RSS

Monthly Archives: பிப்ரவரி 2011

“முத்தம்”

முத்தம்
காதலின் ஆன்மா
அன்பின் அடையாளம்
ரசனையின் மிகைப்பாடு
உணர்வின் வெளிப்பாடு

முத்தம்
உதடுகள் குவியும்
நரம்புகள் புடைக்கும்
இதயங்கள் இணையும்
கவலைகள் மறக்கும்

முத்தம்
சிந்தையில்
எச்சம் அமிர்தமாகும்.

முத்தம்
உதடுகள்
சந்திக்கும் வைபவம்.

முத்தம்
மழையில் குளித்தாலும்
தாகம் தீர்க்காத உப்பு நீர்.

முத்தம்
கொடுக்கையில் பரவசம்
பெறுகையில் பேரின்பம்

முத்தம்
தடுத்துப் பார்க்காதீர்
கொடுத்துப் பாருங்கள்
உலகம் உங்கள் கையில்.

Advertisements
 

குறிச்சொற்கள்: , , , , ,

“இது காதல் அல்ல”

ஆசை வெட்கமறியாது போல,
வெட்கமின்றிக் கேட்டு விட்டேன்.
ஆசை பூர்த்தியானால் பூர்த்தியாளர்
நினைவலை வராது என நினைத்தாயோ?

உனைக் காணத் துடிக்கும் மனம்,
தீப்பிடித்து எரிகிறது தினம் தினம்.
அதைக் கொஞ்சிப் போவாயா? அல்லது கிள்ளிப் பார்ப்பாயா?
கருணை காட்டா விட்டாலும், காயப்படுத்திப் பார்க்காதே!

உயர் திணையாய் ஊர் சுற்றியவனை,
அஃறிணையாய் அடக்கி விட்டாய்.
வதைக்கும் மனம் பெண்களுக்கு உண்டு
என்றறிந்த உண்மை உன்னால் உணர்ந்தேன்.

சோகத்திற்கு நீ மொத்த சொந்தக்காரியடி
நீயிருந்த திசை என் புவி-ஈர்ப்பு விசையடி
மறக்கவோ, மறுக்கவோ முடியாதவள் நீயடி
கண்ணீர் கூட வெந்நீராய் சுடுகிறதடி.

உனக்காக காத்திருந்த அந்த நசிந்த நிமிடங்கள்,
வெறுக்க மனமில்லாமல் மறக்க முயற்சிக்கிறேன்
என் காதல் கூட இன்று கவலைக்கிடமானது
நீ கூறிய “இது காதல் அல்ல” என்ற வார்த்தையால்…

ஆசை வெட்கமறியாது போல,
வெட்கமின்றிக் கேட்டு விட்டேன்.
இது காதல் அல்ல.

 

குறிச்சொற்கள்: , , , , , ,

“பத்தினி”

சம்பாதிக்க ஆயிரம் வழியாம்.
ஆம். உண்மை தான்.

யாருக்கு…?
பணம் படைத்தவனுக்கும், படித்தவனுக்கும்.

படிக்காத ஏழைக்கு…?

ஆண் எனில், பிறர் வீட்டு சுவர் குதிப்பான்.
பெண் எனில், தன் வீட்டு படி கடப்பாள்.
இங்கு பலம் பார்த்து வினை மாற்றம் பெற்றது.

பலர் ஆசை நிறைவேற
தன் ஆசை துறந்தவள் “பத்தினி”-தானே?

 

குறிச்சொற்கள்: , , , ,

“விடுதலை”

கல்லறை வீட்டின் கடைசி திருமகன்
நெஞ்சில் பாரம் கண்ணில் குரோதம்

சிறு விதையாயினும் பெரும் பூமியை பிளக்கும்
சிறு எறும்பாயினும் பெரு உணவை சுமக்கும்

விழுந்து கிடந்த பழக்கமுண்டு
விழுந்தே கிடந்து பழக்கமில்லை

என்ன விலையேனும் கொடுப்போம்
என்னையே தந்திதை மீட்போம்

சொந்த மண்ணுக்கு உரமாயினும்
மனிதம் போற்றும் வரலாறு படைப்போம்

போரெனில் புலியாய் பிறப்போம்
விடுதலை வேட்கை தணிப்போம்.

 

குறிச்சொற்கள்: , , , ,

 
%d bloggers like this: