RSS

“முதுகெலும்பு”

Muthukelumpu

உண்ணாவிரதம் இருந்தோம்
உங்களுக்கு தெரியலப்போல…

மண்டை ஓடு அணிந்தோம்
மனுவைக்கூட வாங்கவல்ல…

மண்சட்டி ஏந்தி நின்னோம்
மயிராக்கூட மதிக்கல…

சடலமா படுத்து,சங்கு வேற ஊதினோம்
சந்திக்ககூட நேரமில்ல…

கழுத்துல கயித்தைக் கட்டி,கத்தினோம்
காது கொடுத்துக்கூட  கேக்கல…

பாதி தாடி,மீசையை மழித்தோம்
பார்த்து பேசக்கூட மனசுவல்ல…

எலிக்கறியையும் தின்னோம்
ஏலெடுத்துக்கூட பாக்கல…

எப்படி,எப்படியோ போராடினோம்
எட்டிப்பார்க்கக்கூட தோணல…

அன்னமிட்டவன் அம்மணமாய்…
அரசாங்கமும் அவ்வண்ணமாய்…

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , ,

“கர்ப்பிணி”

Karpini
மணம் முடிந்த பின்பு
மனம் மாறிப் போனாய்…
முகமற்றோரின் வசவொலியில்
மொழி மறந்து நின்றாய்…
மூடநம்பிக்கை என்றாலும் கூட
மூத்தோர் சொற்க்கேட்டாய்…
மௌனத்தின் கேள்விகளுக்கு
மருத்துவத்தில் விடை தேடினாய்…
மாதவிடாய் மாறிய காலங்களில்
மரத்தடியில் மன்றாடினாய்…
மாதம் தள்ளிப் போனதும்
மகிழ்ச்சியில் திண்டாடினாய்…
முடி முதல் அடி வரை
மாற்றம் பல கண்டாய்…
முகத்தின் முகவரி மாற
முழுமதியாய் உ(க)ருக்கொண்டாய்…
மரணவலி தரும் என்றாலும் கூட
மயக்கம் அதில் கொண்டாய்…
மிகைப்படுத்தி சொல்லவேண்டுமெனில்
மன்னவன் எனைக்கூட இதில் மறந்தாய்…
 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“மணநாள் வாழ்த்து”

 

MananaalValthu

உணர்வினை மதித்து
உண்மையாய் வாழ்வோம்…
உரிமைகளுக்கு இடம்தந்து
உயிர்ப்போடு வாழ்வோம்…
வஞ்சகம் இல்லாமல்
வளமாய் வாழ்வோம்…
கவலைகளை கலைந்து
கைகோர்த்து வாழ்வோம்…
இருப்பதை வைத்து
இனிமையாய் வாழ்வோம்…
இலக்கண இல்லறமாய்
இயற்கையோடு வாழ்வோம்…
அளவோடு பெற்று
அறிவோடு வாழ்வோம்…
அகிலம் போற்ற
அன்பாய் வாழ்வோம்…

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

“குறையா ? – குற்றமா?”


என் மேல் உள்ள காதலை
எப்படியும் உணர்த்தி விடுகிறாய்.
எப்படியாவது நானும்
உணர்ந்து விடுகிறேன்.

ஆனால்
உன் மேல் உள்ள தீராக் காதலை
உணர்த்த முயற்சித்து முயற்சித்து
இன்றுவரை தோற்றவனாய்
உன் முன் நிற்கின்றேன்…

இது
என்னுள் உள்ள குறையா?
இல்லை
எந்தன் இயலா குற்றமா?

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

“ஆண் பார்த்தல்”

88a-AanPaarthal

படபடக்கும் கைகள்,
தடுமாறும் கால்கள்,
அலைபாயும் கண்கள்,
வறட்சியாய் உதடுகள்,
குளறும் வார்த்தைகள்,
இடமாற தவிக்கும் இதயம்,
பதில்கேக்க துடிக்கும் காதுகள்,
முடிவை எதிர்நோக்கும் முகம்,
கனவுகளுடன் காத்திருக்கும் உயிர்…

ஆம், ஆ(பெ)ண்-பார்த்த போது
அடியேனின் அனுபவம்.

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“களவானி”

Kalavani

 

காலடிச் சத்தம் கேட்டு
கணவனைக் கண்டறியும்
களவானி.

கணிப்பொறியிலோ, கைபேசியிலோ
காலம் கழிக்கும்
கலைவாணி.

கடைக்கண் பார்வையிலேயே
கட்டளைகளை கடத்திடும்
காரியவாதி.

கதிரவன் உதித்தபின்பும்
கண்விழிக்க காரணம்தேடும்
கடமைக்காரி.

காய்கறி இல்லையென்றாலும்
கடுகிலே சமைத்திடும்
கைகாரி.

கனவையும்,கண்ணீரையும்
கவலையின்றி வெளிப்படுத்தும்
கன்னிகை.

காதலையும், காமத்தையும்
கணைகளாய் தாக்கம்
கவிதை.

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“வியாபாரக்கிருமி”

வியாபாரக்கிருமி

பல் துலக்க Pepsodent
பாத்திரம் கழுவ Vim Bar

கை கழுவ Dettol
கக்கூஸ் கழுவ Harpic

தரை துடைக்க Lizol
துணி துவைக்க Surf excel

தண்ணீர் குடிக்க Aquaguard
வாய் கொப்பளிக்க Colgate Plax

கண்ணாடி துடைக்க Colin
சமயலறை துடைக்க Mr.Muscle

இயற்கை நாசினிகளாம் மஞ்சள்,வேம்பு,சாணம்,சாம்பல்,எலுமிச்சை – யை கொன்றன
இந்த கிருமிநாசினி எனும் வியாபாரக்கிருமி.

இன்றைய கிருமிகளைக் கொல்ல பல நாசினிகள்,
இந்த வியாபாரக்கிருமியைக் கொல்ல ஏது நாசினி?

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

 
%d bloggers like this: