒளவை-வாக்காய் எங்கள் வரப்பை உயர்த்துவோம்”?

     
    • manidam

      15/04/2011 at 07:34

      அரசன் மகனை வாழ்த்தவந்த ஒளவை “இளவரசே வாழ்க பல்லாண்டு!” என்று வாழ்த்தவில்லை! அரசே உன் “வரப்பு உயர்க!” என்று வாழ்த்தினார்.
      காரணம்,

      வரப்புயர நீருயரும்!
      நீருயர நெல்லுயரும்!
      நெல்லுயுர குடியுயரும்!
      குடியுயர கோனுயர்வான்!.

       
      • Yagitha

        15/04/2011 at 07:39

        இவ்வளவு அர்த்தமா இந்த ஒரு வார்த்தைக்கு? அற்புதம்…

         
  2. Vani Smile

    19/06/2011 at 17:16

    i learn many tamil words from this poem…

    சிப்பி அனைத்திலும் முத்திராது எனினும்
    தமிழன் முத்திரை பதிக்கா இடமுண்டோ?

    its very correct …

     
  3. கோவை கவி

    30/10/2011 at 08:06

    ”…சிப்பி அனைத்திலும் முத்திராது எனினும்
    தமிழன் முத்திரை பதிக்கா இடமுண்டோ?…”
    mikka sirappana vatikal. mann vaasanai …I can see…
    vaalthukal..

     
    • பழனிவேல்

      03/11/2011 at 04:57

      தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி…
      மீண்டும் வருக…வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும்…
      “உங்கள் வாழ்த்து எங்களை வளமாக்கும்”

       
  4. Vetha ELangathilakam

    08/11/2011 at 07:59

    எந்நாடு சென்றாலும், எத்தனை மொழி பயின்றாலும்,
    எந்தன் தாய்மொழி மறவோம்.

    worthful line….congratz

     
    • பழனிவேல்

      08/11/2011 at 10:27

      நன்றி…
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக…
      “உங்கள் வாழ்த்து எங்களை வளமாக்கும்”

       

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: