RSS

Monthly Archives: ஜனவரி 2011

“ரசனை”

சுவரெங்கும் பென்சில் கிறுக்கல்
அங்குமிங்குமாய் சிதறிய விளையாட்டுப் பொருட்கள்
அடையாளம் தெரியாமல் கிழித்தெறியப்பட்ட அட்டைப்பெட்டி
கடுகடுத்துப் போனேன் …
உணவைக் கசக்கிப் பிசைந்து சட்டையில் பூசியவாறு
என் கண் பார்த்து சிரிக்கும், என் மகன்-
சொல்லும் கவிதைகள் நூறு.
ரசனையை ரசிக்க வைத்ததே இவன்தானே!!!

Advertisements
 

குறிச்சொற்கள்: , , ,

“பெயர் சூட்டு”

உனக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கும்
கவலைகளுக்கும் நீயே காரணம்.
இங்கு கடவுளுக்கும் பங்கில்லை,
கத்தரிக்காயுக்கும் இடமில்லை.
பிறகு ஏன் இதற்கு
“நேரம்”
“விதி”
“தலையெழுத்து”
என்று பெயர் சூட்டுகிறாய்…

 

குறிச்சொற்கள்: , , , ,

“மறதி”

அன்பே,
உனை மறக்க நினைத்த ஒவ்வொறு
முறையும் தோற்று விடுகிறான்…
எதை மறப்பது என்று தெரியாமல்?
உனை மறக்க முடியாது என்று புரியாமல்…

 

குறிச்சொற்கள்: ,

 
%d bloggers like this: