RSS

Monthly Archives: திசெம்பர் 2010

“புத்தாண்டு”

நாளைய விடியல் புத்தாண்டு.

பழைய ஞாபகங்களோடும்,
புதிய நாட்களோடும்,
ஆசை, கனவு, லட்சியம்
அனைத்தும் உயிர் பெறட்டும் ,

புதிதாய் பிறப்போம்,
கடுஞ்சொல் பேசோம்,
பகைமை மறப்போம்,
அச்சம் தவிர்ப்போம்,

நாணயமிக்க நல்லோராய் வாழ்வோம்,
அன்பால் இப்-புவியை அளப்போம்,
வீரியமிக்க நல்-விதையை விதைப்போம்,
புதிய மனிதனாய் பயணிப்போம்…

Advertisements
 

குறிச்சொற்கள்:

“தாய் மண்”

உணவுப் பயிராம் நெல், கரும்பு, வாழையை விடுத்து

பணப் பயிராம் சணல், ரப்பரை பயிரிட்டு பணமாக்கினேன்

என் தாய் மண்ணை பிணமாக்கினேன்…

 

குறிச்சொற்கள்: , , , ,

“காரணம் கேட்கப் பிடிக்காமல்”

நீ காட்டிய பாதையில் – ஏன்

என்னை மட்டும் விட்டுச்சென்றாய்?
காரணம் கேட்கப் பிடிக்கவில்லை…
அதனாலோ காரணம் சொல்ல மறுக்கிறாய்.
பாதை தெரியாதவனுக்கு பாதை காட்டிச் சென்றாய்
முள்ளோ, மலரோ பயணிக்க தயாராகிவிட்டேன்

காரணம் “காரணம் கேட்கப் பிடிக்காமல்

 

குறிச்சொற்கள்: , ,

“வாழ்க்கை”

வாழ்க்கை வாழ்ந்தவனுக்கு சாதனை

ஆனால் வாழ்பவனுக்கோ சோதனை

அச்-சோதனை கண்டு கலங்கிவிடாதே

தோழமை உண்டு மறந்துவிடாதே…

 

குறிச்சொற்கள்: , ,

“ஏதுமில்லை”

கொடுப்பதற்கு என்னிடம் ஏதுமில்லை

உன்னால் உடைந்த மனதைத் தவிர…

அதையும் கொடுக்க தயக்கம் ஏதுமில்லை

உடைந்ததை கொடுக்கின்றோம் என்பதைத் தவிர…

 

குறிச்சொற்கள்: , ,

“புதுப்பிறவி”

சுகமாய் நீ வர எண்ணி
கத்திக் கூவாமல், கத்தியோடு போராடி
சுதந்திரமாய் வெளி வந்தாய்…

ஈரைந்து மாதத்தின் வலியை
இருநொடியில் மறைத்தாய்…

கண் மூடிய நிலையிலும்
கரு விழிகள் உனைத் தேடின…

உடல் எனை மறத்தாலும்
எனதுயிர் நினைத்தது உன்னை…

நான் மறு பிறவி எடுத்தாலும்
உன் “புதுப்பிறவி”-க்கு ஈடாகாது கண்ணே !!!

 

குறிச்சொற்கள்: , ,

“மனிதம் வெல்வோம்”

முதியோர் குடியிருப்பு
மாணவி கற்பழிப்பு
சிறுவன் கழுத்தறுப்பு
வரதட்சணை பெண்-எரிப்பு

பாமரன் தீக்குளிப்பு
வீதியில் துகிலுரிப்பு
தண்டவாளம் தகர்த்தெடுப்பு
பாலங்கள் வெடிவைப்பு

நல்லோர் சிலையுடைப்பு
ஈழத்தில் படையெடுப்பு
பெண் சிசு கரு-அழிப்பு
ஆபாசப் படமெடுப்பு

ஊழலுக்கு வெண்- உடுப்பு
கள்ளக்காதல் அதிகரிப்பு
உறுப்புகள் அறுத்தெடுப்பு
சீ… என்னடா இந்த மனிதப்பிறப்பு

யாவரும் காதலிப்போம்…
யாவரையும் நேசிப்போம்…
வன்முறை கொல்வோம்…
மனிதம் வெல்வோம்…

 

குறிச்சொற்கள்: , , , , ,

 
%d bloggers like this: